பாண்டிச்சேரி - தீபாவளிக்கு முந்தைய நாள் அக்டோபர் 30 விடுமுறை என அறிவிப்பு
தீபாவளி முன்னிட்டு தமிழ்நாடு அரசு ஏற்கனவே நவம்பர் ஒன்றாம் தேதி அதாவது தீபாவளிக்கு மறுதினம் விடுமுறை என அறிவித்துள்ளது தற்போது தீபாவளி முன்னிட்டு அக்டோபர் 30ஆம் தேதி விடுமுறை என்று பாண்டிச்சேரி அரசு அறிவித்துள்ளது. தற்போது தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்களும் அக்டோபர் 30ஆம் தேதி அதாவது தீபாவளிக்கு முந்தைய நாள் விடுமுறை அறிவித்தால் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வர ஏதுவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்
தீபாவளி பண்டிகையையொட்டி, புதுச்சேரியில் தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 30ஆம் தேதியும் விடுமுறை
நவம்பர் 1ஆம் தேதி புதுச்சேரி விடுதலை நாள் என்பதால் ஏற்கனவே விடுமுறை
நவம்பர் 2ஆம் தேதி கல்லறை நாள், 3ஆம் தேதி ஞாயிற்று கிழமை என்பதால் விடுமுறை
மொத்தமாக அக்டோபர் 30ல் இருந்து நவம்பர் 3ஆம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.