தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 லிருந்து 62 ஆக உயர்வா? - உண்மை என்ன?
அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62ஆக உயர்த்தப் போவதாக வெளியான தகவல் வதந்தி என்று தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது வரை அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60ஆக உள்ளது. இதனை 62ஆக உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தலைமை செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது இதன்படி, இன்னும் 15 நாட்களில் அரசாணை வெளியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் பரவின. இது குறித்து மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ள உண்மை கண்டறியும் குழு, துறைசார்ந்த அதிகாரிகளிடம் விளக்கம் பெற்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62ஆக உயர்த்த எந்த தீர்மானமும் நிறைவேற்றவில்லை என்றும், அப்படியான ஆலோசனைகள் ஏதும் இல்லை என்றும் தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கியுள்ளது.
அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60ல் இருந்து 62ஆக உயர்த்தப்போவதாக பரவும் தகவல் வெறும் வதந்தியே! ஓய்வு வயதை 62ஆக உயர்த்த எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை.
எந்த ஆலோசனையும் இல்லை என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.