2026-27ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை - 01.03.2026 முதல் மாணவர் சேர்க்கை தொடங்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.
தொடக்கக் கல்வி -2026-27ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை - 0103.2026 முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்குதல் 5+ வயதுடைய குழந்தைகளை அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சேர்க்கை செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 5 வயது பூர்த்தி அடைந்த மற்றும் பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1 முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பார்வை (3)யில் காணும் அரசாணையில் வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஆணைகள் வெளியிடப்பட்டு உள்ளது.
மேற்படி அரசாணையில் தெரிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை கவனமுடன் பின்பற்றி 2026-27ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைப் பணிகளை ஒவ்வொரு பள்ளியிலும் 01.03.2026 முதல் தொடங்கிட அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக உரிய அறிவுரைகள் வழங்கிட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை
15.85.67600T. 003675/682/2026,
நாள்.23.02.2026.
பொருள்: தொடக்கக் கல்வி 2026-27ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை 01.03.2026 முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்குதல் 5+ வயதுடைய குழந்தைகளை அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சேர்க்கை செய்தல்-அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக
பார்வை:
1. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009
2. அரசாணை (நிலை) எண். 173, பள்ளிக் கல்வித் (சி2) துறை, நாள்.08.11.2011
3. அரசாணை (நிலை) எண். 81, பள்ளிக் கல்வித் (பக5(1)) துறை, நாள். 15.03.2024
அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 5 வயது பூர்த்தி அடைந்த மற்றும் பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1 முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பார்வை (3)யில் காணும் அரசாணையில் வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஆணைகள் வெளியிடப்பட்டு உள்ளது.
மேற்படி அரசாணையில் தெரிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை கவனமுடன் பின்பற்றி 2026-27ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைப் பணிகளை ஒவ்வொரு பள்ளியிலும் 01.03.2026 முதல் தொடங்கிட அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக உரிய அறிவுரைகள் வழங்கிட அனைத்து மாவட்டக் கல்வி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அலுவலர்கள்
(தொடக்கக் கல்வி)
மேலும், அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வியை நிறைவு செய்யும் 5+ வயதுடைய குழந்தைகளை அந்தந்தக் குடியிருப்புப் பகுதிகளில் (Habitation and Catchment Area) அமைந்துள்ள அரசுப் பள்ளிகளில் சேர்க்கை செய்வதற்கும் அங்கன்வாடி மையங்கள் அல்லாது வேறு பள்ளிகளில் இருந்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு சேர்க்கை ஆக விரும்பும் குழந்தைகள் மற்றும் ஒன்றாம் வகுப்பு அல்லாது பிற வகுப்புகளுக்கு சேர்க்கை ஆக விரும்பும் மாணவர்களுக்கு உரிய வகுப்புகளுக்கான சேர்க்கை இடங்களை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள் வழங்கிட தேவையான அறிவுரைகளை வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக வழங்கிடுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு நலத்திட்டங்கள், திறன் வகுப்பறைகள் (Smart Class Rooms), உயர் தொழில் நுட்பக் கணினி ஆய்வகங்கள் (HI-Tech Labs), இன்றைய டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான கணினிசார் அடிப்படை அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்தும் TN - SPARK திட்டம் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு கல்வி உதவித் தொகைகள் போன்றவை குறித்த விழிப்புணர்வினை அனைத்து பொது மக்கள் மற்றும் அனைத்து பள்ளி வயது குழந்தைகளின் பெற்றோர்கள் மத்தியில் ஏற்படுத்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டைவிட குறைந்தபட்சம் 50 மாணவர்களைக் கூடுதலாக சேர்க்கை செய்யும் அரசுப் பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசால் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை ஊக்குவித்து 2026-27ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் கணிசமான அளவில் மாணவர் சேர்க்கை விகிதத்தினை அதிகரித்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களின் ஆலோசனைகளை பெற்று மாவட்டக் கல்வி அலுவலர்கள் செயல்படவும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கற்றல் - கற்பித்தல் பணியில் ஈடுபாடுடைய உள்ளூர் பிரமுகர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் மற்றும் சுயஆர்வலர்கள் ஆகியோருடன் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு அரசுப் பள்ளிகளில் 2026-27ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை மேம்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து சார்நிலை அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை ஆகும் மாணவர் விவரங்களை கல்வித் தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்ய வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக அறிவுரைகள் வழங்கிடவும் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை வாரம் ஒரு முறை ஒவ்வொரு வட்டாரக் கல்வி அலுவலர்களிடமிருந்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் பெற்று அதன் தொகுப்பறிக்கையை தொடக்கக் கல்வி இயக்ககத்திற்கு வழங்கிட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இணைப்பு: அரசாணை நகல்
பெறுநர்
2.2026
தொடக்கக் கல்வி இயக்குநர்
வழியாக
மாவட்டக் கல்வி அலுவலர்கள்
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி)
அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள்
அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள்
நகல்
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, தலைமைச் செயலகம், சென்னை - 9.
