தீபாவளிக்கு அடுத்த நாள் (01.11.2024) விடுமுறை - அரசாணை வெளியீடு Diwali G.O 453 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, October 21, 2024

தீபாவளிக்கு அடுத்த நாள் (01.11.2024) விடுமுறை - அரசாணை வெளியீடு Diwali G.O 453



தீபாவளி விடுமுறை - அரசாணை வெளியீடு.

தீபாவளி பண்டிகை 31.10.2024 வியாழக்கிழமை அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தீபாவளிக்கு அடுத்த நாள் 01.11.2024 வெள்ளிக் கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் , பொதுத்துறை நிறுவனங்கள் , பள்ளிகள் , கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது. ஆணை:-

*****

இவ்வாண்டு, 31.10.2024 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று விழாவினை மகிழ்வுடன் கொண்டாடி திரும்புவதற்கு ஏதுவாக, 01.11.2024 வெள்ளிக்கிழமை அன்று ஒருநாள் மட்டும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு பலதரப்பிலிருந்தும் கோரிக்கைகள் அரசுக்கு வரப்பெற்றன. 2. அக்கோரிக்கைகளை, அரசு கவனமுடன் பரிசீலித்து, தீபாவளிக்கு அடுத்த நாளான 01.11.2024 வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து, அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 09.11.2024 (சனிக்கிழமை) அன்று பணிநாளாக அறிவித்து ஆணை வெளியிடப்படுகிறது. 3. மேற்கண்ட உள்ளூர் விடுமுறை தினமானது செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instruments Act, 1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அவசர அலுவல்களை மேற்கொள்ளும் பொருட்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கருவூலங்கள், சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படுவதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD Diwali G.O 453 PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.