காலாண்டுத்தேர்வு விடுமுறை அறிவிப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, September 11, 2024

காலாண்டுத்தேர்வு விடுமுறை அறிவிப்பு!



காலாண்டுத்தேர்வு விடுமுறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, 6 - 10 வகுப்புகளுக்கான காலண்டு தேர்வு செப்.20ம் தேதி தொடங்குகிறது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி வேலைநாட்கள், தேர்வுகள், விடுமுறை உள்பட விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி 2018-ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது இந்நிலையில் காலாண்டு தேர்வு குறித்த அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, 6 - 10 வகுப்புகளுக்கான காலண்டு தேர்வு செப்.20ம் தேதி தொடங்குகிறது. செப்.20ம் தேதி தொடங்கும் தேர்வு 27ம் தேதி வரை நடைபெறுகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு 19ம் தேதி முதல் 27ம் தேதி வரை தேர்வுகள் நடக்கிறது.

தேர்வு நேரத்தை பொறுத்தவரை, 6ம் வகுப்புகளுக்கு காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையும், 7ம் வகுப்புகளுக்கு மதியம் 1.15 மணி முதல் 3.15 வரைம், 8ம் வகுப்புகளுக்கு 9.30 முதல் 12 மணி வரையும், 9ம் வகுப்புகளுக்கு 1.15 முதல் 4.30 மணி வரையும், 10ம் வகுப்புகளுக்கு காலை 9.30 மணி முதல் 12.45 வரையும் தேர்வு நடைபெறும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.