மாநிலத் திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை-6.
முதன்மைக் கல்வி அலுவலர்கள், அனைத்து மாவட்டங்கள்
தகவலுக்காக பணிவுடன் அனுப்பலாகிறது
சுருக்கம்
பள்ளிக் கல்வி -பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள், தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம்/நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1 ஆம் தேதி முதல் ஆணை பணிகள் நடைபெற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடுதல் வெளியிடப்படுகிறது.
திருவள்ளுவராண்டு 2055 சோபகிருதுவருடம், பங்குனி-02
பள்ளிக் கல்வித்[பக5(1)]துறை.
அரசாணை (நிலை) எண்.81
நாள்.15.03.2024
தமிழ் நாட்டிலுள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் பொருட்டு சிறப்பு முயற்சிகளாக இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், மற்றும் நான் முதல்வன் திட்டங்களுடன் பிற முன்னெடுப்புகளான தற்காப்புக்கலை பயிற்சி, கல்விச் சுற்றுலா, கல்வி சாரா இணை செயல்பாடுகளான இலக்கிய மன்றம், வினாடி வினா போட்டிகள், கலைத் திருவிழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் போன்றவை தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் மாணவர்களை அரசுப் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பள்ளிகளை நோக்கி ஈர்க்கும் வண்ணம் செயல்பட வேண்டியது பெற்றோர், ஆசிரியர் மற்றும் பள்ளிக் கல்வி நிர்வாகம் என்ற முக்கூட்டின் தலையாய கடமையாகும். அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் 5 வயது பூர்த்தியடைந்த மற்றும் பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1 முதல் பின்வரும் நடைமுறைகளை பின்பற்றிட பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கலாம் என முடிவு செய்து அரசு அவ்வாறே ஆணையிடுகிறது.
1. மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் கூட்டம்
(1) (ii) ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டங்கள் நடத்தி, அதில் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களையும் பங்கு பெறச் செய்து அரசு பள்ளிகளில் கட்டணமே பெறப்படாமல் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகின்றது என்பதை எடுத்துரைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர்களை (PRO) அணுகி அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக் குறித்து செய்தித்தாட்களில் செய்திகள் வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இப்பணியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் விரைந்து முடிக்க வேண்டும்.
2. தொடக்கக் கல்வி பதிவேடு (1) (ii) பள்ளி வாரியாக 5 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் குறித்து ஏற்கனவே எடுத்துள்ள கணக்கெடுப்பை உறுதி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பை வீடுகள் தோறும் சென்று சரியாகவும் துல்லியமாகவும் எடுத்து தொடக்கக் கல்வி பதிவேடானது (EER) பராமரிக்கப்பட்டு ஆண்டுதோறும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மூலம் புதுப்பிக்கப்பட வேண்டும். இந்த பதிவேட்டில் ஐந்து வயது நிரம்பிய அனைத்து மாணவர்களையும் முதல் வகுப்பில் சேர்க்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரப்படுத்துதல் அரசுப் பள்ளிகளில் தரமான இலவசக் கல்வி வழங்கப்படுவதை பொதுமக்கள் அனைவரும் அறியும் வண்ணம் பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தி மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க செய்ய வேண்டும்.
