அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பெற விண்ணப்பிக்கலாம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, April 28, 2022

அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பெற விண்ணப்பிக்கலாம்!

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத் தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கட்டப் பட்டுள்ள அடுக்குமாடி குடியி ருப்புகளில் வீடு பெற விரும்புப வர்களிடம் இருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இது குறித்து, மாவட்ட ஆட்சி யர் பெ.குமாரவேல்பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு நகர்ப்புற வாழ் விட மேம்பாட்டு வாரியத்தின் வேலூர் கோட்டம் சார்பில், பிர தமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், வேலூர் மாவட் டம், குளவிமேடு, டோபிகானா, கன்னிகாபுரம் ஆகிய பகுதிக ளில் 704 அடுக்குமாடி குடியிருப் புகள் கட்டி முடிக்கப்பட்டுள் ளன. மேலும், கரிகிரி, தொரப் பாடி,பத்தலபல்லி ஆகிய பகுதிக ளில் 864 குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இவற்றில் 590 வீடுகள் ஒதுக் கீடு செய்யப்பட உள்ளது. மீத முள்ள 114 குடியிருப்புகள், தற் போது பணிகள் நடைபெற்று வரும் 864 குடியிருப்புகள் சேர்த்து மொத்தம் 978 குடி யிருப்புகளுக்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒரு குடியிருப்புக்கான செலவுத் தொகையில் மத்திய, மாநில அர சின் மானியத் தொகை போக மீதமுள்ள தொகையை பயனா ளிகள் செலுத்த வேண்டும். இதில், குளவிமேடு பகுதிக்கு ரூ.1.80 லட்சம், டோபிகானா பகுதி ஒன்றுக்கு ரூ. 1.85 லட் சம், டோபிகானா பகுதி 2-க்கு ரூ.1.44 லட்சம், கன்னிகாபுரம் பகுதிக்கு ரூ. 1,82,616, கரிகிரி பகு திக்கு ரூ. 1.55 லட்சம், தொரப் பாடி பகுதிக்கு ரூ. 2.38 லட்சம், பத்தலபல்லி பகுதிக்கு ரூ. 1.53 லட்சம் பயனாளிகள் செலுத்த வேண்டும்.

நிபந்தனைகளுக்கு உட்பட்டு இத்திட்டப் பகுதிகளில் குடியி ருப்பு தேவைப்படுவோர் ‘இந் தியாவில் எனது பெயரிலோ, எனது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ மனையோ, வீடோ இல்லை' என்றும், 'எனது மாத வருமானம் ரூ.25,000 கீழ் உள் ளது' எனவும் உறுதியளிக்க வேண்டும். பயன்பெற விரும்பு வோர் குடும்பத் தலைவர், குடும் பத் தலைவி ஆகிய இருவரின் ஆதார், வங்கிக் கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும்,பத் தலபல்லி பகுதிக்கு பேர்ணாம் பட்டு வட்டாட்சியர் அலு வலகத்தில், மே 5-இல் நடை பெற இருக்கும் முகாமிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனு அளித்துப் பயன்பெறலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.