official communication from the Directorate of Government Examinations in Chennai regarding the extension of the deadline for uploading student details and paying examination fees for the 10th-grade public exams during the 2025-2026 academic year.
Sender: Mrs. K. Sasikala, Director of Government Examinations.
Recipients: District Chief Education Officers, District Education Officers, and Assistant Directors of Government Examinations.
Subject: Extension of time for uploading 10th-grade student details and paying fees.
Date: December 16, 2025.
SSLC NR 2026 NR DATE EXTENSION - பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு பள்ளி மாணாக்கரின் விவரங்களை பதிவேற்றம் செய்தல், தேர்வுக்கட்டணம். TML கட்டணம் செலுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் - DGE Proceedings - நாள். 16.12.2025
அனுப்புநர்
திருமதி.க.சசிகலா
அரசுத் தேர்வுகள் இயக்குநர்.
அரசுத் தேர்வுகள் இயக்ககம், - 600 006.
பெறுநர்
1.அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்
2.அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்
3.அனைத்து மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள்
ந.க.எண். 013061/81/2025
நாள். 16.12.2025
ஐயா / அம்மையீர்,
பொருள்:
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 2025 2026-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு பள்ளி மாணாக்கரின் விவரங்களை பதிவேற்றம் செய்தல், தேர்வுக்கட்டணம். TML கட்டணம் செலுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்குதல் தொடர்பாக. பார்வை:
1.அரசுத் தேர்வுகள் இயக்குநரின் இதே எண்ணிட்ட செயல்முறைகள் நாள்: 31.10.2025
2.இவ்வலுவலக இதே எண்ணிட்டக் கடிதம் நாள்:19.11.2025 மற்றும் 27.11.2025
பார்வை 1-ல் காணும் இவ்வலுவலகச் செயல்முறைகளில், 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பொருட்டு. அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கரது விவரங்களை 31.10.2025 19.11.2025 வரையிலான நாட்களில் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.
பார்வை 2-ல் காணும் இவ்வலுவலகக் கடிதத்தில், பத்தாம் வகுப்பு மணாக்கரின் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதற்கு 27.11.2025 வரை மற்றும் 05.12.2025 வரை கூடுதலாக கல அவகாசம் வழங்கப்பட்டது.
தற்போது, புதியதாக பதிவு செய்த மற்றும் ஏற்கனவே பதிவு செய்துள்ள சில பள்ளிகள் பெயர்ப்பட்டியல் தயாரிப்பு பணிகளைத் துவங்கிடாதக் காரணங்களால். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பணிக்காக இறுதி வாய்ப்பாக, மாணாக்கரின் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதற்கு 17.12.2025 முதல் 19.12.2025 வரை கூடுதலாக கால அவகாசம் வழங்கப்படுகிறது. மேலும், மேற்காணும் நாட்களில் தேர்வுக்கட்டணம் மற்றும் TML கட்டணம் செலுத்தாதப் பள்ளிகள் Online வழியாக செலுத்துமாறு தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித்தலைமையாசியர்கள்/முதல்வர்களைத் பணியினை விரைந்து முடித்திட தொடர்புகொண்டு மேற்காண் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும், பள்ளி வருகைப்பதிவேட்டில் உள்ள அனைத்து மாணவர்களின் விவரங்களும் எவ்வித விடுபடுதலுமின்றி, பெயர்ப்பட்டியல் தயாரிக்க வேண்டும். பெயர்ப்பட்டியலில் மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்கள் தவிர்த்து மற்ற மாணவர்கள் எவரேனும் விடுபட்டு இருப்பின் இவ்விவரம் தொடர்பாக பள்ளித் தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் உரிய விளக்கத்துடன் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை/தனியார் பள்ளிகள் வாயிலாக முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்திட வேண்டும். பின்னாளில் விடுபட்ட மாணவர்களை பெயர்ப்பட்டியலில் சேர்த்திட கோரும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள்மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இணைப்பில் காணும் பட்டியலில் உள்ள பள்ளிகள் தேர்வுக் கட்டணம் செலுத்தவில்லை எனத் தெரியவருவதால், அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட தேர்வுக்கட்டணம் செலுத்திடாதப் பள்ளிகளைத் தொடர்புக்கொண்டு, கட்டணங்களை ஆன்லைன் வழியாக செலுத்தியிருந்தால், உரிய ஆவணங்கள் E-Mai இரசீது / வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் ஆகியவற்றை சரிபார்த்து பெற்றுக்கொண்டும். கட்டணத்தினை செலுத்தாதப் பள்ளிகள் உரிய கட்டணத்தினை Online வழியாக மேற்காணும் நாட்களில் செலுத்திட சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு அறிவுறுத்திடவும். மேற்காண் பெறப்பட்ட மற்றும் கட்டணத்தொகைக்கான ரசீதுகளை உதவி இயக்குநர்கள் தங்கள் வசம் பள்ளிகளிடமிருந்து கடிதங்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு பள்ளி மாணாக்கரின் விவரங்களை பதிவேற்றம் செய்தல், தேர்வுக்கட்டணம். TML கட்டணம் செலுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் - DGE Proceedings - நாள். 16.12.2025 PDF
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.