மாவட்ட ஆட்சியரை பொதுமக்கள் எப்போது நேரில் சந்திக்கலாம்? - தெளிவுரை கடிதம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, December 29, 2025

மாவட்ட ஆட்சியரை பொதுமக்கள் எப்போது நேரில் சந்திக்கலாம்? - தெளிவுரை கடிதம்

மாவட்ட ஆட்சியரை பொதுமக்கள் எப்போது நேரில் சந்திக்கலாம்? - தெளிவுரை கடிதம் When can the public meet the District Collector in person? - Clarification letter

மக்கள் குறைதீர்வு நாள் மனு - திருப்பத்தூர் மாவட்டம் பத்து ரூபாய் இயக்கம் திருருமன்சார் என்பவர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க இணையதளத்தில் appointment option ஏற்படுத்த கோரியது தொடர்பாக

பார்வையில் காணும் மனுவில் திருப்பத்தூர் மாவட்டம், பத்து ரூபாய் இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் திருருமன்சார் என்பவர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க இணையதளத்தில் appointment option ஏற்படுத்த கோரியுள்ளது தொடர்பாக கீழ்க்கண்டவாறு விவரம் தெரிவிக்கப்படுகிறது.

மாவட்ட ஆட்சியரின் பணி மக்கள் தொடர்புடைய பணி என்பதால் கள ஆய்வுகள் மற்றும் ஆய்வுக்கூட்டங்கள் என பல்வேறு துறை சார்ந்த பணிகளில் ஈடுப்பட்டுள்ளதால் இணையதளத்தில் appointment option ஏற்படுத்த வழிவகை இல்லை.

எனவே மாவட்ட ஆட்சியரை ஒவ்வொரு வாரமும் நடைபெறும் மக்கள் குறை தீர்வு நாளில் நேரில் சந்திக்கலாம் மற்றும் மாவட்ட ஆட்சியரை அலுவலக நாட்கள் மற்றும் அலுவலக நேரங்களில் சந்திக்க வேண்டுமெனில் மாவட்ட ஆட்சியரின் முகாம் எழுத்தரின் அனுமதி பெற்று மாவட்ட ஆட்சியரை சந்திக்கலாம் என மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை (District Collector) நேரில் சந்தித்து மனு அளிக்கப் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றலாம்:

மக்கள் குறைதீர்க்கும் நாள் (Public Grievance Day): ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்.

நேரம்: பொதுவாக காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை பொதுமக்கள் ஆட்சியரை நேரில் சந்தித்து மனுக்களை வழங்கலாம்.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்: மாதம் ஒருமுறை (பொதுவாக ஒரு வெள்ளிக்கிழமை) விவசாயிகளுக்கான பிரத்யேகக் கூட்டம் நடைபெறும்.

ஆன்லைன் மூலம் மனு அளித்தல்: நேரில் செல்ல முடியாதவர்கள் Petition Processing Portal (gdp.tn.gov.in) அல்லது முதல்வரின் முகவரி (cmhelpline.tnega.org) இணையதளம் வழியாகவும் தங்கள் புகார்களைப் பதிவு செய்யலாம்.

பிற நாட்கள்: அவசரக் காலங்களில் அல்லது பிற வேலை நாட்களில் ஆட்சியரைச் சந்திக்க விரும்பினால், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அவரது உதவியாளரை அணுகி அனுமதி பெற வேண்டும்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் காலங்களில் இக்கூட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.