தமிழகத்தில் அதிவீரிய கொரோனா தொற்று பரவல்?? - மருத்துவதுறை அறிக்கை
தமிழகத்தில் அதிவீரிய கொரோனா தொற்று பரவுவதாக எந்தவித ஆதாரமும் இல்லை
பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல் அதிக ஆதிகாரபூர்வ தகவல்களை மட்டும் நம்ப வேண்டும்
மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செய்தி வெளியீடு.
சமீபத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக ஆந்திர மாநிலத்தில் இரு நபர்கள் உயிரிழந்ததாக, பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது. ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நபர். திருப்பதி தனியார் மருத்துவமனையில் இருந்து 26.06.2026 அன்று மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு COVID-19 மற்றும் Klebsiella pneumoniae பாக்டீரியா தொற்றும் ஏற்பட்டிருந்தது.
மேலும், நீரிழிவு மற்றும் நீண்டகால சிறுநீரக நோய் போன்ற இணைநோய்களும் இருந்தன. கடுமையான Klebsiella pneumoniae தொற்று ஏற்பட்டு தீவிர சுவாசக் கோளாறு (ARDS) ஆகிய சிக்கல்களால் 28.06.2026 அன்று அவர் உயிரிழந்தார்.
வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 68 வயதுடைய நபர் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பெருங்குடல் புற்றுநோயைத் தொடர்ந்து ஏற்பட்ட சுவாச செயலிழப்பு காரணமாக இறப்பு நேரிட்டது. இந்த நிகழ்வில் COVID-19 ஒரு தற்செயலான (Incidental finding) கண்டறிதலாக இருந்தது.
ஆந்திரப் பிரதேசம், கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் கடப்பா மருத்துவமனையில் COVID-19 பாதிப்பினால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இவ்வழக்கின் மருத்துவ விவரங்கள் ஆந்திரப் பிரதேச சுகாதாரத் துறையால் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
This document appears to be a press release from a health department regarding recent COVID-19 related fatalities.
A 52-year-old individual from Andhra Pradesh passed away due to severe Klebsiella pneumoniae infection and ARDS, despite also testing positive for COVID-19.
A 68-year-old individual undergoing treatment for colorectal cancer passed away due to respiratory failure, with COVID-19 noted as an incidental finding.
A 46-year-old individual from Kadapa district passed away while undergoing treatment for COVID-19.
Monday, July 13, 2026
New
தமிழகத்தில் அதிவீரிய கொரோனா தொற்று பரவல்?? - மருத்துவதுறை அறிக்கை
COVID-19 Media Bulletin
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.