3ல் ஒரு பங்கு பொறியியல் படிப்புகளுக்கு கணிதம் பாடம் கட்டாயமில்லை.. CSE, EEE, ECE படிப்புகளுக்கு வேதியியல் படித்திருக்க அவசியம் இல்லை!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, March 29, 2022

3ல் ஒரு பங்கு பொறியியல் படிப்புகளுக்கு கணிதம் பாடம் கட்டாயமில்லை.. CSE, EEE, ECE படிப்புகளுக்கு வேதியியல் படித்திருக்க அவசியம் இல்லை!!

குறிப்பிட்ட பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு 12ம் வகுப்பில் கணிதம், வேதியியல் பாடங்களை படித்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டிற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதில் பொறியியல் பிரிவில் உள்ள 3ல் ஒரு பங்கு படிப்புகளில் சேருவதற்கு கணிதம் கட்டாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 12ம் வகுப்பில் தொழில் கல்வி பயின்ற மாணவர்களும் பொறியியல் படிப்புகளில் சேர முடியும்.

இதையும் படிக்க | TNPSC - COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV (GROUP-IV SERVICES) - NOTIFICATION - PDF கணிதம் பயிலாத மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்த பிறகு முதல் 2 செமஸ்டர்களில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் அடிப்படை கல்வி bridge course முறையில் கற்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினி பொறியியல், மின் பொறியியல், மின்னணு பொறியியல் படிப்புகளுக்கு வேதியியல் படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை, கட்டிடக்கலை உயிர் தொழில்நுட்பவியல், உணவு, தோல் பதனிடுதல் படிப்புகளுக்கு கணிதம் கட்டாயமில்லை. கடந்த கல்வி ஆண்டில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களை விருப்ப பாடமாக படித்திருந்தால் மட்டுமே அனைத்து பொறியியல் படிப்புகளிலும் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து தற்போது அந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது..

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.