4. விழிப்புணர்வு மற்றும் சேர்க்கை பேரணி நடத்துதல் (0) அரசுப் பள்ளிகளில் காற்றோட்டமான வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, தமிழ்வழிப் பிரிவுகளுடன் துவங்கப்பட்டுள்ள ஆங்கில வழி பிரிவுகள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற தகுதியான ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என்பதனையும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் சார்ந்தும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் (ii) (iv) மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருவதை எடுத்துக்கூறி விழிப்புணர்வு பேரணி நடத்திட வேண்டும்.
விழிப்புணர்வு பேரணி மற்றும் பிரச்சாரமானது பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அனைத்து ஆசிரியர்களையும் கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.
பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையினை சிறப்பு முகாம் அடிப்படையில் கோடை விடுமுறைக்கு முன்னரே மேற்கொள்ள பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பொறுப்புக்களை பிரித்து வழங்கி சேர்க்கையை அதிகரித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிகளில் கவனம் பணிபுரியும் ஆசிரியர்கள் சிறப்பு செலுத்தி இரட்டை இலக்கத்திற்கு உயர்த்த எண்ணிக்கை மேற்கொள்ள வேண்டும்.
5. விழிப்புணர்வு பேரணி நடத்துவதற்கான முன்னேற்பாடுகள்
(1) (ii) 1. 2. 3. மாணவர் நடவடிக்கை
பேரணிக்கான முன்னேற்பாடு சார்பான கூட்டம் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடத்தப்பட வேண்டும். பேரணி நடத்துவதற்கான இடம், நேரம், நிகழ்வுகள், விளம்பரம் போன்ற விவரங்களை விரிவாக கலந்துரையாடி தமிழகம் முழுவதும் மிகச் சிறப்பாக பேரணி நடத்திடவும் கல்வியில் முதன்மை மாநிலமாக மாற்றிடவும், தமிழகத்தை இந்தியாவிலேயே பள்ளி வயது அனைத்து குழந்தைகளையும் பள்ளிகளில் சேர்த்துவிட்டது தமிழ்நாடு என்று பெருமை அடையும் வகையிலும் விரிவான ஏற்பாடுகள் செய்திட வேண்டும். பள்ளி அளவிலும், ஊராட்சி அளவிலும், வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் ஒரே நேரத்தில் இந்நிகழ்வுகள் நடைபெற வேண்டும். பள்ளி செல்லாக் குழந்தைகளின் பெற்றோர்களை இனம் கண்டு, அவர்களையும் அழைத்து அறிவுரைகள் வழங்கி அவர்களின் குழந்தைகளுடன் பேரணியில் இடம் பெறச் செய்திடவேண்டும். இப்பேரணிக்காகக் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றப்பட வேண்டும். கல்வி தொலைக்காட்சி, TAC TV மற்றும் அனைத்து தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு மூலம் விழிப்புணர்வு விளம்பரம் செய்தல் பேரணி பற்றிய சுவரொட்டிகள்.
வரவேற்பு வளைவுகள்.
4. துணி / Flex board விளம்பரங்கள்.
5. 6. ஆட்டோ / வேன் மூலம் ஒலிபெருக்கி விளம்பரம்.
பேரணி தொடக்க சிறப்புரை.
7. பேரணி முடிவில் சிறப்புக் கூட்டம்.
8. 9. துண்டு பிரசுர விநியோகம்.
மாணவர் சேர்க்கை பற்றிய வாசகம் அடங்கிய தட்டிப்பலகைகள். 10. விழிப்புணர்வு பாடல்கள். 11. சிறு நாடகங்கள்.
12. செய்தித் தாட்களில் விளம்பரம்.
13. தொலைக்கட்சி/உள்ளூர் கேபிள் தொலைக் காட்சியில் விளம்பரம்.
14. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவிப் பொருள் வழங்குதல். 15. தேர்வில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு பரிசு வழங்குதல். வரி
16. நூறு சதவீதம் குழந்தைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்பிய கிராமங்களுக்கு பரிசு வழங்குதல்.
6. பேரணியில் இடம் பெறத்தக்க வாசகங்கள்.
1. பள்ளி வயதுக் குழந்தைகள் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்த்திடுவோம்.
