SMC - பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு - நிதி விடுவித்தல் - SPD Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 31, 2024

SMC - பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு - நிதி விடுவித்தல் - SPD Proceedings



SMC - பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு - நிதி விடுவித்தல் - SPD Proceedings

பள்ளிக் கல்வித் துறை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி -2024 2026 - ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைபெறுதல் வழிகாட்டு நெறிமுறைகள் - நிதிவிடுவித்தல் - சார்பு SPD Proceedings

குழந்தைகளின் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 மற்றும் தமிழ்நாடு குழந்தைகளின் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிகள், 2011 அடிப்படையில் அனைத்து வகை அரசு தொடக்கநிலை, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2022ஆம் ஆண்டில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போதைய உறுப்பினர்களின் பதவிக் காலம் 2024ஆம் ஆண்டு நிறைவடையும் நிலையில் பார்வை-1இல் காண் அரசாணையில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாவட்டங்களில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளிகள் (NSCBAV/KGBV/பழங்குடியினர் நலத்துறைப் பள்ளிகள்/வனத்துறைப் பள்ளிகள் தவிர ஏனைய அனைத்துவகை அரசுப் பள்ளிகளிலும் 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 2024-2026ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழுவிற்கு உறுப்பினர்களைக் கொண்டு மறுகட்டமைப்பு செய்யப்படவுள்ளது.

(அ) பெற்றோர்கள் விழிப்புணர்வுக் கூட்டத்திற்கான வழிகாட்டுதல்கள்:

புதிய பார்வை-4இன்படி முதற்கட்டமாக மாநிலம் தழுவிய பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு சார்ந்து பெற்றோருக்கான விழிப்புணர்வுக் கூட்டம் 02.08.2024, வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடத்தப்பட வேண்டும்.

பார்வை-1இல் காண் அரசாணை பக்கம்-17 மற்றும் 18, வரிசை-4-ன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இதற்கான அழைப்பிதழை மாணவர்களின் பெற்றோர்களுக்கு 31.07.2024 புதன்கிழமைக்குள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மூலம், புலனக் குழுச் (வாட்சப்) செய்திகள், துண்டுப் பிரசுரங்கள் மூலமாக தலைமையாசிரியர்கள் அனுப்பி வைக்க வேண்டும்.

மாவட்ட மேலும், பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டத்தை பள்ளியின் தலைமையாசிரியர் தலைமையில் பள்ளி மேலாண்மைக் குழுவின் தற்போதைய உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் கருத்தாளர்கள் இணைந்து பள்ளி மேலாண்மைக் குழுவின் முக்கியத்துவம், பெற்றோர்கள் மறுகட்டமைப்புக் கூட்டத்தில் பங்கு கொள்வதின் அவசியம், மறுகட்டமைப்பு நடைமுறைகள், அதன் செயல்பாடுகள், உறுப்பினர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள் குறித்து விழிப்புணர்வு வழங்க வேண்டும். இந்த விழிப்புணர்வு கூட்டதில் பங்கேற்கும் பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரது வருகை பதிவு விவரத்தினை பெற்றோர் கூட்டம் நடைபெறும் 02.08.2024 அன்று மட்டுமே பெற்றோர் செயலியில், தலைமை ஆசிரியர் பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்செயலியில் பதிவு செய்வதற்கான வழிமுறைகள் பின்வருமாறு..

. Login to "TNSED Parent" App > Open "பெற்றோர் விழிப்புணர்வு கூட்ட வருகைப் பதிவு” பள்ளத் விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்கும் ஆண் மற்றும் பெண் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை பதிவிட வேண்டும். இந்நிகழ்வின் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைத்து வகை அரசுப் தலைமையாசிரியர்கள் தங்களுடைய பள்ளியில் பயிலும் புரிவதை மாணவர்களின் பெற்றோர்கள் கூட்டத்திற்கு வருகை உறுதிசெய்திட அறிவுறுத்துமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

(ஆ) பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு நிகழ்வு - திருத்தப்பட்டக் கால அட்டவணை

