SMC Reconstitution EMIS Entry - SPD Proceedings
அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு மறுக்கட்டமைப்பு நிகழ்வு 4 கட்டங்களாக பார்வை -4 இல் உள்ளவாறு 10.08.2024 , 17.082024 , 24.08.2024 மற்றும் 31.08.2024 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது . தெரிவு செய்யப்படவிருக்கும் புதிய உறுப்பினர்களின் விவரங்களை EMIS இணையத்தளத்தில் உள்ள பள்ளி பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள உறுப்பினர் பதிவு பகுதியில் பதிவு செய்யப்பட வேண்டும்.
மாநிலத் திட்ட இயக்ககம், சென்னை-600 006
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி
ந.க.எண்:1342/A11/பமேகு/ஒபக/2024, நாள் /6/08/2024
பொருள்: பள்ளிக் கல்வித் துறை - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2024 2026-ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு -அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் புதிதாக தெரிவு செய்யப்படும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் விவரம் EMIS இல் பதிவேற்றம் செய்தல் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - சார்பு. பார்வை: -
1) அரசாணை (நிலை) எண்.144, பள்ளிக் கல்வித் (அகஇ2) துறை, நாள்: 28.06.2024,
2) மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண். 449/C7/ஒபக/பமேகு/2022, நாள்: 31.03.2022
3) மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண். 449/C7/ஒபக/பமேகு/2022, நாள்: 06.04.2022
4) மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்ந.க.எண். 1342/A11/பமேகு/ஒபக/2024,நாள்: 16.07.2024, 30.07.2024
*** *** ***
பார்வை-1இல் காண் அரசாணையின்படி அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு மறுக்கட்டமைப்பு நிகழ்வு 4 கட்டங்களாக பார்வை-4இல் உள்ளவாறு 10.08.2024, 17.08.2024, 24.08.2024 மற்றும் 31.08.2024 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது . தெரிவு செய்யப்படவிருக்கும் புதிய உறுப்பினர்களின் விவரங்களை EMIS இணையத்தளத்தில் உள்ள பள்ளி பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள உறுப்பினர் பதிவு பகுதியில் பதிவு செய்யப்பட வேண்டும்.
புதிய உறுப்பினர்கள் விவரங்களைப் பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்கள்:
பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வில் பங்கேற்றுத் தெரிவு செய்யப்படும் புதிய உறுப்பினர்களின் விவரங்கள் EMIS இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். EMIS Website →→→ School Login →→→ SMC Reconstitution 2024-26
EMIS இணையத்தளத்தில் புதிய உறுப்பினர்களை உள்ளீடு செய்வதற்கான விளக்கக் காணொளி QR code மற்றும் Link வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
https://bit.ly/membersdataentry bitly * ஒவ்வொரு உறுப்பினர்களாக அதிகபட்சம் 24 நபர்கள் வரை பதிவு செய்ய வேண்டும்.
உறுப்பினர்களின் ஆதார் எண்ணை முறையாக சேகரித்து உள்ளீடு செய்யவேண்டும்.
* தலைமை ஆசிரியர் இல்லாத பள்ளிகளில் பொறுப்பு ஆசிரியர் இந்தப் பணியினை மேற்கொள்ள வேண்டும்.
உறுப்பினரின் தொலைபேசி எண் மற்றும் WhatsApp எண்ணை உள்ளீடு செய்யவேண்டும்.
❖ WhatsApp 67 GODT எண் இல்லாத உறுப்பினருக்கு அவரது குடும்ப உறுப்பினரின் WhatsApp எண்ணை பதிவு செய்யலாம்.
* 24 உறுப்பினர்களின் தகவலையும் பதிவு செய்த பின், உள்ளீடு செய்த விவரங்கள் காண்பிக்கப்படும். திருத்தங்கள் ஏதேனும் தேவை இருப்பின் மறுகட்டமைப்பு நிறைவுற்ற ஒருவார காலத்திற்குள் திருத்தங்கள் மேற்கொள்ளும் வசதி (Edit Option) வழங்கப்படும்.
* நான்கு கட்டகளாக நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு வாயிலாக தெரிவு செய்யப்படும் புதிய உறுப்பினர்கள் விவரங்களை கீழ் கண்டுள்ள கால அட்டவனைப்படி EMIS இல் பதிவு செய்யவேண்டும். 2 EMIS பதிவு வ. எண் மறுகட்டமைப்பு பள்ளிகளின் எண்ணிக்கை மறுகட்டமைப்பு செய்ய நாள் கடைசி நாள் முதல் 50% தொடக்கப் 1 12117 10.08.2024 23.08.2024 பள்ளிகள் மீதமுள்ள 50% 2 11924 17.08.2024 23.08.2024 தொடக்கப் பள்ளிகள் உயர்நிலை, 3 6152 24.08.2024 30.08.2024 மேல்நிலைப் பள்ளிகள் 4 நடுநிலைப் பள்ளிகள் 6868 31.08.2024 06.09.2024 கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மேற்காண் அட்டவணையில் உள்ளபடி EMISஇல் புதிய உறுப்பினர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்ய அரசு தொடக்க நிலை, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு மாவட்ட முதன்மைக் கல்வி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அலுவலர்கள் மாநிலத் திட்ட இயக்குநருக்காக 1409124 பெறுநர்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (அனைத்து மாவட்டங்கள்) 3 நகல் அனுப்பப்படுகிறது.
ந.க.எண்: 805 / மா.ஒ.6/ ஒபக/ 2024 நாள்: .08.2024 பார்வையில் காணும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் தகவலின் பொருட்டும், தக்க நடவடிக்கை எடுக்கும் பொருட்டும் அனைத்து அரசு தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு அனுப்பப்படுகிறது.
மேலும், இணைப்பில் கண்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி அட்டவணையில் உள்ளவாறு EMISல் பள்ளி மேலாண்மைக்குழு புதிய உறுப்பினர்களின் விபரங்களை பதிவேற்றம் செய்திட அனைத்து அரசு தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், பதிவேற்றம் செய்யப்படும் விபரங்களை கண்காணித்திட சம்மந்தப்பட்ட வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள்(பொ)/ ஆசிரியர் பயிற்றுநர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு: மாநில திட்ட இயக்குநர் அவர்களின் கடிதம்.
பெறுநர்
முதன்மைக் கல்வி அலுவகள்
முதன்மைக் கல்வி அலுவலருக்காக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, 16/8/24 தஞ்சாவூர்.
தலைமையாசிரியரகள், அனைத்து அரசு தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகள்.
நகல்: மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை), தஞ்சாவூர்/ கும்பகோணம்.
நகல்: மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கநிலை), தஞ்சாவூர்/ பட்டுக்கோட்டை.
நகல்: அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள்.
நகல்: அனைத்து வட்டார வள மேற்பார்வையாளர்கள்(பொ). SMC - புதிய உறுப்பினர்கள் விவரங்களைப் பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்கள் :
SMC Reconstitution EMIS Entry - SPD Proceedings👇👇👇
CLICK HERE TO DOWNLOAD PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.