GPF / DCRG / CPS ஓய்வூதிய நிலுவை இனங்களை முடிக்க சிறப்பு குழு
19.06.2025 அன்று நடைபெற்ற சென்னை நிதித்துறை முதன்மை செயலாளர் அவர்களின் ஆய்வுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வி இயக்ககம் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் GPF / DCRG / CPS இனங்கள் அதிகளவில் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் , மாநிலயக்கணக்காயரின் உத்திரவு வரப்பெற்றும் தடையின்மைச்சான்று வழங்காமல் நிலுவை வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து மேற்படி நிலுவை இனங்களை உடன் முடிவு செய்து அறிக்கை சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது . இதனை தொடர்ந்து இத்துடன் இரண்டு பட்டியல்கள் மற்றும் உரிய அறிவுரைகள் கீழ்கண்டவாறு தெரிவிக்களாகிறது . பட்டியல் 1 ஜூலை 2025 முதல் அக்டோபர் 2025 முடிய உள்ள ஓய்வு பெற உள்ள பணியாளர்களின் GPF / DCRG ஆகிய இனங்களின் ( Excel Format ) பட்டியல் 2 ஏப்ரல் 2024 முதல் ஜூன் 2025 வரை மாநிலயக்கணக்காயரின் உத்திரவு வரப்பெற்றும் தடையின்மைச்சான்று வழங்காமல் நிலுவையாக வைக்கப்பட்டுள்ளவர்கள் விவரம் ( Excel Format )
மேற்படி GPF / DCRG / CPS ஓய்வூதிய நிலுவை இனங்களை முடிக்கும் பொருட்டு 12.07.2025 ( சனிக்கிழமை ) அன்று காலை 10.00 மணி அளவில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களிலும் , மாவட்ட கல்வி அலுவலங்களிலும் சிறப்புகுழு அமைத்து கீழ்கண்ட பணிகளை மேற்கொள்வதற்கு கேட்டுக்கொள்ளப்படுகிறது .
GPF, DCRG,CPS- Pending
👇👇👇👇
CLICK HERE TO DOWNLOAD GPF, DCRG,CPS- Pending PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.