அரசு பள்ளி மாணவர்களை JEE Advanced போட்டித் தேர்விற்கு தயார்படுத்துவதற்கான பயிற்சி அறிவிப்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, April 3, 2025

அரசு பள்ளி மாணவர்களை JEE Advanced போட்டித் தேர்விற்கு தயார்படுத்துவதற்கான பயிற்சி அறிவிப்பு.

அரசு பள்ளி மாணவர்களை JEE Advanced போட்டித் தேர்விற்கு தயார்படுத்துவதற்கான பயிற்சி அறிவிப்பு.

பள்ளிக் கல்வித் துறை - அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடப்பாண்டில் 12-ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களில் JEE Advanced போட்டித் தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களை Hindusthan College of Science and Commerce, சென்னிமலை ரோடு, இங்கனூர், பெருந்துறை. ஈரோடு மாவட்டத்திற்கு - அனுப்புதல் குறித்த மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலர் கடிதம்.

JEE Mains போட்டித் தேர்வில் நடப்பாண்டில் 12 - ஆம் வகுப்பு பயின்ற அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமளவில் பங்கேற்று தேர்ச்சி பெற்றுள்ளனர் . இணைப்பில் கண்டுள்ள இம்மாணவர்கள் தங்களது மாவட்டங்களிலிருந்து JEE Advanced போட்டித் தேர்விற்கு தயார்படுத்துவதற்கான பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் . இம்மாணவர்கள் அனைவருக்கும் பயிற்சி முகாமானது கீழ்கண்ட முகவரியில் வருகின்ற 10.04.2025 அன்று காலை முதல் நடைபெறவுள்ளது,

எனவே , இம்மாணவர்களுக்கும் , அவர்களது பெற்றோர்களுக்கும் இத்தகவல்களை தெரிவித்து , இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஒப்புதல் கடிதத்துடன் மாணவர்களை ஏப்ரல் 09 - ஆம் தேதி மாலை 5 மணிக்குள் முகாமிற்கு வந்தடையுமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பயிற்சி முகாமிற்கு வரும் மாணவர்களுக்கான அனைத்து வசதிகளையும் அரசு மாதிரிப் பள்ளியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமிற்கு வருவதற்கான பயண ஏற்பாடுகள் அனைத்தையும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசு மாதிரிப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மேற்கொள்வார் . ஆகையால் மாணவர்களை தங்களது மாவட்டத்தில் உள்ள மாதிரிப் பள்ளியின் தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு முகாமிற்கு வருவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . பேருந்துகளின் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

CEO's Letter for JEE Advanced Training Program 24-25.pdf - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.