தமிழக அரசுப் பள்ளிகளில் 1,328 உடற்கல்வி ஆசிரியர், 297 உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள் உருவாக்கம் Creation of 1,328 Physical Education Teacher and 297 Physical Education Director posts in Tamil Nadu government schools.
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் புதிதாக 1,328 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களும், 297 உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-2) பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
இதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறையின் செயலர் பி.சந்தரமோகன் வெளியிட்டுள்ள அரசாணை விவரம்: கடந்த 2023-2024-ம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது,'உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் இல்லாத அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படுவதுடன் விளையாட்டு மற்றும் உடலியல் சார்ந்த செயல்பாடுகளுக்கு கலைத் திட்டம் மற்றும் பாடத்திட்டம் உருவாக்கப்படும்' என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பில், 'உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் இல்லாத அனைத்து அரசு பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும்' என்ற பகுதியை செயல்படுத்தப்படும் பொருட்டு பள்ளிக் கல்வி இயக்குநரின் தொகுப்பிலிருந்து 275 பட்டதாரி ஆசிரியர், 34 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 555 பட்டதாரி ஆசிரியர், 800 தூய்மைப் பணியாளர் பணியிடங்களை அரசு சரண் செய்து அப்பணியிடங்களுக்கு ஈடாக அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 297 உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-2) பணியிடங்களும், 1,328 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களும் தோற்றுவிக்க முடிவு செய்து அரசு ஆணையிடுகிறது என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது விரைவில் டிஆர்பி அறிவிப்பு
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 1,328 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நேரடி நியமன முறையிலும், 297 உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-2) பணியிடங்களை பதவி உயர்வு மூலமாகவும் நிரப்ப பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
உடற்கல்வி ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களும், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1 பணியிடங்களும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன. ஆசிரியர் பணி நியமன விதிமுறைகள் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை சமீபத்தில் அரசிதழில் வெளியிட்ட அரசாணைகளின்படி, உடற்கல்வி ஆசிரியர் பதவிக்கு உடற்கல்வியில் 2 ஆண்டு கால சான்றிதழ் படிப்பு (சிபிஎட்) அல்லது டிப்ளமோ (டிபிஎட்) அல்லது ஹையர் கிரேடு பெற்றிருக்க வேண்டும்
முன்பு நடைமுறையில் இருந்து வந்ததைப் போல, பிபிஎட் மற்றும் பிபிஎஸ் பட்டப்படிப்பு படித்தவர்கள் உடற்கல்வி ஆசிரியர் தேர்வுக்கு இனிமேல் விண்ணப்பிக்க இயலாது.
எனவே, உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-2) பணியிடங்களை 100 சதவீதம் பதவி உயர்வு மூலமாக நிரப்புவதற்குப் பதிலாக 50 சதவீத இடங்களை மட்டும் பதவி உயர்வு வாயிலாகவும், எஞ்சிய 50 சதவீத பணியிடங்களை பிபிஎட், பிபிஎஸ் பட்டதாரிகளைக் கொண்டு நேரடி நியமன முறையிலும் நிரப்ப வேண்டும் என்று பிபிஎட், பிபிஎஸ் பட்டதாரிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1 பதவிக்கு எம்பிஎட் பட்டப்படிப்பு வேண்டும். Government Order issued to create 1328 Physical Education Teacher posts and 297 Physical Education Director Level II posts in all government schools where there are no Physical Education Teacher posts!!! - உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் இல்லாத அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1328 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 297 உடற்கல்வி இயக்குநர் நிலை II பணியிடங்களும் தோற்றுவித்து அரசாணை வெளியீடு!!!
உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் இல்லாத அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1328 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 297 உடற்கல்வி இயக்குநர் நிலை II பணியிடங்களும் தோற்றுவித்து அரசாணை வெளியீடு!!!
உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் இல்லாத அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பின்படி, அரசாணை (நிலை) எண்.150 பள்ளிக்கல்வி பக(5(1)த்துறை, நாள்: 01.07.2024 இன்படி அரசு நகராட்சி/ உயர்நிலை/ மேல்நிலை பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-2 மற்றும் நிலை-1 ஆகிய பணியிடங்கள் மாணவர்களின் எண்னிக்கையின் அடிப்படையில் பணிநிரவல் செய்வது மற்றும் பகிர்ந்தளித்தல் சார்பாக அரசாணை வெளியிடப்பட்டது.
அவ்வரசாணையின்படி மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் 1328 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 297 உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பணியிடங்களும் புதிதாக தோற்றுவிக்கப்பட்டு பார்வை 2இல் காணும் அரசாணை வெளியிடப்பட்டது.
பார்வை 1 மற்றும் 2 இல் காணும் அரசாணைகளானது தகவலுகாகவும் தக்க தொடர் நடவடிக்கைகாகவும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.
இணைப்பு: அரசாணைகள்
👇👇👇
Communication Letter - Download here

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.