வர போகுது பழைய ஓய்வூதிய திட்டம்! அரசு ஊழியர்களுக்கு அடிக்க போகுது ஜாக்பாட் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 5 مايو 2025

வர போகுது பழைய ஓய்வூதிய திட்டம்! அரசு ஊழியர்களுக்கு அடிக்க போகுது ஜாக்பாட்

வர போகுது பழைய ஓய்வூதிய திட்டம்! அரசு ஊழியர்களுக்கு அடிக்க போகுது ஜாக்பாட்

சென்னை: பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் தமிழகத்தில் அமல்படுத்தப்பட வேண்டும் என அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஈட்டிய விடுமுறை சரண்டர் மூலம் பணம் பலன் உள்ளிட்ட ஒன்பது அறிவிப்புகள் தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் ஜூன் மாதத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தினர். ஏற்கனவே சரண்டர் விடுப்பு தொடர்பாக ஒன் இந்தியா தமிழ் செய்தி வெளியிட்டு இருந்த நிலையில் அடுத்த 2 நாட்களில் அது தொடர்பான அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. 2023 முதல் மத்திய அரசு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. அப்போது முதல் இந்த திட்டம் தான் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு, அதன் அடிப்படையில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பணப்பலன்கள் வழங்கப்படுகிறது.

ஆனால் அதற்கு முன்னதாக, அதாவது 2023 ஆம் ஆண்டுக்கு முன்னதாக அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டமே நடைமுறையில் இருந்தது. இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டுமென ஆசிரியர் சங்கங்கள் அரசு ஊழியர்கள் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இதுகுறித்த அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ராஜஸ்தான், திரிபுரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அந்த மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. ஆனால் தமிழகத்தில் இதுவரை பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் எனப்படும் என்பிஎஸ் மட்டுமே அமலில் இருக்கிறது. 2003க்கு பிறகு பல ஆட்சி மாற்றங்கள் நடந்து விட்டது. அதிமுக, திமுக மாறி மாறி ஆட்சிக்கு வந்த போதும் ஒவ்வொரு தேர்தலிலும் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் என கட்சிகள் தங்கள் தேர்தல் வாக்குறுதியை கூறுவார்கள். ஆனால் தற்போது வரை அந்த அறிவிப்பு அரசாணையாக மாறவில்லை. இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சி நான்காவது ஆண்டை நிறைவு செய்து ஐந்தாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கப் போகும் நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இல்லையென்றால் வரும் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என அவர்கள் நேரடியாகவே கூறி வருகின்றனர்.

மேலும் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணப்பலன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் அரசு ஊழியர்களிடையே ஏற்கனவே இருக்கிறது. இந்நிலையில் விரைவில் அது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என ஒன் இந்திய தமிழ் செய்தி வெளியிட்டிருந்தது. அதற்கடுத்த இரண்டு நாட்களிலேயே தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 9 அறிவிப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த நிலையில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வு ஊதிய திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்பது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலக வட்டாரத்திடம் விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை நிச்சயம் திமுக செயல்பாட்டுக்கு கொண்டு வரும். ஆனால் நான்காண்டுகள் நிதிநிலை சிக்கல் காரணமாக செயல்படுத்த முடியவில்லை. இந்த நேரத்தில் தேர்தல் வரும் போது அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வாக்குகள் மற்றும் அவரது குடும்பத்தினரின் வாக்குகள் திமுகவுக்கு தேவை. இதனால் அரசு ஊழியர்களை பகைத்துக் கொள்ள திமுக விரும்பவில்லை. அதே நேரத்தில் ஆட்சி நிறைவடைவதற்கு முன்பாக இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவே ஸ்டாலின் விரும்புகிறார். பிப்ரவரி மார்ச் மாதங்களில் தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிடும் என்பதால் அப்போது அறிவிக்க முடியாது.

தேர்தல் நேரத்தில் அறிவித்தாலும் தேர்தலுக்காகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது என எதிர்க்கட்சிகளும் விமர்சிக்கும். அதனால் தேர்தலுக்கு ஒரு ஆண்டு முன்பாக அதாவது வரும் ஜூன் மாதத்திலேயே இது தொடர்பான அறிவிப்புகள் இருக்கும் என்கின்றனர். ஜூன் இரண்டாவது வாரம் அல்லது மூன்றாவது வாரத்தில் இது தொடர்பான அறிவிப்பு நிச்சயம் இருக்கும் என்கின்றனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.