கள்ளர் பள்ளிகள் - ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு கோரிக்கை!!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, June 30, 2026

கள்ளர் பள்ளிகள் - ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு கோரிக்கை!!!



கள்ளர் பள்ளிகள் - ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு கோரிக்கை!!! Kallar Schools – Request for General Teacher Transfer Counseling!!!

பெறுநர்

ஆணையர் அவர்கள்,

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை, எழிலகம், சேப்பாக்கம், சென்னை -600 005

மதிப்பிற்குரிய அம்மா,

பொருள்

: 2026 - 2027 கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் பொதுமாறுதல் கலந்தாய்வில் ஒரே பள்ளியில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு STATION SENIORITY வழங்கி பட்டியலில் கணவன் மனைவி பணி முன்னுரிமைக்கு (SPOUSE) முன்னதாக வரிசைப்படுத்த வேண்டுதல் சார்பு.

மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப் பட்டதாரி மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வில் ஒரே பள்ளியில் ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு STATION SENIORITY அதன் அடிப்படையில் அவர்களை முன்னுரிமை பட்டியலில் கணவன் மனைவி பணி முன்னுரிமைக்கு (SPOUSE) முன்னதாக வரிசைப்படுத்த தங்களை கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில் கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் பெரும்பாலான முதுகலைப் பட்டதாரி மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்கள் அல்லாத பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். அவர்கள் பல ஆண்டுகளாக ஒரே பள்ளியில் பணிபுரிந்தும் கூட பொதுமாறுதல் கலந்தாய்வில் எவ்வித முன்னுரிமை வாய்ப்பும் பெற முடியாத சூழல் உள்ளது. எனவே நடைபெறவுள்ள 2026 2027 பொதுமாறுதல் கலந்தாய்வில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் ஆதி திராவிடர் நலத்துறையில் உள்ள பொது மாறுதல் கலந்தாய்வு நடைமுறையையே கன்னர் சீரமைப்புத் துறையில் நடைபெறும் பொது மாறுதல் கலந்தாய்வில் பின்பற்ற வேண்டும் என தங்களை தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

This is a petition regarding the 2026-2027 General Transfer Counselling for teachers in Kallar Reclamation Schools.

The National Teachers' Association requests that teachers with over five years of service at the same station be given Station Seniority to prioritize their transfer requests based on Spouse Priority.

It highlights that many teachers are from districts other than Madurai, Dindigul, and Theni, making it difficult for them to get transfers despite long service.

The petition asks for the same transfer procedure used by the School Education Department and Adi Dravidar Welfare Department to be implemented in the Kallar Reclamation Department.

CLICK HERE TO DOWNLOAD கள்ளர் பள்ளிகள் - ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு கோரிக்கை PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.