பார்வை-1இல் காண் அரசாணையின்படி மாநிலம் தழுவிய பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு குழு மறுகட்டமைப்பு நிகழ்வானது பார்வை-4-இன்படி கீழ்காண் திருத்தப்பட்டக் கால அட்டவணையில் உள்ளவாறு நடத்திட சார்ந்த பள்ளிகளுக்கு அறிவுறுத்திட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாவட்ட வாரியாக பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு செய்யப்பட வேண்டிய பள்ளிகளின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ள Drive Link மற்றும் QR Code ஸ்கேன் செய்து நான்கு கட்டங்களுக்குமானப் பள்ளிகள் பட்டியலைப் பதிவிறக்கம் செய்து அதன்படி மறுகட்டமைப்பு நிகழ்வை மேற்கொள்ள வேண்டும்.

மறுகட்டமைப்பு செய்யப்பட வேண்டிய பள்ளிகளின் பட்டியல் (Phase Wise)

Drive Link

https://bit.ly/schoolstobereconstituted

QR Code

Thilly பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு சார்ந்த வழிகாட்டுதல்கள் குழு இருந்து பள்ளியின் தலைமையாசிரியரே பள்ளி மேலாண்மைக் மறுகட்டமைப்பு நிகழ்வை நடத்தும் அலுவலராக செயல்படவேண்டும். எந்தவொரு உறுப்பினரையும் தலைமையாசிரியர் தன்விருப்பத்தின்படி நியமிக்க இயலாது.

பார்வை-1இல் காணும் அரசாணையில் கண்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்றி பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வுகளை மேற்காண் திருத்தப்பட்டக் கால அட்டவணையில் உள்ளவாறு சார்ந்த நாட்களில் காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை நடத்திட அனைத்து அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்கள் வேண்டும்.

அறிவுறுத்திட நீட்டித்துக்கொள்ளலாம்.) (தேவைப்படின் நேரத்தை பார்வை-1இல் காண் அரசாணை பக்கம்-10, வரிசை 3-இல் உள்ள பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் விவரத்தில் (அட்டவணை-1) பெற்றோர் உறுப்பினர் எண்ணிக்கையினை பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் உறுதிசெய்ய முடியாத நேர்வுகளில் பார்வை- 2இல் காணும் மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகளின்படி, அதாவது,



“பள்ளியில் மாணவர் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தால் பள்ளி மேலாண்மைக் குழுவில் பெற்றோர்களின் எண்ணிக்கையை சூழலுக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.”

காண் அரசாணை பக்கம்-12,

வரிசை-12இல் > பார்வை-1இல் சொல்லப்பட்டுள்ள "உள்ளாட்சிப் பிரதிநிதி” உறுப்பினர்கள் தேர்வில் பார்வை-2இல் காண் மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகளில் உள்ள விளக்கம் கடைபிடிக்கப்பட வேண்டும். அதாவது,

"நகர்ப்புறங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளின் வார்டு எல்லைக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளிகள் இருந்தால், அந்தப் பிரதிநிதி அவரின் வார்டு எல்லைக்குள் அமைந்துள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளின் பள்ளி மேலாண்மைக் குழுக்களில் உறுப்பினராக இருக்க அனுமதிக்கப்படுவர்.”

பார்வை-1இல் காண் அரசாணை பக்கம் - 24, அட்டவணை-7இல் சொல்லப்பட்டுள்ள தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் (Proportional Representation) பார்வை- 3இல் காண் மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகளில் உள்ளவாறு கடைபிடிக்கப்பட வேண்டும். அதாவது, “பள்ளிகளில் இறுதி வகுப்பு தொடக்கப் பள்ளிகளில் 5ஆம் வகுப்பு, நடுநிலைப் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு, உயர்நிலைப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு, மேல்நிலைப் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பெற்றோர்களைப் பள்ளி மேலாண்மைக் குழுவில் உறுப்பினராக தெரிவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இத்தகைய பெற்றோர்கள் பள்ளி மேலாண்மைக் குழுவில் தெரிவு செய்யப்பட்டால் பள்ளி மேலாண்மைக் குழுவில் அதன் ஆயுட்காலமான இரண்டு ஆண்டுகள் அவர்கள் முழுமையாகப் பணியாற்ற இயலாது. இத்தகைய பெற்றோர்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு தங்களின் பங்களிப்பை பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் என்ற நிலையைத் தவிர்த்து மற்ற நிலைகளில் அளிக்கலாம்."

