TET - 2012 முதல் 2022 முடிய ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி விவரங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டது உண்மைத் தன்மை குறித்த TRB தெளிவுரை கடிதம் - TRB clarification letter on the authenticity of TET - Teacher Eligibility Test pass details from 2012 to 2022 sent to districts.
ஆசிரியர் தகுதித் தேர்வு 2012 முதல் 2022 முடிய ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி விவரங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டது உண்மைத் தன்மை குறித்து தெளிவுரை வழங்குதல் சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் கடிதம்.
ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் உண்மைத் தன்மை தேர்வெழுதிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நிலையில் வழங்குவது சார்ந்து கீழ்க்கண்ட செயல்முறைகள் ஏற்கனவே அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின் அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம்,
/தனிகவனம்/
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக் கட்டடம்,
பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம், கல்லூரிச் சாலை,
நுங்கம்பாக்கம், சென்னை 600006.
15.85.67 600T. 3501676/T/S1/2024
நாள். 22.01.2026
பொருள் :
ஆசிரியர் தேர்வு வாரியம் - ஆசிரியர் தகுதித் தேர்வு 2012 முதல் 2022 முடிய ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி விவரங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டது உண்மைத் தன்மை குறித்து தெளிவுரை வழங்குதல் சார்ந்து.
- பார்வை : 1 இவ்வலுவலக செயல்முறைகள் 15.85.67600T.3501676/
F1/2022 நாள். 09.12.2022 மற்றும் 22.01.2022.
2 இவ்வலுவலக செயல்முறைகள் e-office எண்.
3501676/F1/2022 6т. 19.07.2023. 3 இவ்வலுவலக
செயல்முறைகள் 3501676/F1/2023 т. 20.12.2023..
e-office
எண். 4 இவ்வலுவலக செயல்முறைகள் e-office எண். 3501676/ T/S1/2022 நாள் 03.05.2024.
5 இவ்வலுவலக செயல்முறைகள் e-office எண். 3501676/ T/S1/2024 நாள். 21.01.2025.
6 இவ்வலுவலக செயல்முறைகள் T/S1/2024 நாள். 27.05.2025.
7 இவ்வலுவலக செயல்முறைகள் T/S1/2024 நாள். 12.09.2025.
ந.க.எண்.3501676/ ந.க.எண்.3501676/ ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் உண்மைத் தன்மை தேர்வெழுதிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நிலையில் வழங்குவது சார்ந்து கீழ்க்கண்ட செயல்முறைகள் ஏற்கனவே அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின் அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது. பார்வை 1ல் காண் இவ்வலுவலக செயல்முறைகளின்படி “ ஆசிரியர் தகுதித் தேர்வு 2012, 2013, 2017 மற்றும் 2019 ஆகிய தேர்வர்களுக்கான சான்றிதழ் உண்மைத் தன்மை சார்ந்த விவரங்கள் சான்று மட்டும் தேர்வெழுதிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே வழங்க அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், தகுதித் தேர்வு சான்றிதழ்களின் ஏதேனும் பிழைத்திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருப்பின் தேர்வரின் உரிய ஆவணங்களை பெற்று சான்றிதழ் சார்ந்த ஆவணங்களை ஒப்பிட்டு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் பரிந்துரையோடு கருத்துருக்களை ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது” எனத்தெரிவிக்கப்பட்டு மின்னஞ்லில் 22.12.2022ல் அனுப்பப்பட்டுள்ளது.
பார்வை 2க்கான செயல்முறைகளின்படி 2012 ஆசிரியர் தகுதித் தேர்வு
தேர்ச்சி விவரங்கள் மற்றும் 2019 ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி விவரங்கள் மின்னஞ்சலில் 26.07.2023 மற்றும் 04.09.2023ல் அனுப்பப்பட்டுள்ளது.
பார்வை 3ல் காண் செயல்முறைகளின்படி, 2022 ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி விவரங்கள் உண்மைத் தன்மை குறித்து ஆணை வழங்கும் பொருட்டு மின்னஞ்சலில் 2112.2023ல் அனுப்பப்பட்டுள்ளது.
