SMC மூலம் தற்காலிக ஆசிரியர் நியமனம் மற்றும் செயல்பாடுகளை கண்காணித்து TNSED பெற்றோர் செயலியில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, July 24, 2026

SMC மூலம் தற்காலிக ஆசிரியர் நியமனம் மற்றும் செயல்பாடுகளை கண்காணித்து TNSED பெற்றோர் செயலியில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு.



SMC மூலம் தற்காலிக ஆசிரியர் நியமனம் மற்றும் செயல்பாடுகளை கண்காணித்து TNSED பெற்றோர் செயலியில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு. Orders have been issued to monitor the appointment and activities of temporary teachers recruited through SMCs and to take action to upload the details onto the TNSED Parent App.

CLICK HERE TO DOWNLOAD SMC Teacher TNSED Parent App Reg DEE PDF

அனுப்புநர்:

உறுப்பினர் செயலர்,

தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் சங்கம்,

பள்ளிக் கல்வித்துறை.

டி.பி.ஐ. வளாகம், கல்லூரி சாலை,

சென்னை - 600 006.

பெறுநர்:

இயக்குநர்,

பள்ளிக் கல்வி இயக்ககம்.

இயக்குநர்,

தொடக்கக் கல்வி இயக்ககம்,

சென்னை - 600 006.

RC No: 1338/S1/SMC/MS/2026

Date: 19.06.2026

ஐயா,

பொருள்: பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (SMCs) மூலம் நியமிக்கப்படும் தற்காலிக ஆசிரியர்களின் பணி நியமனம் மற்றும் செயல்பாடுகளை கண்காணித்து பதிவேற்றம் செய்ய TNSED பெற்றோர் செயலியில் (Parent App) மின்னணு கண்காணிப்பு அமைப்பு உருவாக்குதல் முன்மொழிவு - தொடர்பாக.

பார்வை:

அரசாணை (நிலை) எண். 07, பள்ளிக் கல்வி 5(2) துறை, நாள் 01.01.2023.

அரசாணை (நிலை) எண். 07, பள்ளிக் கல்வித் துறை, நாள் 07.01.2023இல் காண் வழிமுறைகளின்படி, நீண்டகால விடுப்பு, மாற்றுப் பணி, காலிப்பணியிட மாற்றம், மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு அல்லது பிற நிர்வாகக் காரணங்களால் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் ஏற்படும் பள்ளிகளில் கற்பித்தல் செயல்பாடுகள் தடையின்றி நடைபெறுவதற்காக, பள்ளி மேலாண்மைக் குழு (SMCs) மூலமாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட நியமனங்களில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் கண்காணிப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மாநிலம் முழுவதும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் நியமிக்கப்படும் தற்காலிக ஆசிரியர்களின் விவரங்களை முறையாகப் பதிவுசெய்து கண்காணிப்பதற்காக TNSED பெற்றோர் செயலியில் தனித்துவமான மின்னணு தொகுதியை (Digital Module) உருவாக்க இதன் வழியாக முன்மொழியப்படுகிறது. முன்மொழியப்படும் தொகுதியில் பின்வரும் கூறுகள் இடம்பெறலாம்: பள்ளி வாரியாக தேவைகளை உள்ளீடு செய்தல்

தற்காலிக ஆசிரியர் நியமனம் தேவைப்படும் காலிப்பணியிட விவரங்களை தலைமையாசிரியர்கள் பதிவேற்றம் செய்யலாம்.

காலிப்பணியிடத்திற்கான காரணம், காலஅளவு, பாடம் மற்றும் கற்பிக்க வேண்டிய வகுப்பு விவரங்கள் பதிவு செய்யப்படலாம்.

பள்ளி மேலாண்மைக் குழு தீர்மான பதிவேற்றம்

தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு ஒப்புதல் அளித்த பள்ளி மேலாண்மைக் குழு தீர்மானத்தை மின்னணு வடிவில் பதிவேற்றம் செய்தல்.

பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடைபெற்ற நாள் மற்றும் தீர்மான எண் பதிவு செய்தல்.