மறு கட்டமைப்பு நிகழ்வு நாளன்று இணைப்பு-1-இல் கொடுக்கப்பட்டுள்ள படிவம்-1 முதல் படிவம்-7 வரை முறையாகப் பூர்த்தி செய்து ஆவணப்படுத்த வேண்டும்.

தெரிவு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் இணைந்து இணைப்பு-1- கொடுக்கப்பட்டுள்ள உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இறுதி நிகழ்வாக தெரிவு செய்யப்பட்ட அனைத்து பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினார்களுக்கும், உறுப்பினர் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.

(ஈ) தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் விவரங்களை EMIS தளத்தில் பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்கள்.

மறுகட்டமைப்பு நாளன்று பள்ளிக்கு வருகைதரும் பெற்றோர்களின் மொத்த (ஆண், பெண்) எண்ணிக்கையினை பெற்றோர் செயலியில் (TNSED Parent App) தலைமையாசிரியர் பதிவு செய்யும்வகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. வருகைப் பதிவு செய்வதற்கான வழிமுறைகள் பின்வருமாறு... • Login to "TNSED Parent” App (பெற்றோர் செயலி)

Open "பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நாள் வருகைப் பதிவு"

• மறுகட்டமைப்பு நிகழ்வில் பங்கேற்கும் ஆண் மற்றும் பெண் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை பதிவிட வேண்டும்.

> புதிய உறுப்பினர்களின் விவரங்களை மறுகட்டமைப்பு நிகழ்வு நிறைவடைந்த ஏழு நாட்களுக்குள் https://tnemis.tnschools.gov.in இணையதளத்தில் இருக்கும் Reconstitution Module - இல் கொடுக்கப் பட்டுள்ள படிவத்தில் கேட்கப்பட்டுள்ளத் தகவல்களை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்.

> மொத்த உறுப்பினர்கள் (அதிகபட்சம் 24 உறுப்பினர்கள்) அனைவரது விவரத்தையும் பதிவு செய்த பிறகே இறுதி சமர்பிப்பு (Final Submit) செய்ய வேண்டும்.

(உ) பெற்றோர்கள் விழிப்புணர்வுக் கூட்டம் மற்றும் மறுகட்டமைப்பு நிகழ்வு சார்ந்த செலவினங்களுக்கான வழிகாட்டுதல்கள் * ஆகஸ்ட் 02ஆம் தேதி நடைபெறும் பெற்றோர்கள் விழிப்புணர்வுக் கூட்ட அழைப்பிதழ் மற்றும் மறுகட்டமைப்பு நிகழ்வு நாளன்று பெற்றோர்களின் உத்தேச வருகை சார்ந்து, பள்ளிகளின் எண்ணிக்கை சார்ந்து அனைத்து மாவட்டங்களிலும் இச்செயல்பாட்டிற்காக பள்ளி வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள நிதி அடிப்படையில் செலவினங்களை கீழ்க்கண்டவாறு மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. வ. நிகழ்விற்கான உத்தேச செலவினத் தொகை மொத்தம் ரூ.3,48,58,871/- (ரூபாய் மூன்று கோடியே நாற்பத்து எட்டு இலட்சத்து ஐம்பத்து எட்டாயிரத்து எண்னூற்று எழுபத்து ஒன்று மட்டும்)-யினை சார்ந்த மாவட்டங்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வங்கிக் கணக்கிற்கு (இணைப்பு 3) விடுவிக்கப்படுகின்றது. செலவினங்களை பள்ளியளவில் மேற்கொள்ளும் வகையில் இணைப்பு 2 -இல் உள்ளவாறு சார்ந்த பள்ளிகளுக்கு உடனடியாக விடுவிக்க அனைத்து மாவட்ட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர்கள் விழிப்புணர்வுக் கூட்டங்கள் மற்றும் மறுகட்டமைப்பு நிகழ்வு நடைமுறைகளை மாவட்டக் கள அலுவலர்கள் (DEO's, APO's, BEO's, DC's, SUPERVISOR's, BRTE's,) ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்திப் பள்ளிகளைப் பார்வையிட்டுப் புகைப்படத்துடன் கூடியத் தொகுப்பு அறிக்கையை மாநிலத் திட்ட இயக்ககத்திற்கு அனுப்பி வைத்திட வேண்டும்.

