மாவட்ட மாறுதலில் உள் மாவட்ட காலிப்பணியிடங்களையும் காண்பிக்க ஆசிரியர்கள் கோரிக்கை
நாளை முதல் ( 12.07.2024 ) நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்ட கலந்தாய்வில் சென்ற ஆண்டு காண்பித்ததுபோல் இந்த ஆண்டும் உள் மாவட்ட காலிப்பணியிடங்களையும் காண்பிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறைக்கு ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் உள் மாவட்ட பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களையும் ஆசிரியர்கள் தேர்வு செய்ய ஒரு வாய்ப்பு கிடைக்கும். சென்ற ஆண்டு இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் பெரும்பான்மையான ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ளனர். எனவே பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களது கோரிக்கையினை பரிசீலனை செய்ய வேண்டும் கருத்து தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.