தமிழ் பண்டிதர் பயிற்சி (TPT) பெற்ற 8 பணிநாடுநர்களுக்கு விதித்தளர்வு மேற்கொண்டு தமிழ் பட்டதாரி ஆசிரியர்களாக பணிநியமன ஆணை வழங்க அனுமதித்து அரசாணை வெளியீடு A government order has been issued granting permission to provide appointment orders to 8 job seekers who have completed the Tamil Pandit Training (TPT) course, by granting them an exemption and appointing them as Tamil graduate teachers.
CLICK HERE TO DOWNLOAD தமிழ் பட்டதாரி ஆசிரியர்களாக பணிநியமன ஆணை வழங்க அனுமதித்து அரசாணை வெளியீடு PDF
a government order (G.O. No. 268, dated 20.11.2025) from the School Education Department regarding the appointment of Tamil graduate teachers. It details the approval for appointing eight candidates who qualified through a competitive exam in 2023 and hold a Tamil Pandit Training (TPT) qualification, granting them a relaxation of rules to be appointed as BT/BRTE teachers. The order references previous government orders, court judgments, and correspondence from the Teachers Recruitment Board and the Director of School Education.
Order Number: G.O. (Ms) No. 268
Date: November 20, 2025
Subject: Appointment of eight TPT qualified candidates as Tamil Graduate Teachers
Basis: Follows a Madras High Court order from July 8, 2024, to proceed with the selection process for qualified petitioners
பள்ளிக்கல்வி - பட்டதாரி ஆசிரியர் / வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுநர் (BT/BRTE) 2023ஆம் ஆண்டிற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித் தேர்வு மூலம் தெரிவு பெற்ற தமிழ் பண்டிதர் பயிற்சி (TPT) பெற்ற 8 பணிநாடுநர்களுக்கு விதித்தளர்வு மேற்கொண்டு தமிழ் பட்டதாரி ஆசிரியர்களாக பணிநியமன ஆணை வழங்க அனுமதி வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது. பள்ளிக்கல்வித|மக.3(2)| துறை
அரசாணை (நிலை) எண். 268
நாள் 20.11.2025
திருவள்ளுவர் ஆண்டு 2056 விசுவாவசு வருடம். கார்த்திகை 4
படிக்கப்பட்டவை:-
1. அரசாணை (நிலை) எண் 13, பள்ளிக் கல்வித் (பக3(1)) துறை. நாள் 30.01.2020
2. நீதிப்பேராணை மனு எண். 16228/2024, 15483/2024 மற்றும் 14823/2024-ன் மீதான மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பாணை நாள் 08.07.2024
3. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், ஆசிரியர் தேர்வு வாரியம் கடித ந.க.எண்.1109/C.V.1/S2/2024, நாள் 05.05.2026.
4. பள்ளிக்கல்வி இயக்குநரின் கடித ந.க. எண்.22539/82/52/ 2014. நாள் 11.09.2025 மற்றும் 17.10.2025
திருமதி. ஆர்.கலைவாணி, ஏ.தேவி மற்றும் எம்.பி.சுதாகர் ஆகியோரால் ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.3/2023ன்படி பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) நியமனத்திற்கு தகுதியானவர் என்று ஆணையிடுமாறு கோரி தொடரப்பட்ட வழக்கு W.P.No.16228. 15483 மற்றும் 14823/2024-ன் மீதான மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் 08.07.2024 நாளிட்ட தீர்ப்பாணையில் கீழ்க்கண்டவாறு ஆணை வழங்கப்பட்டுள்ளது
xxx xxx xxx The respondents are directed to proceed further with the selection process, if the petitioner qualified in their written examination".
2. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பாணையின்படி, பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் (BT/BRTE)-2023 தேர்விற்கு Pulavar (Title) (மூன்று ஆண்டுகள்). தமிழ் பண்டிதர் பயிற்சி மற்றும் இளங்கலை இலக்கியம் (B.Lit.,). தமிழ் பண்டிதர் பயிற்சி கல்வித் தகுதியை பெற்று, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த 4 நபர்கள் மற்றும் இதர 4 நபர்கள் ஒத்த நபர்களாக கருதப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்ட நிலையில், இந்த 8 நபர்களுக்கு பணிநியமன ஆணை வழங்குவதற்கு அனுமதி வழங்குமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் மேலே நான்காவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில் அரசை கேட்டுக் கொண்டுள்ளார். 3. மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் மறு வெளியீடு செய்யப்பட்ட தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப்பணி சிறப்பு விதிகளில் விதி 6இல் இணைப்பு 1இல் Class II (Graduate Teacher -Tamil)இல் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதியை நிறைவு செய்யாத நிலையில், வழக்கு எண்கள் W.P.No.16228/2024, 15483/2024 14823/2024- ( 08.07.2024 நாளிட்ட மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பாணையை செயல்படுத்தும் பொருட்டு, பட்டதாரி ஆசிரியர் /வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுநர் (BT/ BRTE) - 2023ம் ஆண்டிற்கு போட்டி தேர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) பணியிடத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்ட கீழ்க்காணும் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள 8 பணிநாடுநர்கள் (வழக்கு தொடுத்த நபர்கள் 4 மற்றும் இதர ஒத்த நபர்கள் 4) பொருட்டு. தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016, பிரிவு 58-ல் மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி சிறப்பு விதிகளில் விதி 6இல் இணைப்பு (இல் Category 2. Class II Sub rule (ii)-க்கு தளர்வளித்து. இதனை இதர நபர்கள் மேற்கோள் காட்டக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில், கீழ்க்காணும் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள 8 பணிநாடுநர்களுக்கு பணிநியமனம் வழங்க பள்ளிக்கல்வி இயக்குநருக்கு அனுமதி வழங்கி அரசு ஆணையிடுகிறது:-
மேலும், இந்நேர்வில் மேற்காண் 8 பணிநாடுநர்களுக்கு விதித்தளர்வு மேற்கொண்டு பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் வழங்கப்படுவதால், அவர்கள் 2023-ஆம் ஆண்டிற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித் தேர்வு மூலம் தெரிவு செய்யப்பட்டு பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்ட இதர ஆசிரியர்கள் நியமனம் செய்த நாள் முதல் முன்தேதியிட்டு நியமனம்/ பணிவரன்முறை மற்றும் அதற்குரிய பணப்பலன்களை வழங்க கோர இயலாது என்ற நிபந்தனையுடன் இவ்வாணை வெளியிடப்படுகிறது.
4. இவ்வரசாணை இத்துறையின் கோப்பு எண்.8243/ப.க.3(2)/2025-இல். 05.11.2025 அன்று பெறப்பட்ட மனிதவள மேலாண்மைத் துறையின் இசைவுடன் வெளியிடப்படுகிறது.
(ஆளுநரின் ஆணைப்படி)
சந்தர மோகன் B
அரசு முதன்மைச் செயலாளர்.
CLICK HERE TO DOWNLOAD தமிழ் பட்டதாரி ஆசிரியர்களாக பணிநியமன ஆணை வழங்க அனுமதித்து அரசாணை வெளியீடு PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.