2. பள்ளி வயதுக் குழந்தைகளை வேலைக்கு அனுப்பாதீர், பள்ளிக்கு அனுப்புங்கள்.
3. கல்வி என்பது குழந்தையின் அடிப்படை உரிமை.
4. சமதர்ம சமுதாயம் நிலைபெற ஒரே வழி கல்வி.
5. குழந்தைகளே நாட்டின் கருவூலம்.
6. குழந்தைகளை அரசு பள்ளிக்கு அனுப்புவோம், நூறு விழுக்காடு சேர்க்கை இலக்கை அடைவோம்.
7. கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.
8. நாட்டின் வளர்ச்சிக்கு கல்வியே உயிர்நாடி.
9. ஐந்து வயது நிரம்பிய பின் வீட்டில் இருப்பது நியாயமா?
10. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கத்தின் மூலம் அனைவரையும் படிக்க வைப்போம்.
11. பெண்களை படிக்க வைப்போம் சமுதாய வளர்ச்சிக்கு வழி வகுப்போம்.
12. புத்தகச் சுமையின்றி முப்பருவ முறையில் படித்திடுவோம்.
13. பள்ளிக்குச் செல்வோம் பல்கலை அறிவோம்.
14. அனைவரும் படிப்போம் அகிலத்தை வெல்வோம்.
15. கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப் பெரிய ஆயுதம். 7. அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கிடைக்கும் முன்னுரிமைகள்
(i) அரசுப் பள்ளியில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீதம் முன்னுரிமை.
(ii) 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர் கல்வி பயில 7.5 சதவீதம் முன்னுரிமை.
அரசுப் பள்ளியில் (II) பெண் கல்வி இடை நிற்றலைத் தவிர்க்க அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு உயர்கல்வி பயில மாதந்தோறும் ரூ.1000/- (iv) மேற்படி முன்னுரிமை குறித்த விழிப்புணர்வினை பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துக் கூறி மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.
(v) பள்ளிக் கல்வியில் தொழில் நுட்ப விரிவாக்கம் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதலுடன் சேர்த்து எண்ணிய தொழில் நுட்ப விரிவாக்கத்தை (Digital Technology) முன்னெடுப்பு நிகழ்வாக தற்போது தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவதை எடுத்துக் கூறி மாணவர் சேர்க்கையை உயர்த்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
(vi) தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை டிஜிட்டல் முறையில் தகவல்களை பெற ஏதுவாக 3,090 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பள்ளிக்கு 10 கணினிகளும், 2,939 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 20 கணினிகளும் என மொத்தம் 6,029 பள்ளிகளுக்கு 5 அல்லது 6 Mbps வேகம் கொண்ட அகண்ட அலைவரிசைக் கற்றை வசதி அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் தற்போது ஏற்படுத்தப் பட்டுள்ளது. அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேவையான கற்றல் வளங்கள் (Learning Resources) மற்றும் டிஜிட்டல் மதிப்பிடு ஆகியவற்றை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
(vii) அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தொழில் நுட்பத்துடன் பொருத்தமான கற்றல் சூழலை உருவாக்கவும் உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் (Hi-Tech Labs) மற்றும் திறன் மிகு வகுப்பறைகள் (Smart Classrooms) அமைக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 6,029 உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயனடைந்து வரும் நிலையில் இவ்வசதியினை மேலும் விரிவாக்கம் செய்து அரசு நடுநிலை, உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வழங்கும் பொருட்டு 7,956 அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 8,180 உயர்தொழில் நுட்ப ஆய்வகங்கள் ரூ.523,52 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளன. உயர்தொழில் நுட்ப ஆய்வக வசதிகளுடன் சேர்த்து 1,129 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1,582 திறன்மிகு வகுப்பறைகள் (Smart Classrooms) ரூ. 30,05 கோடி மதிப்பீட்டிலும் அமைக்கப்பட உள்ளன.
