Extra one hour concession for candidates with disabilities - They can leave the examination hall as per their wish after the completion of the entire examination time - DGE Procedures
This document from the Directorate of Government Examinations in Chennai outlines special provisions for differently-abled candidates during the March 2026 Higher Secondary Examinations.
Eligible candidates may choose to utilize an additional one hour of time for their exams.
If a candidate does not wish to use the extra hour, they may leave after the standard exam time (10:15 AM to 1:15 PM) concludes.
To leave early, candidates must complete and sign a specific declaration form provided in the attachment.
instructs examination center chief superintendents to collect, consolidate, and submit forms from candidates to the relevant Assistant Director of Government Examinations office after all examinations are completed.
Action Required: Consolidate candidate forms.
Submission Deadline: After all examinations conclude.
Recipient: Assistant Director of Government Examinations office.
Authority: Director of Government Examinations.
மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு கூடுதல் ஒரு மணி நேரம் சலுகை - முழு தேர்வு நேரம் முடிந்த பிறகு தன் விருப்பத்தின் படி தேர்வறையை விட்டு வெளியே செல்லலாம் - DGE செயல்முறைகள் பொருள்:
சென்னை-6 அரசுத் தேர்வுகள் இயக்ககம் மேல்நிலை பொதுத் தேர்வுகள் 2025 2026 மாற்றுத் திறனாளி கூடுதல் ஒரு மணி நேரம் சலுகை தேர்வர்கள் பயன்படுத்தபடுவது சார்பு
பார்வை:
1 அரசாணை (நிலை) எண்.62 பள்ளிக் கல்வி (அதே)த் துறை, நாள். 25.03.2022 -
நடைபெற்றுக் கொண்டிருக்கும் மார்ச் 2026 மேல்நிலை பொதுத் தேர்வுகளில் தேர்வெழுதவிருக்கும் மாற்றுத் திறனாளி தேர்வர்களில் பார்வை 1ல் காணும் அரசாணையின் படி கூடுதல் ஒரு மணி நேரம் சலுகை பெற்றவர்கள் தன் விருப்பத்தின் படி கூடுதல் ஒரு மணி நேரம் தேர்வெழுதலாம் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், மாற்றுத் திறனாளி தேர்வர்கள் கூடுதல் ஒரு மணி நேரம் தேர்வெழுத விரும்பவில்லையெனில், தேர்வு நேரமான 10.15 முதல் 115 வரை தேர்வறையில் முழு தேர்வு நேரம் முடிந்த பிறகு தேர்வர்கள் தன்விருப்பத்தின் படி இணைப்பில் காணும் படிவத்தை பூர்த்தி செய்து, கையொப்பமிட்டு தேர்வறையை விட்டுச் செல்லலாம் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும், தேர்வர்களிடமிருந்து பெறப்படும் படிவங்களை, ஒருங்கிணைத்து அனைத்து தேர்வுகள் முடிவடைந்ததும் சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் படி அனைத்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களை அறிவுறுத்துமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
ஒம்/
இயக்குநர்
இணைப்பு:
1. படிவம்
நகல்:
1 மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள், அனைத்து மாவட்டங்கள்
2. மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை மற்றும் தனியார் பள்ளிகள்), அனைத்து மாவட்டங்கள்
CLICK HERE TO DOWNLOAD DGE Proceedings - PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.