சிறப்பு டெட் தேர்வுக்கான ஆசிரியர் கையேடு வழங்க எதிர்பார்ப்பு!!
This article discusses a demand by teachers in Tamil Nadu for special training and guides regarding a "TET" exam promised by a previous administration.Teachers working for five or more years have expressed concerns about whether this promise will be upheld following a change in government.Representatives for the teachers are requesting that the current government follow through with providing training and study materials to help teachers pass easily.
சிறப்பு 'டெட்' தேர்வுக்கான ஆசிரியர் கையேடு
வழங்க எதிர்பார்ப்பு
மதுரை, ஜூன் 5-
தமிழகத்தில் பணியில் உள்ள ஆசிரியர்க ளுக்கு சிறப்பு 'டெட்' தேர்வுக்கான பயிற்சியும், கையேடும் வழங்கப்படும்' என தி.மு.க., ஆட்சி யில் வெளியிட்ட அறிவிப்பை த.வெ.க., நிறை வேற்றுமா என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். அரசு, உதவி பெறும் பள்ளிகளில் தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு ஜூலையில் தமிழக அரசு சிறப்பு 'டெட்' தேர்வு நடத்தவுள் ளது. இதற்காக மாநில கல்வி ஆராய்ச்சி நிறுவனம் வழியாக தேர்வுக்கான கையேடுகள் வழங்கப் படும் என அறிவிப்பு தி.மு.க., ஆட்சியில் அறி விக்கப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட் டதால் அந்த அறிவிப்பு செயல்படுத்தப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரி யர் கூட்டணி மதுரை மாவட்ட செயலாளர் சீனி வாசன் கூறியதாவது:
ஓய்வுபெற 5 ஆண்டுகள் உள்ளோர் தவிர இருபது ஆண்டுகளாக பணியாற்றுவோர் கூட இத்தேர்வு எழுதவேண்டியுள்ளது. தேர்வுக்கான பயிற்சியும், கையேடும் அளிப்பதாக முந்தைய தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. முதல் வர் விஜய் ஆசிரியர்கள் நிலையறிந்து பயிற்சி யும், கையேடுகளும் வழங்கி, ஆசிரியர்கள் எளி தில் தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Friday, June 5, 2026
New
சிறப்பு டெட் தேர்வுக்கான ஆசிரியர் கையேடு வழங்க எதிர்பார்ப்பு!!
STET Official Notification
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.