கள்ளர் சீரமைப்பு துறை பள்ளிகளில் 150 ஆசிரியர் காலி பணியிடங்கள்
பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நிரப்ப வலியுறுத்தல்
The article highlights a demand to fill 150 vacant teacher positions in Kallar Reclamation Department schools through the School Management Committee.
It states that teaching activities are affected due to long-term vacancies.
The report mentions 230 total Kallar Reclamation schools across Dindigul, Theni, and Madurai districts. கள்ளர் சீரமைப்புத் துறை பள்ளிகளில் காலி யாக உள்ள 150 ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நிரப்ப வேண்டும்' என தேசிய ஆசிரியர் சங்க மாநில துணைத்தலைவர் விஜய் வலியுறுத்தி உள் ளார்.
அவர் பள்ளிக்கல்வித் துறை செயலாளர், அமைச் சர் ராஜ்குமார், முதல்வ ரின் தனிப்பிரிவு, கள்ளர் சீரமைப்புத்துறை இணை இயக்குனருக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்து உள் ளதாவது:
பள்ளிக்கல்விதுறை யில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணி யிடங்களை உரிய முறை யில் நிரப்பும் வரை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நியமித்துக் கொள்ளலாம் என்ற நடைமுறை உள் ளது. அதுபோல் கள்ளர் சீரமைப்புத்துறையிலும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நிரப்ப அரசு முன்வர வேண்டும். மதுரை, திண்டுக்கல், மொத்தம் 230 கள்ளர் சீரமைப்புத்துறை தேனி மாவட்டங்களில் உயர் நிலை, மேல்நிலைப்பள் ளிகள் உள்ளன. இதில் 86 பட்டதாரி ஆசிரியர், 40 இடைநிலை ஆசிரியர், 24 முதுகலை ஆசிரியர் என மொத்தம் 150 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இப்பணியிடங்கள் காலமாக நிரப் நீண்ட பப்படாமல் உள்ளதால் இப்பள்ளிகளில் மாண வர்களுக்கான கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் உடன டியாக இதில் கவனம் செலுத்தி ஆசிரியர் காலி பணியிடங்களை முறை யான கலந்தாய்வு மூலம் வேண்டும்.
நிரப்ப நடவடிக்கை எடுக்க இன்று (ஜூன் 4) முதல் பள்ளிகள் துவங்க உள்ள நிலையில் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு அனுமதிக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.