BT Deployment - Counselling - 01.08.2025 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் உபரி பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - 03.07.2026
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் சென்னை-6
15.5.6.050530 / 3 / 1 / 2025. 03.07.2026
பொருள்
பள்ளிக் கல்வி - அரசு / நகராட்சி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2025 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் உபரி பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் சார்பாக.
பார்வை
1.தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (ப.தொ) செயல்முறைகள் ந.க.எண்.050530/3/81/2025 .16.06.2026
அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2025 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டு அதனடிப்படையில் கண்டறியப்பட்ட ஆசிரியருடன் கூடிய உபரிப் பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்திட அறிவுரைகள் வழங்கப்பட்டு 15.7.2026 அன்று EMIS Online வழியாக கலந்தாய்வு நடைபெறும் என பார்வையில் காணும் செயல்முறைகளின் வாயிலாக அறிவுறுத்தப்பட்டது.
தற்போது மேற்காண் பணிநிரவல் (BT Surplus With Person Deployment Counselling ) கலந்தாய்வினை மட்டும் அந்தந்த மாவட்டத்திற்குள் உள்ள நிரப்பத்தகுந்த காலிப்பணியிடம் மற்றும் கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு பார்வையில் காணும் 16.6.2026 நாளிட்ட செயல்முறைகளில் தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி Off Line வழியாக (இணையவழி அல்லாது) முதன்மைக் கல்வி அலுவலர் நிலையிலேயே வருகின்ற 15.07.2026 அன்று நடத்தி முடித்திட அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.
மேலும் 01.08.2025 நிலவரப்படி ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணிபுரியும் பள்ளியில் இன்றைய தேதியில் மாணவர்களின் எண்ணிக்கை கூடுதல் சேர்க்கை மற்றும் பாடவேளை ஒதுக்கீடு இருப்பின் அதனால் அவ்வுபரி ஆசிரியரின் பணியிடம் பணிநிரவல் செய்யவேண்டிய அவசியம் ஏற்படவில்லை எனில் பணிநிரவலுக்கு உட்படுத்தாமல் அவரை தொடர்ந்து அப்பள்ளியிலேயே பணிபுரிய அனுமதிக்கப்படவேண்டும். அவ்வாறு அனுமதிக்கப்படும் அறிக்கையினை இணை இயக்குநர் (ப.தொ)க்கு முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுப்பிவைக்கப்படவேண்டும்.
இதன் தொடர்ச்சியாக பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திட பணிநிரவல் கலந்தாய்வு முடிந்த பிறகு காலியாக உள்ள நிரப்பத்தகுந்த பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களின் விவரங்களை EMIS Websitல் பதிவேற்றம் செய்து உறுதிப்படுத்தவேண்டும்.
Friday, July 3, 2026
New
பணி நிரவல் கலந்தாய்வை Offline மூலம் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.