TET தேர்ச்சி பெற்ற (23.08.2010க்கு பிந்தைய) அரசு உதவி பள்ளி ஆசிரியர்களுக்கு பணிப்பலன்கள் வழங்க அரசாணை கோரி பள்ளிக்கல்வி இயக்குநரை தேசிய ஆசிரியர் சங்கம் நேரில் சந்தித்து மனு
ஐயா.
பொருள்
: அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) தேர்ச்சி பெற்றவர்கள் பணிவரன் முறைப்படுத்துதல் ஆண்டு ஊதிய உயர்வு அனுமதித்திட வேண்டுதல்-சார்பு.
வணக்கம்
23.08.2010க்கு பிறகு அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியராகவும் அல்லது பட்டதாரி ஆசிரியராகவும் பணிநியமனம் பெற்ற பின்னர் ஆசிரியர் தகுதி தேர்வு (TET) நிபந்தனைக்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 1500க்கும் மேற்பட்ட சிறுபான்மையற்ற நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கடந்த 15 ஆண்டுகளாக TET இலிருந்து விலக்கு கோரி பல்வேறு கட்டங்களில் கோரிக்கை வைத்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். அதே சமயம், அவ்வப்போது நடைபெற்ற TET தேர்வுகளிலும் தொடர்ந்து கலந்து கொண்டு வந்துள்ளனர். கடந்த நவம்பர் 2025ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில், இந்த நிபந்தனையின் கீழ் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களில் சுமார் 80%க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனால் அவர்களுக்கு நீண்டகால சிக்கலிலிருந்து விடிவு கிடைத்துள்ளது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
a formal letter regarding government-aided school teachers who have passed the Teacher Eligibility Test (TET) and are requesting regularization of their service and annual salary increments.
Teachers appointed after August 23, 2010, in non-minority government-aided schools were brought under the mandatory TET requirement. Around 1,500 such teachers have been seeking exemption from TET for the past 15 years.
Approximately 80% of these teachers passed the TET held in November 2025.
இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக முறையாக வழங்கப்படாத வளர்ஊதியம், ஊக்கஊதியம் உள்ளிட்ட ஊதியப் பலன்கள் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படியான ஊதியம் 10 ஆண்டுகளுக்கான தேர்கநிலை ஊதியம் போன்ற பலன்கள் சில கல்வி மாவட்டங்களில் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் பல கல்வி மாவட்டங்களில் TET நிபந்தனையை காரணமாகக் காட்டி இப்பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
எனவே. மேற்கண்ட ஊதியப் பலன்களை அனைத்து கல்வி மாவட்டங்களிலும் ஒரே மாதிரியாக வழங்கும் வகையில் அரசாணை வெளியிட அரசுக்கு பரிந்துரை செய்து அவர்களின் நியமனத்தை முறைப்படுத்திட அன்புடன் வேண்டுகிறோம்.
மேலும் தற்போது TET தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழுக்கான உண்மைத்தன்மை (Genuineness Certificate) பெறுவதற்கான நடைமுறைகளை தெளிவுபடுத்த வேண்டுகிறோம். அரசு உதவி பெறும் பள்ளிகளில் TET நிபந்தனையை காரணமாகக் காட்டி பதவி உயர்வு வழங்கப்படாமல் நிறுத்தப்பட்ட பணியிடங்களை தற்போது தேர்ச்சி உடனடியாக ஆவண செய்யவும் பெற்ற ஆசிரியர்களுக்கு வேண்டுகிறோம்.
கடந்த 15 ஆண்டுகளாக நீடித்த பிரச்சினைக்கு தீர்வாக சமீபத்திய TET தேர்வில் மதிப்பெண் தளர்வு வழங்கிய தமிழக அரசிற்கும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு பணியில் உள்ள ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அவர்களின் பணிக்காலத்தை கருத்தில் கொண்டு மதிப்பெண் தளர்வுடன் விரைவில் சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வினை நடத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
a letter written in Tamil, likely from a teachers' association to the government regarding various issues related to teacher salaries and promotions. The letter highlights inconsistencies in the disbursement of salary benefits across different educational districts and requests government action to standardize the process and address other concerns related to the TET (Teacher Eligibility Test) qualification.
Salary benefits, including increased pay and incentives, are not consistently provided across all educational districts.
The letter requests a government order to ensure uniform application of benefits, overriding the TET condition currently used to withhold them. It also asks for clarification on the process for obtaining Genuineness Certificates for TET-qualified teachers.
The authors express gratitude for recent mark relaxations in the TET exam and request a special, expedited TET for in-service teachers to ensure job security.
CLICK HERE TO DOWNLOAD TET NON MINORITY PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.