+2 விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்தல் மற்றும் மறுகூட்டல் / மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் தொடர்பாக DGE செய்திக் குறிப்பு!!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, June 4, 2026

+2 விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்தல் மற்றும் மறுகூட்டல் / மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் தொடர்பாக DGE செய்திக் குறிப்பு!!!

+2 விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்தல் மற்றும் மறுகூட்டல் / மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் தொடர்பாக DGE செய்திக் குறிப்பு!!!

மார்ச் 2026 மேல்நிலைத் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் 8.5.2026 அன்று வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டவுடன் விடைத்தாள் நகல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றுக்கான விண்ணப்பங்கள் மாநிலம் முழுவதும் இருந்து பெறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் எண்ணிக்கையில் விடைத்தாள் நகல் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் (வெள்ளிக்கிழமை) பிற்பகல் முதல் 18.08.2026 (செவ்வாய்க்கிழமை) வரை விடைத்தாள் நகலினை பாடவாரியாக பல்வேறு கட்டங்களாக www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று Higher Secondary Examination என்ற வாசகத்தினை Click @ Higher Secondary March 2026 Scan Copy Download என்ற வாசகத்தினை click செய்தால் தோன்றும் பக்கத்தில் தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விடைத்தாள் நகல்கள் பாட வாரியாக பல்வேறு கட்டங்களாக இவ்வியக்ககத்தால் இணையதளத்தில் வெளியிடப்படும். பாடவாரியான விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யும் நாட்களின் விவரங்கள் இவ்வலுவலகத்தின் மூலம் அவ்வப்போது செய்திக்குறிப்பாக ஒரு நாள் முன்னதாக வெளியிடப்படும். மேலும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலும் தெரிந்துகொள்ளலாம். விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்த பின்னர் தேர்வர்கள் மறுகூட்டல்/ மறுமதிப்பீட் படிவத்தையும் மேற்காண் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். மறுகூட்டல்/ மறுமதிப்பீடு செய்ய விரும்பினால் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 18.06.2028 க்குள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை பணமாகச் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

தென்காசி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களை ஒப்படைத்து. அதற்குரிய கட்டணத் தொகையை பணமாக செலுத் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.