8. அரசு வழங்கிடும் நலத்திட்டங்களை அனைவரும் அறியச்செய்தல்
(I) பள்ளி குழந்தைகளுக்கு அரசு வழங்கும் விலையில்லா பாடநூல்கள், இணை சீருடைகள், புத்தகப்பை, வண்ணப் பாடக் குறிப்பேடுகள் நான்கு பென்சில்கள், காலணிகள், கிரையான்ஸ், நிலவரைபடம், கணித உபகரணப் பெட்டி, பேருந்து பயண அட்டை, ஆதி திராவிட நல ஊக்கத் தொகை, மிகவும் பிற்படுத்தப்பட்ட/ சீர்மரபினர் வகுப்பு மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை, தூய்மைப் பணியாளர் குழந்தைகளுக்கான ஊக்கத்தொகை, திறனறித் தேர்வு ஊக்கத்தொகை, விபத்தில் வருவாய் ஈட்டும் கோவிட்-19ல் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான உதவித்தொகை, பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான உதவித் தொகை, மாற்றுத் திறனாளி குழந்தைகள் சலுகைகள் பெறுவதற்கான அடையாள அட்டை, மருத்துவ முகாம்கள் மற்றும் ஊக்கத் தொகை, காலை சிற்றுண்டி திட்டம், சத்தான சத்துணவுடன் வாரம் 5 முட்டை வழங்குதல் உள்ளிட்ட அரசு வழங்கிடும் நலத்திட்டங்களை அனைவரும் அறியச் செய்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், மேலும் மாதிரி பள்ளிகள், தகைசால் பள்ளிகள், உண்டு உறைவிட பள்ளிகளில் வழங்கப்படும் சலுகைகள் பற்றி பள்ளி வழியாக சுவரெட்டிகள்/ துண்டு பிரசுரங்கள் மூலம் விரிவான விளம்பரம் செய்யப்படவேண்டும். (ii) அரசு செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் அவ்வப்போது வெளியிடப்படும் குறும்படங்கள், தகவல் நழுவு (Information Slide) ஆகியவற்றை SMC மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெறும் பொழுதும் அவர்கள் பார்வையிடும் வகையில் உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.
9. பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் கடமைகள் வயதுடைய
(i). அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளில் 5+ குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
(ii) பள்ளி அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ள அனைத்து 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வீடுதோறும் நேரடியாக சென்று (Door to door canvas) சேர்க்கையை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
(ii) பள்ளியை சுற்றியுள்ள குடியிருப்புகளில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை உடனடியாக அரசுப் பள்ளிகளில் சேர்க்க (Spot Admission) நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
(iv) இடைநின்ற மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
(v) பள்ளி அமைந்திருக்கும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள 5 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களை 100% அரசுப் பள்ளிகளில் சேர்ப்பது தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியரின் தலையாய கடமையாகும்
(vi) பள்ளியின் சாதனைகள், வளர்ச்சி, பல்வேறு வகையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், கல்விமுறை, பாதுகாப்பு குறித்து பெற்றோர் ஆசிரியர் கூட்டம் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழுக் கூட்டத்தின் பெற்றோர்களிடம் எடுத்து கூற வேண்டும். வாயிலாக (Smart Class)
(vii) பள்ளிகளில் உள்ள திறன் வகுப்பறைகளின் செயல்பாடுகள் பற்றியும் விரைவுத் துலங்கல் குறியீடு (Quick Response Code) கற்றல் செயல்பாடு வழியாக பாடக் கருத்துகள் நடைபெறுகின்றது என்பதைப் பற்றியும் பெற்றோர்களுக்கு விரிவாக எடுத்துக் கூற வேண்டும். எளிமையாக்கப்பட்டு
(vill) தனியார் பள்ளிகளுக்கு நிகரான இணைய வழி (Online class) பாட கற்பித்தல் பற்றியும் புலனக்குழு (Whatsapp Group) வழி ஆசிரியர் மாணவர் பாட விரிவாகவும் தெளிவாகவும் பரிமாற்றங்கள் பற்றியும் பெற்றோர்களுக்கு தெரிவித்தல் வேண்டும்.
(ix) மாணவர்கள் சேர்க்கை பற்றி சமூக வலை தளங்களில் ஆடியோ /வீடியோ பதிவுகள் இடம் பெறச் செய்ய வேண்டும்.