* நான்கு கட்டங்களாக

நடைபெறும் மறுகட்டமைப்பு நிகழ்வு சார்ந்த புகைப்படங்கள் மற்றும் அறிக்கையினை https://bit.ly/phasewisedocumentation என்கிற லிங்க் வாயிலாக அந்தந்த மாவட்டங்களுக்கான Folder -இல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

* மறுகட்டமைப்பு நிகழ்வு நடைபெறும் புகைப்படம், தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் குழுப் புகைப்படம், உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் புகைப்படம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தெளிவான தெரிவு செய்யப்பட்ட புகைப்படங்களை மட்டும் (5-10 Photos/District/Phase மிகாமல்) பதிவேற்றம் செய்ய வேண்டும். பார்வையாளர்கள் பள்ளி மேலாண்மைக் நிகழ்வன்று பார்வையாளர்களுக்கான குழு மறுகட்டமைப்பு வழிகாட்டுதல்கள் அடிப்படையில் நிகழ்வில் கலந்துகொண்டு பார்வையாளர்களுக்கான Google Form படிவத்தினை சமர்பிக்க வேண்டும். * பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வன்று, மறுகட்டமைப்பு நடைமுறைகள் சார்ந்த சந்தேகங்கள் வழிமுறைகள், விளக்கங்களுக்கு பார்வை-1, பார்வை-2 மற்றும் பார்வை-3இல் குறிப்பிடப்பட்டுள்ள அரசாணை மற்றும் மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களே இறுதியானதாகும். * மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் பள்ளிக் கல்வித் துறையின் அழைப்பு மைய (Call Centre) எண் - 14417-ஐ தொடர்பு கொள்ளவும்.

* பள்ளிக் கல்வித் துறையின் அழைப்பு மையம் மறுகட்டமைப்பு நிகழ்வு தொடங்கும் 10.08.2024-க்கு ஒருவாரம் முன்னாதாக செயல்படத் தொடங்கும்.

பார்வை-1இல் காண் அரசாணையில் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள், பார்வை-2 மற்றும் பார்வை-3இல் கண்டுள்ள மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகளைப் பின்பற்றி 02.08.2024 அன்று நடைபெறும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் மற்றும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ள மறுகட்டமைப்பு நிகழ்வுகளைத் திட்டமிட்டு எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காதவாறு சிறப்பாக நடத்திட தலைமையாசிரியர்களுக்கும், மாவட்டக் கள் அலுவலர்களுக்கும் (DEO's, APO's, BEO's, DC's, SUPERVISOR's, BRTE's) அறிவுறுத்திட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு:

1. மறுகட்டமைப்பு நிகழ்வன்று பூர்த்தி செய்ய வேண்டிய படிவங்கள், சான்றிதழ் ( படிவம்-1 முதல் 7 வரை, உறுதிமொழி மற்றும் மாதிரி உறுப்பினர் சான்றிதழ்)

2. மாவட்டங்களுக்கான (பள்ளிகள் வாரியாக) உத்தேச மின்னஞ்சல் செலவினங்களுக்கான நிதி விடுவிப்பு விவரம்

வாயிலாக.

3. மாவட்டங்களுக்கு விடுவிக்கப்படும் வங்கிக்கணக்கு விவரம்

CLICK HERE TO DOWNLOAD fund Proceedings - SMC Reconstitution including budget & Annexures PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.