NHIS 2026: கணவன் - மனைவி இருவருக்கும் மருத்துவக் காப்பீடு பிடித்தம் செய்யப்படுகிறதா? IFHRMS-இல் தவிர்க்கும் வழிமுறைகள்
அரசுப் பணியில் உள்ள கணவன் - மனைவி இருவருக்கும் NHIS 2026 பிடித்தம் செய்யப்படுகிறதா? IFHRMS தளத்தில் எளிய 5 படிநிலைகள் மூலம் ஒருவருக்கு பிடித்தம் செய்வதையும், முன்னாள் ராணுவத்தினருக்கு விலக்கு பெறுவதையும் உறுதி செய்யலாம்!
NHIS 2026: கணவன் - மனைவி இருவருக்கும் மருத்துவக் காப்பீடு பிடித்தம் செய்யப்படுகிறதா? IFHRMS-இல் தவிர்க்கும் வழிமுறைகள்
NHIS 2026: கணவன் - மனைவி இருவருக்கும் மருத்துவக் காப்பீடு பிடித்தம் செய்யப்படுகிறதா? IFHRMS-இல் தவிர்க்கும் வழிமுறைகள்!
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் 2026 முதல் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (NHIS 2026) தொடர்பான பிடித்தங்கள் IFHRMS தளத்தில் தொடங்கப்பட்டுள்ளன. அரசுப் பணியில் கணவன் மற்றும் மனைவி இருவருமே பணிபுரியும் பட்சத்தில், இருவரின் ஊதியத்திலும் NHIS பிடித்தம் செய்யப்படுவதைத் தவிர்த்து, மூத்தோருக்கு மட்டும் பிடித்தம் செய்து இளையவருக்கு விலக்கு பெற IFHRMS-இல் மேற்கொள்ள வேண்டிய எளிய வழிமுறைகள் கீழே தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. தம்பதியர் IFHRMS தளத்தில் பின்பற்ற வேண்டிய எளிய படிநிலைகள் (Steps):
Step 1 (Employee ID பெறுதல்): உங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியரின் கணவர் அல்லது மனைவியின் IFHRMS Employee ID-ஐப் பெற்றுக் கொள்ளவும்.
Step 2 (Family Details & Edit):
• Initiator Login -> eServices -> Human Resource -> Employee Profile -> Update GO Update Details என்ற பகுதிக்குச் செல்லவும்.
• Effective Date மாற்றத் தேவையில்லை. 'Go' கிளிக் செய்து Employee Number உள்ளீடு செய்து 'Continue' கொடுக்கவும்.
• குடும்ப உறுப்பினர்களின் விவரங்களில் (Family Details) பெயர்கள் சரியாக உள்ளனவா எனப் பார்க்கவும். ஒரே பெயர் இரண்டு முறை இருந்தால் அதை Delete செய்ய முடியாது; Pencil ஐகானைக் கிளிக் செய்து Update செய்ய வேண்டும்.
• ஏற்கனவே பதிவேற்றம் செய்த கணவன்/மனைவி பெயரில் Start Date மற்றும் End Date இருக்கும். End Date காலியாக இருந்தால் (Blank) அன்றைய தேதியைக் கொடுத்து Review மற்றும் Submit செய்யவும்.
Step 3 (Approver Approval): சமர்ப்பிக்கப்பட்ட விவரங்களை Approver ID மூலம் உள்நுழைந்து Approve செய்ய வேண்டும்.
Step 4 (Spouse Employee ID இணைத்தல்): • மீண்டும் Initiator Login -> eServices -> Human Resources -> Update GO Update Details சென்று 'Continue' கொடுக்கவும்.
• Family Member Name தேர்வு செய்து, 'Govt. Employee' என்ற விருப்பத்தில் 'Yes' தேர்வு செய்து, 'Employee Number' விருப்பத்தின் மூலம் தேடி (Search) இணையத் துணைவரின் Employee ID மற்றும் விவரங்களை Add Contact செய்து Review கொடுத்து Forward மற்றும் Approve செய்யவும்.
Step 5 (MFR செய்தல்): இவாறு இருவரின் சுயவிவரத்திலும் சரியாகப் புதுப்பித்த பிறகு Mark For Recalculation (MFR) கொடுத்தால், தம்பதியரில் மூத்தோருக்கு மட்டும் NHIS பிடித்தம் செய்யப்பட்டு, இளையவருக்குப் பிடித்தம் தவிர்க்கப்படும்.
முன்னாள் ராணுவத்தினருக்கு (Ex-Servicemen) NHIS பிடித்த விலக்கு பெற:
முன்னாள் ராணுவத்தினருக்கு NHIS 2026 பிடித்தத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அவர்களுக்குப் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் பின்வரும் வழிமுறையைப் பின்பற்றலாம்:
• Initiator Login -> Employee Profile Update -> Personal Details பகுதிக்குச் செல்ல வேண்டும்.
• அதில் Special Category என்ற பிரிவில் Ex-Service Man எனத் தேர்வு செய்து Review மற்றும் Approve செய்ய வேண்டும்.
• இதன் பின்னர் MFR (Mark For Recalculation) கொடுத்தால் Ex-Serviceman ஊழியர்களுக்கு NHIS பிடித்தம் செய்யப்படாது.
NHIS 2026: கணவன் - மனைவி இருவருக்கும் மருத்துவக் காப்பீடு பிடித்தம் செய்யப்படுகிறதா? IFHRMS-இல் தவிர்க்கும் வழிமுறைகள்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் IFHRMS தொடர்பான சந்தேகங்கள் மற்றும் வழிகாட்டல்களுக்கு நமது வலைப்பதிவைத் தொடர்ந்து பின்பற்றுங்கள்!
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.