TET SR Entry DEE Reg - TET - ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியதற்கான முன் அனுமதி பெறுவதிலிருந்து விலக்களித்து தேர்ச்சி பெற்ற விவரத்தினை பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வழிகாட்டுதல்கள் வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, March 4, 2026

TET SR Entry DEE Reg - TET - ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியதற்கான முன் அனுமதி பெறுவதிலிருந்து விலக்களித்து தேர்ச்சி பெற்ற விவரத்தினை பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வழிகாட்டுதல்கள் வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.



TET - ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியதற்கான முன் அனுமதி பெறுவதிலிருந்து விலக்களித்து தேர்ச்சி பெற்ற விவரத்தினை பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வழிகாட்டுதல்கள் வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு. The Director of Elementary Education has issued guidelines to exempt teachers from obtaining prior permission to write the TET - Teacher Eligibility Test and to record the details of passing the exam in the employment record.

தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2025 தேர்வில் தேர்ச்சி பெற்றது ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியதற்கான முன் அனுமதி பெறுவதிலிருந்து விலக்களித்து தேர்ச்சி பெற்ற விவரத்தினை பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வழிகாட்டுதல்கள் வழங்கிடக் கோரியது சார்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை 6.

ந.க.எண்.1282505/g1/2025, நாள். .03.2026

பொருள் தொடக்கக் கல்வி தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு - 2025 தேர்வில் தேர்ச்சி பெற்றது - ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியதற்கான முன் அனுமதி பெறுவதிலிருந்து விலக்களித்து தேர்ச்சி பெற்ற விவரத்தினை பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வழிகாட்டுதல்கள் வழங்கிடக் கோரியது - சார்பாக.

பார்வை : 1.

மாண்பமை உச்சநீதிமன்றம் உரிமையியல் மேல்முறையீட்டு (Civil Appeal) எண்.1385/2025, தீர்ப்பாணை, நாள்.01.092025 2. பல்வேறு அரசு / அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் பிரதிநிதிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள்.

3. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை, நாள்.13.02.2026. ...... பார்வை 1-ல் காணும் மாண்பமை உச்சநீதிமன்றம் தீர்ப்பாணையின்படி, இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறும் குழந்தைகளின் உரிமைச் சட்டம், 2009 இன் பிரிவு 23 இன் படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறுவது ஆசிரியர்களுக்கான குறைந்தபட்ச தகுதிகளில் கட்டாயமான ஒன்று எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் தொடர முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

2025 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TRB) நடத்தப்பட்ட தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தாள்-1 மற்றும் தாள்-2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் தேர்ச்சி பெற்ற விவரங்களை பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய முன்அனுமதி மற்றும் தடையின்மைச் சான்று பெறுவதிலிருந்து விலக்களிக்கக் கோரி பார்வை 2-ல் காணும் கடிதங்கள் மூலம் கோரப்பட்டுள்ளது.

அதில், ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கையில் பணியிலிருக்கும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) எழுத முன் அனுமதி மற்றும் தடையின்மைச் சான்று (NOC) பெறப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்படவில்லை எனவும், பணியிலிருக்கும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத முன் அனுமதி மற்றும் தடையின்மைச் சான்றுக்கு தற்போது விண்ணப்பிக்கவில்லை எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சில மாவட்டங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் தேர்ச்சி பெற்ற விவரத்தினை பணிப்பதிவேட்டில் பதிவு செய்வதற்கு முன் அனுமதி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் என்று கூறி பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய மறுப்பதாகவும், இதனால் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாக மேற்காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பார்வை 3-ல் காணும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 13.02.2026 நாளிட்ட அறிவிக்கையில் பத்தி பத்தி எண்.11(iii)-ல் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது பணிச்சான்றினை முழுமையாக பூர்த்தி செய்து இணையத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால், TNTET-2025, TNTET-2026 மற்றும் அதற்கு முன்னர் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் தேர்ச்சி பெற்ற விவரங்களை பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய முன் அனுமதி மற்றும் தடையின்மைச் பெறவேண்டிய அவசியம் எழவில்லை.

சான்று

எனவே, சார்ந்த ஆசிரியர்களின் தேர்ச்சி பெற்ற சான்றின் உண்மைத்தன்மையினை முதன்மைக் கல்வி அலுவலகம் / மாவட்டக் கல்வி அலுவலகத்தில் பேணப்படக்கூடிய ஆசிரியர் தேர்வு வாரிய பதிவேட்டுடன் உடன் சரிபார்த்து உறுதி செய்த பின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD TET SR Entry DEE Reg - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.