SSLC அறிவியல் பாட செய்முறைத் தேர்வு - 2026 தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் Procedures of the Director of Government Examinations regarding SSLC Science Subject Practical Examination - 2026
This document is a circular from the Directorate of Government Examinations, Chennai, regarding the guidelines for conducting the March/April 2026 Class 10 public examinations for school students, specifically for the science subject practical exams, downloading marks lists, and uploading marks.
Guidelines for conducting science practical examinations for March/April 2026 Class 10 students are provided. Instructions cover downloading mark lists and uploading student marks.
District educational officers are instructed to forward these details to all high and higher secondary school headmasters/principals.
பொருள்:
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 மார்ச்/ஏப்ரல்-2026 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு பள்ளி மாணாக்கர்கள் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு செய்முறைத் தேர்வு நடத்துதல், மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் (Download) செய்தல் மற்றும் மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்தல் வழங்குதல் - தொடர்பாக. அறிவுரைகள்
பார்வை:
1. அரசாணை (நிலை) எண்.144 பள்ளிக்கல்வி (க்யு) துறை நாள்: 20.09.2011
2. அரசாணை (நிலை) எண்.62 பள்ளிக்கல்வி (அ.தே)த் துறை நாள்: 25.03.2022
மார்ச்/ஏப்ரல்-2026 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு நடத்தப்பட வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது.
எனவே, இணை இயக்குநர் (கல்வி), புதுச்சேரி / மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை / தனியார் பள்ளிகள்) தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் /முதல்வர்களுக்கும் இணைப்பில் காணும் விவரங்கள் அனுப்பி வைத்து, உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இணைப்பு: செய்முறைத் தேர்வு நடத்துதல் தொடர்பான அறிவுரைகள்
The provided text outlines the procedure for school headmasters to download blank mark lists and attendance sheets for practical examinations from the official government portal.
Access the portal at www.dge.tn.gov.in and log in with school credentials.
Download and print the "Practical Batch Sheet" for marks and the "Attendance Sheet" for student signatures.
Schools not acting as exam centers must submit these documents to their designated practical exam center headmasters.
செய்முறைத் தேர்வுகளுக்கான வெற்று மதிப்பெண் பட்டியல் மற்றும் வருகைப் பதிவு பட்டியலை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான வழிமுறைகள்:
1. பள்ளித்தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று 'Click to access Online Portal" என்ற Option-ஐ Click செய்யவும்.
2. தங்களது பள்ளியின் User ID மற்றும் Password-ஐ Type செய்து "Sign In" என்ற Option-gg Click
3. "Practical Exam" "Practical Batch Sheet" Option- Click @πώ Practical தேர்வுக்கான வெற்று மதிப்பெண் பட்டியல் Download ஆகும். அதனை Printout எடுத்துக் கொள்ளவும்.
4. 'Multiple Report "Download Attendance Sheet" 6 Click @ού Attendance Sheet Download ஆகும். இதனை தேர்வின்போது மாணவர்களிடம் கையொப்பம் பெற பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
5. இதனை அடிப்படையாகக் கொண்டு செய்முறைத் தேர்விற்கு மாணவர்களை அனுமதித்திடல் வேண்டும்.
குறிப்பு: செய்முறைத் தேர்வு மையங்களாக செயல்படாத பள்ளிகள் தேர்வர்களின் வெற்று மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் வருகைப்பதிவு பட்டியல்களை தொடர்புடைய செய்முறைத் தேர்வுமையப் பள்ளித் தலைமையாசிரியர்கள் /முதன்மைக் கண்காணிப்பாளர்களிடம் வழங்குதல் வேண்டும். செய்முறைத் தேர்வு நடத்தப்படும் முறை:
ஒவ்வொரு தேர்வரும் இயல் அறிவியல்/உயிர் அறிவியலுக்கான செய்முறைத் தேர்வு எழுத வேண்டும். குலுக்கல் முறையில் அவர்களுக்கான செய்முறைத் தேர்விற்கான வினாவைக் குலுக்கல் முறையில் பெற்று (பாடத்திட்டத்திற்கு 1 மணி நேரம் 1 மணி நேரம் = 2 மணி நேரம்) செய்முறைத் தேர்வினை எழுதி முடிக்க வேண்டும். இந்த முறையிலான தேர்வு ஒவ்வொரு குழுவிலும் 20 தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டு முதல் குழு இயல் அறிவியல் செய்முறை தேர்வு எழுதும் போது அதே சமயத்தில் மற்றொரு குழு உயிர் அறிவியல் செய்முறைத் தேர்வு எழுதுவர். பின்னர் முதல் குழு உயிர் அறிவியல் தேர்வு எழுதும் அதே சமயத்தில் மற்றொரு குழு இயல் அறிவியல் செய்முறைத் தேர்வு எழுதுவர். காலை/மாலை நடத்தப்படும் செய்முறைத் தேர்வு 23.02.2026-ல் தொடங்கி 28.02.2026-க்குள் முடிக்கப்பட வேண்டும்.
