தொடக்க கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கு PG பதவி உயர்வு வழங்க வேண்டும் என Tngtf சார்பில் வழங்கப்பட்ட மனுவின் சுருக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, February 10, 2022

தொடக்க கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கு PG பதவி உயர்வு வழங்க வேண்டும் என Tngtf சார்பில் வழங்கப்பட்ட மனுவின் சுருக்கம்

தொடக்க கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கு PG பதவி உயர்வு வழங்க வேண்டும் என Tngtf சார்பில் வழங்கப்பட்ட மனுவின் சுருக்கம்

தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை நடுநிலைப்பள்ளிகளிலும் 6,7,8 வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதிலாக பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 100 நாள் 27.06.2003ல் ஆணையிடப்பட்டது. இதன்படி கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய/நகராட்சி/ மாநகராட்சி அரசு நடுநிலைப்பள்ளிகளிலும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாகவும், பதவி உயர்வு மூலமாகவும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

தொடக்க கல்வித் துறையைத் தவிர, பள்ளிக்கல்வித்துறை ஆதிதிராவிடர் நலத்துறை கள்ளர் சீரமைப்பு மாநகராட்சிகளில் நியமிக்கப்பட்ட அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் அவர்கள் கல்வித் தகுதியின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. தொடக்கக் கல்வித் துறையில் நியமனம் செய்யப்பட்ட பட்தாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு 2007ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து கேட்டு வருகிறது. இதே கோரிக்கைக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் 2009ஆம் ஆண்டு எமது அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது . ( W.P NO 8211/2009 ) இந்த வழக்கில் கடந்த 12-2-2021 அன்று நீதியரசர் சுரேஷ் குமார் அவர்கள் இறுதி தீர்ப்பில் தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி சீற்ப்பு விதிகளின் கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மேல்நிலைக் கல்வி சார்நிலைப்பணி சிறப்பு விதிகளில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களில் 5% உள் ஒதுக்கீடு செய்து பதவி உயர்வு வழங்கிட பரிந்துரை செய்துள்ளார்.

மேலும் தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் 024036/இ1/2017 நாள் 16.02.2018 இன் படி தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 17 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு என்று இருப்பதாலும்,கற்பித்தலில் அனுபவமுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கினால், மாணவர்களின் கல்வித் தரம் உயரும் என்றும் தெரிவித்தை நீதியரசர் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் மேல்நிலை சார்நிலைப்பணி விதிகளில் இடமில்லை என்று கூறி பதவி உயர்வு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது‌ அதேசமயம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சுப் பணியாளர்களில் முதுகலை ஆசிரியர் தகுதி பெற்றவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 21 நாள் 02.11.2011இன் படி ஒவ்வொரு ஆண்டும் 2 % பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இளநிலை உதவியாளர்களாக பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் பல நிலைகளை கடந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு பெற்று வருகிறார்கள்

ஆனால் தொடக்கக் கல்வித் துறையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு எழுதி முறையான கல்வித் தகுதி பெற்று பல ஆண்டுகள் ஆசிரியப் பயிற்சி அனுபவம் கொண்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது .

தற்போது முதுகலை ஆசிரியர் நேரடி பணி நியமனத்தில் வழங்கப்படும் 50% இல்,சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மேல்நிலைக் கல்வி சார்நிலைப்பணி சிறப்பு விதிகள்( பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண் 720 நாள் 28.-04-1981)வேண்டிய திருத்தங்கள் செய்து, தொடக்கக் கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கி பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.இதனால் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

தொடக்கக் கல்வித் துறையில் பதவி உயர்வு வாய்ப்பு இல்லாமல் உரிய கல்வித் தகுதியுடன் 16 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி கொண்டிருக்கும் ஆசிரியர்களின் நலன் கருதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் 2009ஆம் ஆண்டு எமது அமைப்பின் சார்பில் வழக்கு பெறப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் ( W.P NO 8211/2009 ) தொடக்கக் கல்வித் துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு பெறும் வகையில் புதிய அரசாணை வெளியிட தங்களை பணிவோடு கேட்டுக்கொள்கி ஹ்றோம்.

பீ.பேட்ரிக் ரெய்மாண்ட் (பொதுச்செயலாளர்)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.