நீட் தேர்வு - ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 28, 2026

நீட் தேர்வு - ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு



நீட் தேர்வு - ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு NEET Exam – Restrictions on Teachers

வரும், 3ம் தேதி மதியம், 02:00 மணி முதல் மாலை, 05:00 மணி வரை இளங்கலை மருத்துவ படிப்பு நுழைவு தேர்வான நீட் தேர்வு நடக்கிறது. மாவட்டத்தில், 13 மையங்களில் நடக்கிறது.

தேர்வர்கள் முற்பகல், 11:00 மணி முதல், 01:30 மணிக்குள் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர். அதன் பின் வருவோருக்கு அனுமதியில்லை. தேர்வர்கள் மதியம் சாப்பாடு கொண்டு வந்து சாப்பிட்டு கொள்ளலாம். தேர்வறையில் பேனா வழங்கப்படும். குடிநீருக்கு ஏற்பாடு செய்யப்படும். தேர்வர்கள் தனியாகவும் வாட்டர் கேன் கொண்டு வரலாம். எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தேர்வு மையத்துக்குள் கொண்டு வர அனுமதியில்லை.

தனியார் பயிற்சி மையங்களில் நீட் தேர்வு பயிற்சி வகுப்பு எடுக்காத ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களை மட்டுமே, நீட் தேர்வு மைய பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இம்முறை தேர்வு மையங்கள் அரசு, அரசு நிதியுதவி பள்ளி, கல்லூரிகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. ஒரு அறையில், 24 பேர் மட்டுமே தேர்வெழுத அனுமதி. ஒரு அறைக்கு இரு ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்படும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.