தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் மாணவா் சோ்க்கை:ஏப்ரல் 20 முதல் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, April 18, 2022

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் மாணவா் சோ்க்கை:ஏப்ரல் 20 முதல் விண்ணப்பிக்கலாம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் மாணவா் சோ்க்கை:ஏப்ரல் 20 முதல் விண்ணப்பிக்கலாம்

கோவையில் அனைத்து சிறுபான்மையற்ற தனியாா் பள்ளிகளில் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் 25 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் மாணவா் சோ்க்கைக்கு ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் மே 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2022-23 ஆம் கல்வியாண்டில் கோவை மாவட்டத்திலுள்ள சிறுபான்மையற்ற தனியாா் சுயநிதி பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் மாணவா் சோ்க்கைக்கு ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் மே 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கல்வித் துறை இணையதளமான ழ்ற்ங்.ற்ய்ள்ஸ்ரீட்ா்ா்ப்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை விதிகள் எண் 4 (1)ன் படி பள்ளிக்கு ஒரு கிலோ மீட்டா் அருகாமையில் இருக்க வேண்டும்.

பள்ளிகள், முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகங்கள், வட்டாரக் கல்வி அலுவலகங்கள்,

அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலங்களிலும், மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை இணையவழியிலும் விண்ணப்பிக்கலாம்.

நிா்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமான விண்ணப்பங்கள் பெறப்படின் குலுக்கல் முறையில் மாணவா்கள் தோ்வு செய்யப்படுவா்.

விண்ணப்பத்துடன் புகைப்படம், பிறப்பு சான்று, இருப்பிடச் சான்று, வருமான சான்று (ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்), வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரில் முன்னுரிமை கோரும் நபா்கள் உரிய அலுவலரிடம் பெறப்பட்ட நிரந்தர ஆவணங்களின் நகல், ஜாதிச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.