பொதுத்தேர்வுகளுக்கான விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு புத்தாக்கப்பயிற்சி - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Refresher training for teachers evaluating answer scripts for public examinations - Proceedings of the Director of School Education
பள்ளிக்கல்வி அரசுத்தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 புத்தாக்கப்பயிற்சி - வழங்குதல் - தொடர்பாக.
தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விடைத்தாள் மதிப்பீடு குறித்து அவநம்பிக்கை ஏற்பட்டுவிடும் என்ற காரணத்தினால், அதனை களையும் பொருட்டு நடைபெறவிருக்கும் மார்ச்-2026 மேல்நிலை பொதுத்தேர்வுகளுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு விடைக்குறிப்பு மற்றும் விடைத்தாள் மதிப்பீட்டு மையப்பணிகளுக்கான கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி சரியான முறையில் விடைத்தாள் மதிப்பீடு செய்வது குறித்து ஒவ்வொரு மாவட்ட அளவிலும் புத்தாக்கப் பயிற்சி அளித்து அதன் விவரங்களை சென்னை -06 அரசுத்தேர்வுகள் இயக்ககத்திற்கு அனுப்புமாறும் அதன் நகலினை இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.