பார்வை 4ல் காண் செயல்முறைகளின்படி ஆசிரியர் தகுதித் தேர்வு மறுபிரதி சான்றிதழ் வழங்குவது குறித்தும், உண்மைத் தன்மை வழங்குவது சார்ந்தும் தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது.'
மேற்காண் செயல்முறைகளில் தலைமை ஆசிரியர்/ வட்டாரக் கல்வி அலுவலர்/ மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோரிடமிருந்து நேரடியாக ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உண்மைத் தன்மை குறித்து கடிதங்கள் பெறப்பட்டு வருகிறது எனத் தெரிவித்து, இதனை தவிர்க்கும் பொருட்டு இப்பொருள் சார்ந்து மாவட்டத்திலுள்ள அனைத்து அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்புமாறு தெரிவித்து மின்னஞ்சல் 21.01.2025ல் அனுப்பப்பட்டது.
பார்வை 560 காண் இவ்வலுவலக செயல்முறைகளின்படி சில மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட கோரிக்கை அடிப்படையில் 2014ல் நடைபெற்ற சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு விவரங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் மின்னஞ்லில் அனுப்பப்பட்டது.
பார்வை 6ல் காண் இவ்வலுவலக செயல்முறைகளின்படி 2022 ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண்கள் மாறுபடுவதால் முதன்மைக் கல்வி அலுவலரால் உண்மைத் தன்மை குறித்த ஆணை வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து பெறப்பட்ட குறைதீர்க்கும் மனுக்கள் அடிப்படையில், இதற்கான தெளிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும், 2022ல் சான்றிதழில் மதிப்பெண் இல்லாததால், இவ்வலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் சரிப்பார்த்து உண்மைத் தன்மை வழங்குமாறும், மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் உண்மைத் தன்மை குறித்த கருத்துக்களில் நுழைவுச்சீட்டு கோருவது அவசியமில்லை எனத் தெரிவித்தும், 18.09.2025ல் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.
மேற்காண் செயல்முறைகளில் தெளிவாக அறிவுரைகள் வழங்கப்பட்டும், தொடர்ந்து கீழ்க்கண்ட விவரங்கள் கோரி கருத்துருக்கள் திருப்பப்படுவதாக புகார் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
3) நுழைவு சீட்டு நகல் இணைக்கப்படவில்லை எனத் தெரிவித்து முதன்மைக் கல்வி அலுவலத்தில் கருத்துருக்கள் திருப்பப்படுகிறது.
4) 202260 மதிப்பெண் மாறுபாடு உள்ளது எனத் தெரிவித்து திருப்பப்படுகிறது.
மேலும், இதுநாள் வரை ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு நேரடியாக பள்ளி ஆசிரியர் / தலைமையாசிரியர் / வட்டாரக் கல்வி அலுவலர் / மாவட்டக் கல்வி அலுவலர் / ஆகியோரிடமிருந்து உண்மைத் தன்மை குறித்து கருத்துக்கள் பெறப்பட்டு வருகிறது. இது குறித்து சுற்றறிக்கை அனுப்புமாறும் பலமுறை தெரிவிக்கப்பட்டும், தொடர்ந்து நாளது தேதிவரை பெறப்பட்டு வருகிறது மிகவும் வருந்தத்தக்கதாக உள்ளது.
அனுப்பப்பட்ட அனைத்து எனவே, இவ்வலுவலகத்திலிருந்து செயல்முறைகளயும் ஆசிரியர் தகுதித் தேர்வு கோப்பில் வைத்து பராமரிக்குமாறும், தொடர்ந்து இது போன்ற புகார் மனுக்கள் / நேரடியாக பெறப்படும் கருத்துருக்கள் ஆகியவை முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும் எனவும், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
பெறுநர்
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்.
இணை இயக்குநர்
ஆசிரியர் தகுதித் தேர்வு
CLICK HERE TO DOWNLOAD Regarding TET Genuineness PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.