ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 10 مايو 2025

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது?

ஆசிரியர்களின் பணியிட மாறுதல் கவுன்சிலிங் .... எப்போது?

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் , பொது மாறுதல் கவுன்சலிங் ஆண்டுதோறும் மே மாதம் தொடங்கி நடத்தப்படுவது வழக்கம். இதற்கான அறிவிப்பு ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும் . தொடர்ந்து பொது மாறுதல் கேட்கும் ஆசிரியர்களிடம் எமிஸ் தளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்படும். இதற்கு ஒரு வாரம் காலஅவகாசம் வழங்கப்படும். ஆசிரியர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் பட்டியல் தயாரித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிடும்.

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது ?

*நாளிதழ் செய்தி* ...

அரசு பள்ளி ஆசிரியர்களுக் கான பணிநிரவல் பொது மறுகல் கவுன்சலிங் ஆண்டுதோறும் மே மாதம் தொடங்கி நடத்தப்படுவது வழக்கம். இதற்கான அறிவிப்பு ஏப்ரல் மாதத்தில் வெளியிடப் படும். தொடர்ந்து பொது மாறுதல் கேட்கும் ஆசிரியர்களிடம் எமிஸ் தளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்படும், இதற்கு ஒரு வாரம் காலஅவகாசம் வழங்கப்படும்.

ஆசிரியர்களிடம் இருந்து பெறப் படும் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் பட்டியல் தயாரித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிடும்.

இந்த முன்னுரிமை பட்டியலில் ஆசிரியர்கள் யாருக்காவது ஆட்சேபணை இருந்தால் அது தொடர்பாக முறையிட குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்படும். அதன்பிறகு இறுதி முன்னுரிமை பட்டியல் வெளி யிடப்படும். அந்த பட்டியலின் அடிப்படையில், ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம். வருவாய் மாவட்டம். கல்வி மாவட்டம். ஒன்றியத்துக்குள் பொது மற்றும் பணி நிரவல் கவுன்சலிங் மே மாதம் முழுவதும் ஆன்லைன் வாயிலாக நடத்தப் படும்,

அதன்பிறகு அடுத்த கல்வியாண்டு பள்ளிகள் திறப்பதற்கு முன்பு ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் உத்தரவு வழங்கப்படும். ஆசிரியர்கள் தங்களுக்கான புதிய பள்ளிகளில் பணியில் சேர வேண்டும். இந்த பணிகள் கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு முன்பு நிறைவு பெறும்.

கோடை விடுமுறை முடிந்து

வரும் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன் படி பள்ளிகள் திறக்க இன்னும் 20 நாட்களே உள்ளன. ஆனால், ஆசிரியர் பணியிட மாறுதல் கவுன்சலிங் தொடர்பாக எந்த அறிவிப்பையும் பள்ளிக்கல்வித் துறை இதுவரை வெளியிடவில்லை...

இது குறித்து ஆசிரியர்கள் சிலர் கூறியது:

ஒரு கல்வியாண்டு முடிந்து அடுத்த கல்வியாண்டு தொடங்கும் முன் இடைப்பட்ட கோடை விடுமுறையில் ஆசிரியர் பணியிட மாறுதல் கவுன்சலிங்கை நடத்தி முடிக்க வேண்டும் அப்போது தான் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு புதிய பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியில் சேர வசதியாக இருக்கும். ஜூன் மாதம் பள்ளிகள் திறந்ததும். அடுத்த கல்வியாண்டுக்கான புதிய பாடங்களை ஆசிரியர்கள் கற்பிக்க தொடங்குவார்கள். பாடங்கள் தொடங்கிய பிறகு மாணவர்கள் குறிப்பிட்ட ஆசிரியர்களோடு நெருங்கி பழகிவிடுவார்கள். அவ்வாறு நெருங்கி பழகிய பிறகு ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு மாற்றினால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படும்.

ஆசிரியர் பணியிட மாறுதல் கவுன்சலிங் முடிந்த பிறகு முந்தைய கல்வியாண்டின் ஆகஸ்ட் 31ம் தேதி நிலவரப்படி மாணவர் களின் எண்ணிக்கை அடிப்படை காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை எவ்வளவு? உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை எவ் வளவு என்று பட்டியல் தயாரிக்கப் படும்.

காலிப் பணியிடங்களில் பணி நிரவல் மூலம் உபரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர். இது "தான் நடைமுறை. ஆனால் இந்த தடைமுறை ஒவ்வொரு ஆண்டும் மீறப்படுகிறது அரசு இதில் அக்கறை இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் இஷ்டத்துக்கு பணியிட மாறுதல் கவுன்சலிங்கை நடத்துகிறது. செப்டம்பர் மாதம் வரை நடத்தப்படுவதால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சலிங் குறித்த அறிவிப்பை உடனடியாக அறிவிக்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஆசிரியர்கள் கூறினர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.