டிக்டோஜாக் தீர்மானம் - 14.07.2024
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) 14.07.2024
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜாக் பேரமைப்பின் மாநில அளவிலான ஆலோசனைக்குழுக் கூட்டம் 14.07.2024 அன்று முற்பகல் 11 மணிக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளரும், டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினருமாகிய ச.மயில் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் ஈ.ராஜேந்திரன், கே.பி.ரக் ஷித், ஆ.வின்சென்ட் பால்ராஜ், இரா.தாஸ், சி.சேகர், இல.தியோடர் ராபின்சன், மன்றம் நா.சண்முகநாதன், வி.எஸ்.முத்துராமசாமி, கோ.காமராஜ், சி.ஜெகநாதன், டி.ஆர்.ஜான் வெஸ்லி ஆகியோர் உட்பட டிட்டோஜாக் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், டிட்டோஜாக் இணைப்பு சங்கங்களின் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. தீர்மானம் எண்: 1
60 ஆண்டுகாலமாக தொடக்கக்கல்வித்துறையில் நடைமுறையில் இருந்து வந்த ஒன்றிய முன்னுரிமையினை மாநில முன்னுரிமையாக மாற்றியமைத்து மாணவர் நலன், கல்வி நலன், பள்ளிகள் நலன்களைப் பாதிக்கும் வகையிலும், 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை குறிப்பாக பெண்ணாசிரியர்களின் பதிவு உயர்வினைப் பறிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண்: 243 நாள்: 21.12.2023 ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியினையும், எதிர்ப்பினையும் பெற்றுள்ளதைக் கருத்தில் கொண்டு அரசாணை 243ஐ உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தியும்,
ஊதிய இழப்பால் 18 ஆண்டுகாலமாக வஞ்சிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு 01.06.2008 முதல் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிட வலியுறுத்தியும்,
+தேர்தல் கால வாக்குறுதிப்படி தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும்,
* டிட்டோஜாக் பேரமைப்புடன் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் 12.10.2023 அன்று நடத்திய பேச்சு வார்த்தையில் ஏற்றுக்கொண்ட 12 அம்சக் கோரிக்கைகள் மீது விரைந்து ஆணைகள் வெளியிட வலியுறுத்தியும்,
+முடக்கப்பட்ட சரண் விடுப்பு மீண்டும் அனுமதிக்க வேண்டும், உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் பழைய முறைப்படி மீண்டும் வழங்கிட வலியுறுத்தியும்,
மேற்கண்ட கோரிக்கைகளை உள்ளடக்கிய டிட்டோஜாக் பேரமைப்பின் 31 அம்சக் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வலியுறுத்தி 29.07.2024, 80.07.2024, 31.07.2024 ஆகிய மூன்று நாட்கள் சென்னையில் பேராசிரியர் அன்பழகனார் ஒருங்கிணைந்த கல்வி வளாகமான டி.பி.ஐ வளாகத்தை டிட்டோஜாக் சார்பில் மாநிலம் முழுதுமிருந்து பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களைத் திரட்டி தொடர் முற்றுகைப் போராட்டத்தை தீர்மானிக்கப்பட்டது. தீர்மானம் எண்: 2
04.07.2024 அன்று சென்னையில் நடைபெற்ற டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்தபடி 31.07.2024 வரை தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் டிட்டோஜாக்கின் 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுவது என ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.