(x) பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு ஊக்கப்பரிசு வழங்குவதன் மூலம் மாணவர் சேர்க்கையை மேலும் அதிகரிக்க வேண்டும்.
10. பள்ளி மேலாண்மைக் குழு
i) பள்ளி அமைந்துள்ள குடியிருப்புப் பகுதிகளை பிரித்துக் கொண்டு, ஒவ்வொரு குடியிருப்பில் உள்ள பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஆசிரியர்களோடு இணைந்து அப்பகுதியில் உள்ள பள்ளி வயது குழந்தைகளின் பெற்றோர்களிடம் பள்ளியின் சிறப்புகளை எடுத்துக்கூறி மாணவர் சேர்க்கப்பட வேண்டும்.
(ii) பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் தங்களது குழந்தைகளின் சிறப்பான செயல்பாடுகளை அப்பகுதியில் உள்ள பள்ளி வயது குழந்தைகளின் பெற்றோர்களிடம் நேரடியாக உரையாட செய்து அதன் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை உறுதி செய்தல் வேண்டும்.
(II) பள்ளி மேலாண்மை குழு கூட்டங்களுக்கு மேலாண்மைக் குழுவில் உள்ள உறுப்பினர்கள் குழந்தைகளின் பெற்றோர்களை வரவழைத்து பள்ளி தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை திரையிட்டு அரசு வழங்கும் நலத்திட்டங்களை எடுத்துக்கூறி அதன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்துதல் வேண்டும். (iv) பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களான தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர் ஆகியோர் ஒன்றிணைந்து குழுவாக செயல்பட்டு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் பற்றி கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
11.பள்ளி மேலாண்மைக் குழுவின் பங்கு (SMC)
(i) ஆசிரியர்கள் பள்ளி பற்றிய சிறப்புகளை பொது வெளியில் எடுத்துக் கூறுவதை விட பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் தாங்கள் வசிக்கும் இடத்தில் உள்ள சக பெற்றோர்களிடத்தில் பள்ளி பற்றி கலந்துரையாடும்போது அவர்களால் அதிக தாக்கத்தினை ஏற்படுத்திட முடியும்.
(II) பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வீடு வீடாக சென்று அரசுப் பள்ளியின் சாதனைகள், கட்டமைப்பு வசதிகள், நலத்திட்டங்கள் கல்வி உதவி தொகைகள் பற்றி பெற்றோரிடம் நேரடியாக எடுத்துக் கூறவேண்டும்.
(i) பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் (SMC) மாணவர் சேர்க்கை தொடர்பான விழிப்புணர்வு பதாகைகள் எடுத்துச் சென்றும் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கலாம்.
(iv) நம் பள்ளி நம் பெருமை வலைதள செயலியை பொது மக்களிடம் எடுத்து கூறி அதன் தனித்துவம் சார்ந்து விளக்கி மூலம் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்.
(v) பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு பள்ளி மேலாண்மைக் குழுவின் சார்பில் பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தலாம்.
12. இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் (ITK) பங்கு (i) தன்னார்வலர்கள் தங்களது குடியிருப்பில் உள்ள பள்ளி வயதுக் குழந்தைகள் அனைவரும் பள்ளியில் சேர்ந்துள்ள விபரத்தை உறுதிபடுத்துதல் வேண்டும்.
(II) பள்ளி செல்லாக் குழந்தைகள் தங்கள் குடியிருப்புப் பகுதியில் இருப்பின் அதிக கவனம் செலுத்திட வேண்டும்.
(ii) தன்னார்வலர்கள் வசித்து வரும் குடியிருப்புப் பகுதியில் புதிதாக பள்ளி வயது குழந்தைகள் உள்ள குடும்பம் குடிபெயர்ந்து வந்திருந்தால் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் வீட்டில் குழந்தைகள் இருப்பின் அக்குழந்தைகளை பள்ளியில் சேர்த்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
(iv) இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று கண்டறிந்த 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க உதவிட வேண்டும்.
👇👇👇👇👇
CLICK HERE TO DOWNLOAD DEE - 2026-27 Admission Proceedings PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.