04.06.2026 அன்று பள்ளிகள் திறப்பு தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!Proceedings of the Director of School Education regarding the reopening of schools on June 4, 2026!
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை 600006.
முன்னிலை: முனைவர்.ச.கண்ணப்பன்
ந.க.எண். 0014/எம்/இ1/2026, Пытат: 27-05-2026
பொருள்:
பள்ளிக்கல்வி 2026-2027 கல்வியாண்டிற்கான அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிகுலேஷன் மற்றும் தனியார் பள்ளிகள் | முதல் XII வகுப்புகளுக்கு 04.06.2026 வியாழக்கிழமை அன்று திறக்கப்படுதல்- சார்பாக. பார்வை:
பள்ளிக்கல்வித் துறை, தமிழ்நாடு அரசு திருத்தப்பட்ட செய்திக்குறிப்பு, எண்:096 தேதி: 26.05.2026
பார்வையில் உள்ள செய்திக் குறிப்பில் 2026-2027 கல்வியாண்டில் பள்ளிகள், IV முதல் XII வகுப்புகளுக்கு 01.06.2026 அன்று மற்றும் | முதல் III வகுப்புகளுக்கு 04.06.2026 அன்று திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை முன்னதாக அறிவித்திருந்தது என்றும் இதனைத் தொடர்ந்து, அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே நாளில் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் மற்றும் மனுக்கள் பெறப்பட்டன எனவும் குறிப்பாக, வெவ்வேறு வகுப்புகளில் கல்வி பயிலும் குழந்தைகள் உள்ள குடும்பங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தவிர்க்கவும், நிர்வாக வசதிக்காகவும் ஒரே திறப்பு நாளை நிர்ணயிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஜூன் மாதத்தின் முதல் வாரத்திற்கான தற்போதைய வானிலை நிலவரங்கள் மற்றும் முன்னறிவிப்புகள் படி, மாநிலத்தின் பல பகுதிகளில் பருவமழைக்கு முந்தைய காலநிலை தாக்கம், விட்டு விட்டு மழை பொழிதல், அதிக ஈரப்பதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய வெப்பநிலை தொடரும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும், பள்ளிகள் திறப்பதற்கு முன் சுகாதார வசதிகள், குடிநீர் வசதிகள், போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் பள்ளி வளாகங்களின் முழுமையான தயார் நிலை ஆகியவற்றையும் அரசு ஆய்வு செய்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்கண்ட அனைத்து அம்சங்களையும் கவனமாக பரிசீலித்ததன் பின்னரும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி, பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டிலுள்ள அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும் | முதல் XII வகுப்புகள் வரை ஒரே நாளாக 04.06.2026 தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை அன்று திறக்கப்படும் எனவும் மேலும், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும், மாவட்டக் கல்வி அலுவலர்களும், பள்ளிகள் திறக்கப்படும் முன் தேவையான முன்னேற்பாடுகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளதையும், மாணவர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் உடல்நலத்தை உறுதிப்படுத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதையும் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகங்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெறுநர்
1. அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்,
2. மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை)(தனியார்)(தொடக்கக் கல்வி) மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் நகல்
1. அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, தலைமைச் செயலகம், சென்னை-09.
2.மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை-06.
3. மாநிலத் திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை-06.
4. உறுப்பினர் செயலர், மாதிரிப் பள்ளிகள், சென்னை-06.
5. இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை -06.
6. ஆணையர், ஆதிதிராவிடர் நல ஆணையரகம், சென்னை-05.
7. இயக்குநர், பழங்குடியினர் நல இயக்குநரகம், சென்னை-05.
8. இயக்குநர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல இயக்குநரகம், சென்னை-05.
9. துணை ஆணையர் (கல்வி), சென்னை மாநகராட்சி அலுவலகம், சென்னை.
10. இயக்குநர், தனியார் பள்ளிகள் இயக்ககம், சென்னை-06
11. இயக்குநர், அரசு தேர்வுகள் இயக்கம், சென்னை-06
This official document from the Tamil Nadu Directorate of School Education outlines the reopening dates for schools for the 2026-2027 academic year.
Reopening Date: Schools are scheduled to reopen on June 4, 2026.
Applicability: This date applies to Classes 1 through 12, covering government, government-aided, matriculation, and private schools.
Reasoning: The decision was made to ensure all classes reopen on the same day for administrative convenience and to avoid difficulties for families with children in different grades.
Preparations: Schools are required to complete preparations before reopening, including ensuring sanitation, drinking water facilities, and transportation safety
Based on the document provided in the image, here are the key details regarding school reopenings in Tamil Nadu: Reopening Date: All government, government-aided, and private schools for classes I through XII will reopen on June 4, 2026. Preparation: District educational officers and school management are instructed to ensure all preparations are completed before the reopening to guarantee student safety and health.
Support Requested: The Department of School Education requests the cooperation of parents, teachers, and school administrations to ensure a smooth reopening.


No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.