10th Result 2026 - பகுப்பாய்வு அறிக்கை வெளியீடு. 10th Result 2026 – Release of Analysis Report
மார்ச் / ஏப்ரல் 2026 S.S.L.C)
பொதுத்தேர்வு முடிவுகள் பகுப்பாய்வு அறிக்கை
10th Result 2026 - பகுப்பாய்வு அறிக்கை வெளியீடு தமிழ்நாட்டின் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் பள்ளிக் கல்வித்துறையால் வெளியிடப்பட்டு, ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 94.31% ஆகப் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (20.05.2026) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார். கடந்த மார்ச் 11, 2026 முதல் ஏப்ரல் 06, 2026 வரை நடைபெற்ற இந்த பொதுத்தேர்வில், ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 94.31 சதவீத மாணவ-மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த 2025ஆம் ஆண்டு தேர்ச்சி விகிதமான 93.80 சதவீதத்தை விட 0.51 சதவீதம் கூடுதலாகும்.
இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத 8,70,643 பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 4,35,396 மாணவர்களும், 4,35,247 மாணவிகளும் அடங்குவர். தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 8,21,105 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நடப்பு ஆண்டிலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்று தங்களது சாதனையைத் தொடர்ந்துள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 96.47 சதவீதம் (4,19,891 மாணவிகள்) ஆகவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 92.15 சதவீதம் (4,01,214 மாணவர்கள்) ஆகவும் பதிவாகியுள்ளது. மாணவர்களை விட மாணவிகள் 4.32 சதவீதம் அதிகமாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 11,174 மாணவர்கள் வருகை புரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முடிவுகளின் அடிப்படையில், பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்வித் தரத்தை மேம்படுத்தத் தயார் செய்ய வேண்டிய தரவு சார்ந்த பொதுத்தேர்வு முடிவுகள் பகுப்பாய்வு அறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 👇👇👇👇
Click Here to Download - பொதுத்தேர்வு முடிவுகள் பகுப்பாய்வு அறிக்கை - SSLC ANALYSIS 2026 PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.