மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை (TML) காலை 11.00 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, May 8, 2026

மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை (TML) காலை 11.00 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை (TML) காலை 11.00 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அனுப்புநர்

திருமதி.க.சசிகலா,

அரசுத் தேர்வுகள் இயக்ககம்.

அரசுத் தேர்வுகள் இயக்குநர். - 600006.

பெறுநர்

1. இணை இயக்குநர் (கல்வி), புதுச்சேரி.

2. முதன்மைக் கல்வி அலுவலர்கள், அனைத்து மாவட்டங்கள்

3. மாவட்டக்கல்வி அலுவலர்கள் (இடைநிலை மற்றும் தனியார் பள்ளிகள்). அனைத்து மாவட்டங்கள்

ந.க.எண்.018677 / எச்1/2026

நாள்: .05.2026

ஐயா/அம்மையீர்,

பொருள்:

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-62025. 2026. ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை பொதுத் தேர்வுகள் மார்ச் 2026, தேர்வு முடிவுகள் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) அனைத்துப் பள்ளிகளும் ஆன்-லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்வது தொடர்பான அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக.

அரசாணை (நிலை) எண். 14, நாள். 29.01.2018. பார்வை: 2025-2026ஆம் கல்வியாண்டில் மேல்நிலை பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள் வருகிற 08.05.2026 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் 08.05.2026 அன்று www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று, தங்கள் பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி, மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை (TML) காலை 11.00 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்துமாறும், அதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க பள்ளித் தலைமையாசிரியர்களை அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்திற்கான அனைத்து பள்ளிகளின் தேர்வு முடிவுகள் மற்றும் பகுப்பாய்வு அறிக்கையினை 08.05.2026 அன்று காலை 11.00 மணிக்கு தங்களது User ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஓம்/-

இயக்குநர்

நகல்:

1. கூடுதல் தலைமைச்செயலாளர், பள்ளிக்கல்வித்துறை, தலைமைச்செயலகம்.

சென்னை-9.

2. மாநிலத்திட்ட இயக்குநர், அனைவருக்கும் கல்வி இயக்ககம், சென்னை-6.

3. உறுப்பினர் செயலர், மாதிரிப்பள்ளிகள், சென்னை-6

4. இயக்குநர், பள்ளிக்கல்வி இயக்ககம், சென்னை-6

5. இயக்குநர், தனியார் பள்ளிகள், சென்னை-6

6. மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள், அனைத்து மாவட்டங்கள்.

CLICK HERE TO DOWNLOAD அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை (TML) காலை 11.00 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.