TET July 2026 - யார் விண்ணப்பிக்கலாம்? இது யாருக்கான தேர்வு? அறிவிக்கை சார்ந்த வினாக்களும் விடைகளும்.. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, February 13, 2026

TET July 2026 - யார் விண்ணப்பிக்கலாம்? இது யாருக்கான தேர்வு? அறிவிக்கை சார்ந்த வினாக்களும் விடைகளும்..



TNTET'2026 Notification Questions and Answers for Teaching Staff - *ஆசிரியப் பணியிலுள்ளோருக்கான TNTET'2026 அறிவிக்கை சார்ந்த வினாக்களும் விடைகளும்*

_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_

முன் குறிப்பு : இது 'சிறப்பு TET' அல்ல. அவ்வாறு அடையாளப்படுத்துவது தேவையற்ற சட்டச்சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புண்டு என்பதால் இது பணியிலுள்ளோருக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST FOR WORKING TEACHERS) என்றே TRB குறிப்பிடுகிறது.

*யார் விண்ணப்பிக்கலாம்? இது யாருக்கான தேர்வு?*

இதுவரை TET தேர்ச்சி பெறாமல், 01.09.2025ற்கு முன்பே ஆசிரியப் பணியேற்று அரசு / அரசு உதவி பெறும் / அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளில் காலமுறை ஊதியம் / தொகுப்பூதியம் / பகுதிநேர பணியில் இடைநிலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் / அதனையொத்த ஆசிரியராக EMIS IDயுடன் பணியாற்றுவோர் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

*யார் எந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டும்?*

D.T.Ed., / அதனையொத்த கல்வித் தகுதியுடன் பணியாற்றும் SGT, Primary HM உள்ளிட்டோர் TNTET தாள் 1-ற்கு விண்ணப்பிக்கலாம்.

U.G + B.Ed., / அதனையொத்த கல்வித் தகுதியுடன் பணியாற்றும் BT, BRTE, Special Edu. Teachers, MHM, (& HS.HM) உள்ளிட்டோர் TNTET தாள் 2-ற்கு விண்ணப்பிக்கலாம்.

ஒரு SGT / PHM பதவி உயர்விற்கான U.G + B.Ed., தகுதியுடன் இருப்பின் TET தாள் 2-ற்கு விண்ணப்பிக்கலாம்.

இரு தாள்களையும் எழுதுவோர் தனித்தனியே உரிய கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.

*எப்போது & எப்படி விண்ணப்பிப்பது?*

2026 பிப்ரவரி 18 முதல் ஏப்ரல் 10 வரை http://www.trb.tn.gov.in என்ற இணைய முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். *விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு? எப்படி செலுத்த வேண்டும்?*

SC, SCA, ST & மாற்றுத்திறனாளி எனில் ரூ.300/-

மற்றவர்களுக்கு ரூ.600/-

Net banking / Credit Card / Debit Card பயன்படுத்தி இணையப் பரிவர்த்தனை மூலம் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்.

*Onlineல் விண்ணப்பிக்க என்னென்ன தேவைப்படும்?*

1. Mobile No.

2. E-mail ID

3. Passport size colour photograph (Jpg/Jpeg/Png : 40-60 KB)

4. Signature (Jpg/Jpeg/Png : 20-40 KB)

5. TRB வெளியிட்டுள்ள Service Certificate DEO / CEO counter sined உடன் (Pdf : 250-300 KB)

6. Community Certificate (Pdf : 250-300 KB)

7. S.S.L.C., Mark sheet (Pdf : 250-300 KB)

8. H.Sc., Mark sheet (Pdf : 250-300 KB)

9. D.T.Ed., Diploma Certificate (Pdf : 250-300 KB)

தாள் - 2 எனில்,

9. U.G Consolidated / All semesters Marksheets and Degree / Provisional Certificate (Pdf : 250-300 KB)

10. B.Ed., Consolidated / All semesters Marksheets and Degree / Provisional Certificate (Pdf : 250-300 KB)

மாற்றுத்திறனாளி எனில்,

* Differently Abled Certificate (Pdf : 250-300 KB)

(அசல் சான்றிதழ்களைத்தான் Scan செய்து தனித்தனி Pdfஆக பதிவேற்ற வேண்டும். Xerox & Attested வேலைகள் இல்லை.)

*விண்ணப்பத்தில் பிழை இருந்தால் என்ன செய்வது?*

2026 ஏப்ரல் 11, 12 & 13 தேதிகளில் தேவையான திருத்தங்களைச் செய்து கொள்ளலாம்.

*எப்போது - எங்கே - எப்படி தேர்வு எழுத வேண்டும்?*

தேர்வு மையத்தை TRB முடிவு செய்து Hall Ticketல் குறிப்பிட்டு Onlineல் வெளியிடும். 2026 ஜூலை 4 & 5 தேதிகளில் தேர்வு நடத்த TRB உத்தேசித்துள்ளது. இத்தேதி உறுதியானால் அதற்கு முன்னதாக Hall Ticket வெளியாகும்.

OMR Sheetல் விடைகளை நிரப்பி அளிக்கும் படியாக 150 மதிப்பெண்களுக்கு கொள்குறி வகையில் 150 வினாக்களுடன் தமிழ் & ஆங்கில வழியில் தேர்வு நடைபெறும். தேர்வு மொழியை விண்ணப்பத்திலேயே நாம் முடிவு செய்து அளிக்கலாம். *TNTET தாள்-1ற்கான பாட வாரியான மதிப்பெண்கள் என்னென்ன?*

1. 6-11 வயதிற்கான குழந்தை உளவியல் & கற்பித்தல் முறை : 30 மதிப்பெண்

2. மொழிப்பாடம் : 30 மதிப்பெண்

3. ஆங்கிலம் : 30 மதிப்பெண்

4. கணக்கு : 30 மதிப்பெண்

5. சூழ்நிலையியல் : 30 மதிப்பெண்

(5ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் வினாக்கள் அமையும் என்றாலும் பத்தாம் வகுப்பு வரை கேட்கப்படவும் வாய்ப்புண்டு)

*TNTET தாள்-2ற்கான பாட வாரியான மதிப்பெண்கள் என்னென்ன?*

1. 11-14 வயதிற்கான குழந்தை உளவியல் & கற்பித்தல் முறை : 30 மதிப்பெண்

2. மொழிப்பாடம் : 30 மதிப்பெண்

3. ஆங்கிலம் : 30 மதிப்பெண்

4. Maths / Science பட்டதாரிகளுக்கு, கணக்கு & அறிவியல் : 60 மதிப்பெண்

5. History பட்டதாரிகளுக்கு, சமூகவியல் : 60 மதிப்பெண்

6. மற்ற பாட பட்டதாரிகள் மேலேயுள்ள 4 / 5ல் ஒன்றை சுய விருப்பத்தின் பேரில் தேர்வு செய்துகொள்ளலாம்.

(6 - 8 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் வினாக்கள் அமையும் என்றாலும் +2 வரை கேட்கப்படவும் வாய்ப்புண்டு)

*தேர்ச்சி பெற எத்தனை மதிப்பெண்கள் பெற வேண்டும்?*

SC / SCA / ST : 60 மதிப்பெண்கள்

BC / BCM / MBC / DNC : 75 மதிப்பெண்கள்

மற்றவர்களுக்கு : 90 மதிப்பெண்கள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.