அரசு பள்ளி மாணவர்களிடம் தேர்வு கட்டணம் வசூலிக்கக் கூடாது - உயர்நீதிமன்ற இடைக்கால தடை - பள்ளிக்கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு!
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் ந.க.எண் 051748/கே/இ3/2026 நாள் 30.10.2026 - சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை W.P(MD)No.30461 of 2026 இடைக்கால தடை ஆணை 23.10.2026 - VI முதல் XII வரை அரசு / அரசு நிதியுதவி பள்ளி மாணவர்களிடம் தேர்வுக்கான வினாத்தாள் கட்டணம் மற்றும் முறையற்ற கட்டணம் வசூலிக்கக் கூடாது - CEO, HM-களுக்கு உத்தரவு.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை -06
ந.க.எண் 051748/கே/இ3/2026 நாள்: 30.10.2026
பொருள்: பள்ளிக்கல்வி - அரசு / அரசு நிதியுதவிப் பள்ளி மாணவர்களிடம் தேர்வுக்கான வினாத்தாள் கட்டணம் வசூலிப்பது சார்ந்து.
பார்வை: சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு W.P (MD)No.30461 of 2026, இடைக்காலத் தடை ஆணை நாள்:23.10.2026
🔥 உயர்நீதிமன்ற இடைக்கால தடை ஆணை - முழு விவரம்
பார்வையில் காணும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு W.P (MD)No.30461 of 2026, இடைக்காலத் தடை ஆணை நாள்:23.10.2026 இன் படி அரசு / அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் VI முதல் XII வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் தேர்வுகளுக்கான வினாத்தாள் கட்டணம் மற்றும் எவ்வித முறையற்ற கட்டணங்கள் வசூலிக்கக்கூடாது என இடைக்காலத் தடை ஆணை பெறப்பட்டுள்ளது.
"There shall be an order of Interim injunction"
📢 பள்ளிக்கல்வி இயக்குநரின் அதிரடி உத்தரவு
இதனடிப்படையில் அனைத்து அரசு / அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் VI முதல் XII வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் தேர்வுக்கான வினாத்தாள் கட்டணம் மற்றும் எவ்வித முறையற்ற கட்டணங்கள் வசூலிக்கக்கூடாது என பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு: இடைக்காலத் தடை ஆணை நகல்
பள்ளிக்கல்வி இயக்குநர்
30.10.26
பெறுநர்:
அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்.
🙏 அண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களது வலைதளப் பக்கத்தை எப்போதும் பின்தொடருங்கள்!
🔔 பள்ளிக்கல்வி | அரசு உத்தரவு | உயர்நீதிமன்ற செய்திகள் - Follow செய்யுங்கள்


No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.