ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு எப்போது?
நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு எப்போது?
This article from Dinamani newspaper discusses the upcoming general transfer counseling for teachers in Tamil Nadu, which is delayed.
Teachers are demanding that the counseling be completed immediately, before schools reopen on June 4, to avoid disruptions to student learning.
The transfer process usually involves inviting applications from interested teachers, preparing priority lists, and finalizing transfers for those moving to new locations.
Teachers are concerned that delays will prevent them from settling into new schools and finding housing on time, potentially affecting the new academic year.
சேலம், ஜூன் 3: தமிழகத்தில் தொடக்கக்கல்வி இயக்க கம் மற்றும் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 30 ஆயிரத் திற்கும் மேற்பட்ட துவக்க, நடுநிலை, உயர்நிலை மற் றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இதில், ஆயிரக்கணக்கான இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரி யர்கள் பணிபுரிந்து வரு கின்றனர். இவர்களுக்காக ஆண்டுதோறும் பொதுமா றுதல், பதவிஉயர்வு மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ் வொரு கல்வியாண்டு தொடங் குவதற்கு முன்பே தேவை யான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படும். குறிப் பாக, கலந்தாய்வு அறிவிப்பு வெளியிடப்பட்டு, விருப்ப முள்ள ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படும். ஆனால் கடந்த இரு ஆண்டுகளாக கலந்தாய்வு, அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு ஜூன், ஜூலை மாதம் வரை நடந்
இதனால், மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் புதிய பள்ளிகளில் சேர காலதாம தம் ஏற்பட்டது. இதேபோல் நடப்பாண்டு கோடை விடு முறை முடிந்து நாளை (4ம் தேதி) பள்ளிகள் திறக்கப் படவுள்ளது. எனவே, நடப் பாண்டு உடனடியாகமாறு தல் கலந்தாய்விற்கான அறிவிப்பை வெளியிட்டு, இம்மாத இறுதிக்குள் ஆசி ரியர்களுக்கான பொதுமா றுதல் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
விரைவாக நடத்த எதிர்பார்ப்பு
இது குறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கூறிய தாவது:
தமிழகத்தில் ஆண் டுதோறும் ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பை அடிப்ப டையாக கொண்டு, ஆசி ரியர்களுக்கான இடமாறு தல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். ஆனால் கடந்த இருஆண்டுகளாக ஜூலை மாதம் வரை கலந்தாய்வு நடத்தப்பட்டதால், ஆசிரி் யர்கள் வெகுவாக பாதிக் கப்பட்டனர்.
தது.
தற்போது கலந்தாய்வு தேதி அறிவித்தாலும், விருப்பமுள்ள ஆசி ரி யர்களிடம் இருந்து விண்ணப்பம் பெறுவது, முன்னுரிமை பட்டியல் தயாரிப்பது, கல்வி மாவட் டம், வருவாய் மாவட்டம் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் என அட்டவணை தயாரிப்பது என அடுத்தடுத்து நடவ டிக்கைகள் நடக்கும். இத னால் பள்ளிகள் திறந்து, மாணவர்களுக்கான வகுப் புகள் நடந்து காண்ெடிருக் கும்போது கலந்தாய்வை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் மாறுதல் கலந் தாய்வை முன்னதாகவே நடத்தினால், மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் சம் பந்தப்பட்ட பள்ளிகளுக்கு ஏற்ப தங்களது குடியிருப்பு மற்றும் இதர வசதிகளை அதற்கு தகுந்தவாறு ஏற் பாடு செய்து கொள்வார் கள். குறிப்பாக, மாவட்டம் விட்டு மாவட்ட மாவட்டம் மாறு
தல் பெறும் ஆசிரியர்கள், உடனடியாக தங்களது புது மாவட்டங்களுக்கு சென்று பணியில் சேர்வார்கள்.
ஆனால் நடப்பாண்டு தமிழகத்தில் அரசியல் சூழல் பல்வேறு குழப்பம் நிறைந்ததாக உள்ளது. ஒவ் வொரு துறையிலும் அன் றாட நடவடிக்கைகளை கூடயாரிடம் கேட்டு மேற் கொள்வது என தெரியா மல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர். இதேநிலை தான் பள்ளிக்கல்வித்துறை யிலும் நிலவுகிறது. அமைச் சர் புதியவராக இருந்தா லும், துறை சார்ந்த உயர் அதிகாரிகள் வழக்கமான நடைமுறைகள் குறித்து எடுத்துரைத்து, அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந் தாய்வை தாமதப்படுத் தினால், ஆசிரியர்கள் மட்டுமின்றி பள்ளி மாண வர்களும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையில் நடப்பாண்டு பணிமாறு தல் கலந்தாய்வு நடத்துவ தற்கான எந்தவித ஆரம்ப கட்ட பணிகளும் இதுவரை தொடங்கப்படவில்லை என ஆசிரியர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். எனவே, உடனடியாக கலந்தாய்வு அட்டவணை வெளியிட்டு, விருப்பமுள்ள ஆசிரியர்க ளிடம் இருந்து விண்ணப் பங்களை பெற வேண்டும்.
இவ்வாறு ஆசிரியர்கள் தெரிவித்தனர்
Wednesday, June 3, 2026
New
ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு எப்போது?
Transfer Counselling
Tags
Teachers Transfer Counselling,
Teachers Transfer Counselling Today Schedule,
Transfer Counselling
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.