EMIS -ல் ஆண்டுத் தேர்வு முடிவுகளை பதிவேற்றம் செய்வதில் சிக்கலா? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 10 مايو 2025

EMIS -ல் ஆண்டுத் தேர்வு முடிவுகளை பதிவேற்றம் செய்வதில் சிக்கலா?



EMIS -ல் ஆண்டுத் தேர்வு முடிவுகளை பதிவேற்றம் செய்வதில் சிக்கலா?

தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு ஆண்டுத் தேர்வு முடிவுகளை 'எமிஸ்'ல் பதிவேற்றம் செய்யும் போது ஆசிரியர்கள் 'பாஸ்' மதிப்பெண் வழங்கிய மாணவர்களுக்கு எமிஸில் 'பெயில்' என பதிவேற்றம் ஆவதாக ஆசிரியர்கள் புலம்புகின்றனர். ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை ஆண்டுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ளன. அதற்காக தேர்ச்சி விவரத்தை எமிஸில் பதிவேற்றும் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்' திட்டம் உள்ளது. எனினும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள், அவர்கள் தேர்ச்சி விவரம் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஆசிரியர்கள் குழப்பம்

ஒன்பதாம் வகுப்பில் 35 மதிப்பெண் பெற்றால் தான் மாணவர்கள் தேர்ச்சி பெற முடியும். ஆனால் அந்தந்த அரசு பள்ளிகளில் செயல்படும் தேர்ச்சிக் குழு, ஒவ்வொரு ஆண்டும் 'தேர்ச்சிக்கு தேவையான 35 மதிப்பெண் பெறாத மாணவர்கள் 25 மதிப்பெண் பெற்றிருந்தாலும் அவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கலாம்' என தீர்மானங்கள் நிறைவேற்றுகின்றன.

இதுபோன்ற பள்ளித் தேர்ச்சிக் குழு தீர்மானங்களை பின்பற்ற கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ஆனால் எமிஸில் மதிப்பெண் பதிவேற்றம் செய்யப்படும்போது 35 மதிப்பெண்ணுக்கு குறைவாக பெற்ற மாணவர்களை 'பெயில்' என பதிவு செய்கிறது. இதனால் ஆசிரியர்கள் குழப்பமடைகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

பள்ளிகளில் செயல்படும் தேர்ச்சி குழுக்கள் தீர்மானத்தை பின்பற்ற வேண்டாம் என உத்தரவிட வேண்டும் அல்லது 35 மதிப்பெண்களுக்கும் கீழ் பதிவேற்றம் செய்தாலும் தேர்ச்சி பெற்றதாக பதிவாகும் வகையில் 'எமிஸில் சாப்ட்வேரை மாற்றியமைக்க வேண்டும். ஆனால் இந்த இரண்டு பிரச்னைகளையும் சரிசெய்யாமல் ஆண்டுத் தேர்வு முடிவுகளை பதிவேற்றம் செய்ய ஆசிரியர்களை கட்டாயப்படுத்துகின்றனர். 1-8 ம் வகுப்பு வரை 'ஆல்பாஸ்' என்பதால் அவ்வகுப்பு மாணவர்கள் தேர்ச்சியில் பெரிய குழப்பம் எழுவதில்லை.

ஆனால் ஒன்பதாம் வகுப்பு விவரம் பதிவேற்றம் ஒரு போராட்டமாகவே மாறிவிட்டது. 9ம் வகுப்பில் குறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்களை தேர்ச்சி பெற வைத்து பத்தாம் வகுப்புக்கு கொண்டுசெல்லும் போது, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி கடுமையாக பாதிக்கிறது.

ஆனால் ஏன் தேர்ச்சி பாதித்தது என ஆசிரியர்களிடம் தான் அதிகாரிகள் கேள்வி எழுப்பி விளக்கம் கேட்கின்றனர். இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றனர்.

EMIS - Student Promotion module - New Update

EMIS - Student Promotion module will be enabled by Friday (09.05.2025).

🌾TC module is on, schools can generate TC

🌾Pl ensure entry of annual marks in EMIS before promoting the profiles ( as per the instructions of DEOs concerned)

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.