ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.04.2022 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 28, 2022

ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.04.2022

ரிசர்வ் வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?
 
இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 303 அதிகாரி கிரேடு 'ஏ' மற்றும் 'பி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுரகின்றன.  

விளம்பர எண். 2 & 3/2021-22

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: அதிகாரி கிரேடு "பி" (நேரடி நியமனம்) பொது - 2022 - 
காலியிடங்கள்: 238

பணி: அதிகாரி கிரேடு "பி" (நேரடி நியமனம்)  பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆய்வுத் துறை - 2022
காலியிடங்கள்: 31

பணி: அதிகாரி கிரேடு "பி" (நேரடி நியமனம்) - புள்ளிவிவரம் மற்றும் தகவல் மேலாண்மைத் துறை - 2022
காலியிடங்கள்: 25
பணி: உதவி மேலாளர் - ராஜ்பாஷா - 2021 
காலியிடங்கள்: 06

பணி: உதவி மேலாளர்  "பி & எஸ்ஓ" - 2021
காலியிடங்கள்: 03

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம், புள்ளியியல், கணித பொருளாதாரம் போன்ற பிரிவில் பட்டம் பெற்றவர்கள்,  பொருளாதாரத்தில் முதுநிலைப் பட்டம், எம்பிஏ, பிஜிடிஎம் முடித்தவர்கள், இந்தியில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன், இந்தியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிப்பெயர் செய்ய திறன் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். முழுமையான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ. 44,500 - 89,50 வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு நிலையிலான ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.850, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். உதவி மேலாளர் - ராஜ்பாஷா - 2021, 
உதவி மேலாளர்  "பி & எஸ்ஓ பணிக்கு அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களும் ரூ.600 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். வங்கி ஊழியர்கள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 
விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.04.2022

ஆன்லைனில் முதல் தாள் தேர்வு நடைபெறும் தேதி: 02.07.2022

இரண்டாம் தாள் தேர்வு நடைபெறும் தேதி:  06.08.2022

மேலும் விவரங்கள் அறிய https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/ADVTGRBDRDEPRDSIM2022D061270C271048D78D61F523DBA1AD6A.PDF என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.