TNPSC - மாவட்ட கல்வி அலுவலர் - (தொகுதி I-C பணி) (அறிவிக்கை எண்: 05/2024,நாள்:23.04.2024) பதவிக்கான விடுபட்ட / மற்றும் சரியான சான்றிதழ்களை மறுபதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு

செய்தி வெளியீட்டு எண்: 12/2026
: 05.02.2026
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
செய்திக்குறிப்பு
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 05/2024, நாள்:23.04.2024 இன் வாயிலாக மாவட்ட கல்வி அலுவலர் (தொகுதி I-C பணி) பதவிக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கு தேர்வர்களால் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டதில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்னர் சில தேர்வர்கள் உரிய சான்றிதழ்களை சில குறைபாடுகளுடன் / சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய தேர்வர்களுக்கு இறுதிவாய்ப்பு வழங்கும் விதமாக 06.02.2026 முதல் 12.02.2026 இரவு 11.59 மணி வரை விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை மறுபதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்தகவல் அத்தேர்வர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மற்றும் குறிப்பாணை மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே. அத்தேர்வர்கள் அனைவரும் குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறைப் பதிவு தளம் வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாத தேர்வர்களின் உரிமைகோரல் (claim) / விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Friday, February 6, 2026
New
TNPSC - மாவட்ட கல்வி அலுவலர் - (தொகுதி I-C பணி) (அறிவிக்கை எண்: 05/2024,நாள்:23.04.2024) பதவிக்கான விடுபட்ட / மற்றும் சரியான சான்றிதழ்களை மறுபதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.