ஆசிரியர் விவரப் பதிவு

தற்காலிக ஆசிரியரின் பெயர், கல்வித் தகுதி, கைபேசி எண், ஆதாருடன் இணைக்கப்பட்ட அடையாள விவரம், பாட நிபுணத்துவம் மற்றும் பணிக்காலம் ஆகியவற்றை பதிவு செய்தல்.

பணியில் சேர்ந்த நாள் மற்றும் பணிவிடுவிக்கப்பட்ட நாள் ஆகியவற்றை மின்னணு முறையில் பதிவு செய்தல்.

வருகைப் பதிவு மற்றும் ஊதிய கண்காணிப்பு

மாதத்தில் விடுமுறை நாட்களின் எண்ணிக்கையை பதிவு செய்தல்.

அரசின் நடைமுறைகளின்படி வழங்கப்படும் மதிப்பூதியம் / ஊதியம் பெற்று வழங்கப்பட்ட விவரங்களை கண்காணித்தல்.

மாவட்ட மற்றும் மாநில தகவல் கண்காணிப்பு முகப்புப் பலகை (Dashboard)

பணியில் உள்ள தற்காலிக ஆசிரியர்களின் எண்ணிக்கை, பணிக்காலம், காலிப்பணியிட வகை மற்றும் பள்ளி வாரியான நிலை ஆகியவற்றை நிகழ்நேரத்தில் (Real-time) மாநில மற்றும் மாவட்ட அளவில் (CEO, DEO Ele & Sec, BEO) கண்காணித்தல்.

நீண்டகாலமாக நீடிக்கும் காலிப்பணியிடங்கள் மற்றும் அப்பணியிடத்தில் தற்காலிக ஆசிரியர் நியமனங்கள் தொடர்பாக முன் அறிவிப்புகள் மாவட்ட அளவில் (CEO / DEO (E) - Login) வழங்குதல். கொள்கைத் திட்டமிடலுக்கான தரவுக் களஞ்சியம்

தற்காலிக ஆசிரியர் பணிநியமனம் மற்றும் காலிப்பணியிட மேலாண்மை தொடர்பான நிர்வாக முடிவெடுப்புகளுக்கு ஆதரவளிக்கும் ஒருங்கிணைந்த தரவுத்தளத்தை மாநில அளவில் (State Login) உருவாக்குதல்.

முன்மொழியப்படும் இவ்வமைப்பு மூலம் : அரசாணைகளைத் தரப்படுத்தப்பட்ட முறையில் செயல்படுத்துதல்.

பள்ளி மேலாண்மைக் குழு அடிப்படையிலான நியமனங்களில் வெளிப்படைத்தன்மை மேம்படும்.

நீண்டகாலமாக பூர்த்தி செய்யப்படாமல் உள்ள காலிப்பணியிடங்களை கண்டறிய வழி ஏற்படும்.

அங்கீகரிக்கப்படாத நியமனங்கள் தடுக்கப்படும்.

மாவட்ட மற்றும் மாநில அளவிலான அலுவலர்களால் நிகழ்நேர (Real-time) கண்காணிப்பு மேற்கொள்ள இயலும்.

பள்ளிகளில் கற்பித்தல்-கற்றல் செயல்பாடுகளின் தொடர்ச்சி சிறப்பாக உறுதி செய்யப்படும்.

மேற்கண்ட விவரங்கள் தங்களது கனிவான தகவலுக்காகவும், இயக்கக அளவில் தேவையான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் சமர்ப்பிக்கப்படுகின்றன.

TNSED பெற்றோர் செயலியில் முன்மொழியப்பட்டுள்ள மின்னணு கண்காணிப்பு அமைப்பு, பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் நியமிக்கப்படும் தற்காலிக ஆசிரியர்களின் விவரங்களை மாவட்டங்கள் முழுவதும் எளிமையாகக் கண்காணிக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், பயனுள்ள கண்காணிப்பை மேற்கொள்ளவும் உதவும். மேலும், இத்தொகுதியின் சரியான பயன்பாடு மற்றும் மேம்படுத்துதலையும் உறுதிசெய்திட மாவட்ட மற்றும் வட்டார அளவிலான அலுவலர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

உறுப்பினர் செயலர்

இணைப்பு: கடித நகல்

CLICK HERE TO DOWNLOAD SMC Teacher TNSED Parent App Reg DEE PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.