குறைந்தபட்ச மதிப்பெண்கள் மற்றும் செய்முறைத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அறிவியல் பாடத்தில் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் கருத்தியலில் 75 மதிப்பெண்களில் 20 மதிப்பெண்களும் மற்றும் செய்முறை தேர்வில் 25 மதிப்பெண்களில் 15 மதிப்பெண்களும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
அரசாணை (நிலை) எண்.62. பள்ளிக்கல்வி (அ.தே)த் துறை நாள்:25.03.2022-ன்படி, மாற்றுத் திறனாளி மாணவர்கள் விருப்பப்படின், செய்முறைத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு கோரி சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியரிடம் கடிதம் சமர்ப்பித்து விலக்கு பெற்றுக் கொள்ளலாம். விலக்கு கோரும் தேர்வர்களின் கோரிக்கைக் கடிதங்களை செய்முறைத் தேர்வு பள்ளி தலைமையாசிரியர்கள் பெற்று சம்பந்தப்பட்ட மாவட்டக் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலரிடம் ஒப்படைத்திடவேண்டும்.
மதிப்பெண் பட்டியல் தயாரித்தல் சார்ந்த முக்கிய அறிவுரைகள்:
புறத்தேர்களளர் ஒவ்வொரு தேர்வரின் செய்முறை விளாடத்தாளினை மதிப்பீடு செய்து அன்னாருக்கு செய்முறைத் தேர்வில் வழங்கப்பட்டுள்ள மதிப்பெண விடைத்தாளின் முகப்பு பக்கத்தில் எழுதிட வேண்டும்.
அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் பெற்ற புறமதிப்பீடு மற்றும் அகமதிப்பீடு மதிப்பெண்களை பதிந்து கூட்டுத் தொகை பதிய வேண்டும். பதிவெண்களுடன் கூடிய மதிப்பெண் நாட்களை Download செய்து பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் Online மூலம் Download செய்யப்பட்ட மதிப்பெண் தாட்களில் மதிப்பெண்கள் பதியப்பட வேண்டும். செய்முறைத் தேர்வு ஆரம்பிக்கும் நான் முன்னரே பெயர்பட்டியல் பெறப்பட்டவுடன், மதிப்பெண் பட்டியலில் அக மதிப்பெண்களை சம்பந்தப்பட்ட பாட ஆசிரியரால் பூர்த்தி செய்யப்பட்டு, மதிப்பெண் பட்டியலை செய்முறைத்தேர்வு மையப் பள்ளி தலைமையாசிரியர் / முதன்மைக் கண்காணிப்பாளர் பெற்றிட வேண்டும். இதனை சரிபார்த்து முதன்மைக் கண்காணிப்பாளரும் தனது கையொப்பத்தை வேண்டும்.
பின்னர், புறத்தேர்விற்கு ஒதுக்கப்பட்டுள்ள மதிப்பெண்களுக்கு மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை மதிப்பெண் தாளில் புறத்தேர்வாளர்களால் மந்தன முறையில் பதிவு செய்யப்பட்டு. அந்ததந்த மாணவருக்கான மொத்த மதிப்பெண்கள் பதியப்பட்டு பின்னர் மதிப்பெண் தாட்கள் உறையிலிட்டு அரக்கு முத்திரையிட்டு அந்தந்த முதன்மைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். செய்முறைத் தேர்வு விடைத்தாட்களையும் கட்டி, அரக்கு முத்திரையிட்டு முதன்மைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்
செய்முறைத் தேர்வு முடிவற்ற பின்னர் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து செய்முறைத் தேர்வு மைய பள்ளிகளிலிருந்தும் செய்முறை மதிப்பெண் பட்டியங்களை உரிய ஆவணங்களுடன் 02.03.2026-க்குள் சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு சம்பந்ததப்பட்ட மாவட்டக்கல்வி அலுவர்கள் (இடைநிலை / தனியார் பள்ளிகள்) அணைத்து செய்முறைத் தேர்வு மையப் பள்ளி தலைமையாசிரியர்கள் / முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும்
CLICK HERE TO DOWNLOAD அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.