2026-2027 ஆம் ஆண்டிற்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருதிற்கு புதிய பதிவுகள் செய்வது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்.!!
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,சென்னை 6. முன்னிலை -முனைவர். ச. கண்ணப்பன்,
ந.க.எண்.038471/எம்2/இ2/2026 நாள்: .07.2026
பொருள்
பார்வை
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், சென்னை 25 புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது 2026-2027 ஆம் ஆண்டிற்கான - புதிய பதிவுகள் செய்வது தொடர்பாக.
1) Neha Rawat, Project Associate 1. NIF INSPIRE-MANAK, Letter Dated. 14.07.2026
2) செயல் இயக்குநர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், சென்னை அவர்களின் கடித எண் 4394/PI/202E ज्ञान 14.07.2026
3) தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். ந.க. எண் 038471/எம்2/இ2/2026 நாள் 17.07.2026.
மாணவர்களை இளம் அறிவியல்பால் ஈர்க்கும் திட்டமே INSPIRE MANAK விருதுத் திட்டமாகும். இத்திட்டம், இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் மூலம் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருதுப்பணிகளை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் பள்ளிக் கல்வித் துறையின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றி வருகிறது.
6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் இளம் மாணவர்களில் அறிவியல் ஆர்வம் உள்ள மாணவர்களைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின்கீழ், பள்ளிகள் தங்கள் பள்ளி மாணவர்களின் 5 சிறந்த புத்தாக்க கண்டுபிடிப்புகளை பரிந்துரை செய்யலாம். சமுதாயத்திற்கு பயன்மிக்க, சுற்றுச்சூழலுக்கு உகந்த, புதுமையான திட்டங்களை ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள திட்டங்களைவிட எந்தவகையில் மேம்பட்டது என்பதைத் பொறுத்து தேர்ந்தெடுக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது ரூ.10,000/-(ரூபாய் பத்தாயிரம் மட்டும்) பரிசுத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த பரிசுத் தொகையைக் கொண்டு மாணவர்கள் தங்கள் திட்ட மாதிரி வடிவங்களை சிறப்புறத் தயாரித்து போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். இத்திட்டத்தின் மூலம் ஏழை எளிய மாணவர்களும் விருதுத் தொகையின் உதவியோடு சிறந்த முறையில் அறிவியல் காட்சிப்பொருட்களைத் தங்கள் அறிவியல் திறனுக்கேற்ப உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாகத் தனது கருத்துருவை விளக்கமாக www.inspireawards-dst.gov.in இணையதளத்தில் பள்ளி மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். இப்படித் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், மாவட்ட அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சிப் போட்டிகளில் கலந்து கொள்வார்கள். 38 மாவட்டங்களிலும் மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்படும். மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சிகளில் வெற்றி பெறும் 10% மாணவர்கள் மாநில
அளவிலான அறிவியல் கண்காட்சிகளில் கலந்து கொள்வார்கள்.
மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பதக்கங்கள் பரிசாக வழங்கப்படும். மாநில அளவிலான அறிவியல் மாணவர்கள், கண்காட்சிகளில் வெற்றிபெறும் மாணவர்களில் 10% புதுடெல்லி புதுடெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிகளில் கலந்துகொள்வார்கள், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை, செலவுகளையும் ஏற்றுக்கொள்கிறது என்று பார்வை(1) மற்றும் (2)ல் காணும் கடிதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும், பார்வையில் காணும் கடித நகல்கள் இத்துடன் இச்செயல்களுக்கான இணைத்து அனுப்பப்படுகிறது. அனைத்துச்
2026-2027ஆம் ஆண்டிற்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருதுகளுக்கான புதிய பதிவுகள் 15.07.2026 முதல் தொடங்கப்பட்டுள்ள விவரம் ஏற்கனவே பார்வை(3)ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதற்காக பள்ளி மாணவர்கள் கடந்த ஆண்டுகளில் பதிவு செய்ததைப் போலவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளில் பயிலும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பதிவு செய்யலாம். அதாவது மேல்நிலைப் பள்ளியாக இருப்பின் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை 3 மாணவர்களும், 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு அறிவியல் பிரிவில் இருந்து 2 மாணவர்களும் என மொத்தம் 5 மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும். உயர்நிலை பள்ளியாக இருப்பின் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை 5 மாணவர்கள் பதிவு செய்யலாம். நடுநிலைப் பள்ளிகள் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 5 மாணவர்கள் பதிவு செய்யலாம். இதற்காக www.inspireawards-dst.gov.in என்ற இணையதளத்தில் 15.07.2026 முதல் 15.09.2026 வரை விண்ணப்பிக்க இயலும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்குறிப்பிட்டவாறு. 2026-2027ஆம் ஆண்டிற்கான Inspire Manak Award-க்கு அதிகப்படியான மாணவர்கள் விண்ணப்பிக்க அனைத்து வகை அரசு /அரசு நிதியுதவிபெறும் / தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு
- 1) பார்வையில் காணும் கடிதங்களின் நகல்கள்
2) குறிப்புகள்
இயக்குநர்
NDTE (குறிப்புகள்):
1. பதிவு செய்யும்போது அலைபேசி எண் ஓராண்டு அல்லது இரண்டாண்டுகள் தொடர்புக்கு ஏற்ற வகையில் அமையுமாறு பதிவிட வேண்டும். பள்ளியின் தொலைபேசி எண் இருப்பின் அதை அவசியம் பதிவிட வேண்டும். பள்ளி மாறிச்செல்பவர்கள், ஓய்வு பெற போகும் ஆசிரியர்களின் அலைபேசியைக் கண்டிப்பாகப் பதிவிட வேண்டாம்.
2. INSPIRE MANAK விருதில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் விரைவுத்துலங்கிக் குறியில் (QR CODE) வழங்கப்பட்டுள்ளது.
3. மின்னஞ்சல் கண்டிப்பாகப் பள்ளி மின்னஞ்சல் மட்டுமே குறிப்பிடவேண்டும்.
தனிப்பட்ட மின்னஞ்சல்களைப் பதிய வேண்டாம்.
4. வங்கிக்கணக்கு மாணவரின் பெயரில் மட்டுமே இருக்க வேண்டும்
5. ஏற்கனவே புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது பெற்றவர்கள் இந்த ஆண்டு மீண்டும் பதிவு செய்யக்கூடாது.
6. மாணவர்களுடைய ஆய்வுகள் புதியதாக சிறப்பாக அமைந்தால் மட்டுமே தேர்ந்தேடுக்கப்பட்டு ரூ.10,000/- வழங்கப்படும்.
7. புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது ஒருங்கிணைப்பாளர்கள்
1. திருமதி கி. கோமதி, கோளரங்கப் பொறியாளர் 94863 41068
2. திரு. கோ.சுடலை, வழிநடத்தும் விரிவுரையார் (தே.நி) 77089 42872
8. School Password தொடர்பான விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள் மற்றும் கைபேசி எண்கள் பின்வருமாறு (தொடர்பு கொள்ள வேண்டிய நேரம் காலை 10,00 மணி (முதல் மாலை 05.00 மணி வரை) (திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை)
Friday, July 24, 2026
New
Inspire Award 2026 - 2027 - புதிய பதிவுகள் செய்வது தொடர்பாக - Director Proceedings
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.