போக்சோ சட்டம்; பெற்றோருக்கும் விழிப்புணர்வு; ஆசிரியர்கள் வலியுறுத்தல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, February 14, 2025

போக்சோ சட்டம்; பெற்றோருக்கும் விழிப்புணர்வு; ஆசிரியர்கள் வலியுறுத்தல்



POCSO Act; Awareness for parents; Teachers urge - போக்சோ சட்டம்; பெற்றோருக்கும் விழிப்புணர்வு; ஆசிரியர்கள் வலியுறுத்தல்

சமூக நலத்துறையின் சார்பில், பள்ளி செல்லும் மாணவர்களின் பெற்றோருக்கும், குழந்தை திருமணம் மற்றும் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், சமூக நலத்துறை, சைல்டு லைன், குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில், மாணவர்களுக்கு பாலியல் வன்கொடுமைகள், குழந்தை திருமணம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள், அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும், போக்சோ சட்டம் குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

தற்போது கூடுதலாக ஆசிரியர்களுக்கும், பாலியல் கொடுமைகளால் மாணவர்கள் பாதிக்கப்படுவதும், தடுப்பதும் குறித்து, கல்வித்துறையின் சார்பில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களின் வாயிலாக கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இருப்பினும், குழந்தை திருமணங்கள் அதிகரித்த நிலையில் உள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:

மாணவர்களுக்கு பள்ளியில் இருக்கும் போது, நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் உட்பட பாலியல் ரீதியான கொடுமைகளிலிருந்து தற்காத்து கொள்வது வரை, விளக்கமளிக்கிறோம். குழந்தை திருமணம் செய்வதால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏற்படும் பாதிப்புகளையும் விளக்குகிறோம்.

ஆனால் மாணவியர் பலரும், பள்ளி படிப்பை பாதியில் விடுவது, திருமணம் செய்து கொண்டு தேர்வுக்கு மட்டுமே வருவது என இருக்கின்றனர்.

வளர் இளம் பருவத்தில் இருக்கும் மாணவர்களின், நடைமுறையில் மாற்றம் ஏற்படுவது குறித்து, பெற்றோருக்கும் விழிப்புணர்வு வேண்டும். குறிப்பாக மொபைல் போன் பயன்பாட்டினால், பல பிரச்னைகள் ஏற்படுகிறது.

ஆனால், பல வீடுகளிலும் அதை கண்டிப்பதில்லை. மாணவர்கள் தவறான வழிகளில் செல்வதால் வரும் பாதிப்புகளை, பெற்றோரும் உணர வேண்டும். குழந்தைகளை நல்வழியில் நடத்துவதற்கு, பெற்றோருக்கும் கூடுதல் விழிப்புணர்வு அவசியமாகிறது.

இவ்வாறு, தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.