ஆசிரியர்களின் தர ஊதியம் நிர்ணயத்தல் சார்ந்து - CM Cell Reply (03.06.2026) - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, June 4, 2026

ஆசிரியர்களின் தர ஊதியம் நிர்ணயத்தல் சார்ந்து - CM Cell Reply (03.06.2026)

ஆசிரியர்களின் தர ஊதியம் நிர்ணயத்தல் சார்ந்து - CM Cell Reply (03.06.2026)

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் ஊதியம் மற்றும் தர ஊதியம் நிர்ணயத்தல் சார்ந்து முதலமைச்சரின் தனிப்பிரிவில் பெறப்பட்ட தகவல்

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் இருப்பவர்கள் பணிமூப்பின் அடிப்படையில் பதவி உயர்வுபெற இயலாத முடிவுறு தொகுதியில் இருப்பவர்கள் என்றும் அவர்கள் உயர்கல்வித் தகுதி பெற்றால் மட்டுமே பட்டதாரி ஆசிரியராகவோ அல்லது நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவோ பதவி உயர்வு பெறமுடியும் என்பதால் G.O.Ms No.23 (Finance) Dt.12.01.2011 14 01.01.2006 ( 31.05.2009 வரை தேர்வுநிலை பெற்றவர்களுக்கு தர ஊதியம் 5400 என்றும் சிறப்புநிலை பெற்றவர்களுக்கு 5700 என்றும் ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக அதைப் பெற்றுவந்தனர். தற்போது அரசுக்கடிதம் 11100/தொ.க.துறை(1) 2023 நாள்: 15.12.2023 இன்படி 5400 மற்றும் 5700 தர ஊதியம் வழங்கியது தவறு என்றும் வாங்கிய தொகையை திரும்பச் செலுத்துமாறும் தர ஊதியத்தை 4700 என மறு நிர்ணயம் செய்தும் பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு தணிக்கைத்தடைவிதிக்கப் பட்டுள்ளது.

இந்தத் தொகுதியில் உள்ள சுமார் 80% ஆசிரியர்கள் பணிநிறைவு பெற்று சென்றுவிட்டனர். 20% ஆசிரியர்களே தற்போது பணி நிறைவுபெறும் தருவாயில் உள்ளனர். இவர்கள் பணிநிறைவு பெறுவதால் வரக்கூடிய பணப்பலன்கள் முழுதையும் (சுமார் 30 -40 இலட்சம்) அரசுக்கு திரும்பச் செலுத்திவிட்டு வெறுங்கையோடு வீடு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த தணிக்கைத் தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அரசுத்தரப்பு வழக்கறிஞர் ஒப்புதலோடு இந்த 5400 5700 வழங்கியது செல்லும் ஆசிரியர்களுக்குச் சாதகமாக தீர்ப்பு பெறப்பட்டுள்ளது. ஆனாலும் தொடர்புடைய ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய பணபலன்களைப் பெற்றுவழங்க வட்டாரக் கல்வி அலுவலர்கள் மறுத்து வருகின்றனர்

ஆரம்பப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர், நடுநிலைப் பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி தலைமை ஆசிரியர் ஆகியோர்களின் தர ஊதியம் ரூ.5400 பெற்று வருவது குறித்து பள்ளிக் கல்வித் துறையின் அரசு கடித எண்.11100/தொ.க.1(1)/2023-1, நாள் 15.12.2023 அன்று தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது. அத்தெளிவுரைகளின் அடிப்படையில் செயல்படுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் ரூ 5400 தர ஊதியம் நிர்ணயம் செய்தல் அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது அரசினால் வழங்கப்படும் ஆணையின் அடிப்படையிலேயே மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தெரிவிக்கலாகிறது. தகவல் மனுதாருக்கு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.