ஆசிரியர்களை தரக்குறைவாக பேசிய விரிவுரையாளர் மீது துறை ரீதியாக நடவடிக்கை
ஆசிரியர்களை தரக்குறைவாக பேசிய விரிவுரையாளர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்து காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் அவர்கள் உத்தரவு காஞ்சிபுரம், மாவட்டம், களியாம்பூண்டி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் விரிவுரையாளராகப் பணிபுரியும் திரு.கோ. கந்தவேல் என்பாருக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி சார்ந்து ஒருங்கிணைப்பாளராக செயல்பட திருப்பெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஆகிய இரண்டு ஒன்றியங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கருத்தாளர்கள் பயிற்சி சார் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான புலனக் குழு உருவாக்கப்பட்டது. அக்குழுவில் பயிற்சியில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு பயிற்சியின் முதல் நாள் முடிவுற்ற நிலையில் அன்றைய இரவு மேற்கண்ட புலன குழுவில் (whatsapp) ஆசிரியர்களின் மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில், ஆசிரியர்களை தரக்குறைவாக, பேசி பதிவிட்டுள்ளார். அன்னாரின் ஆடியோ செய்தி ஆசிரியர்கள் மத்தியில் பரவி இன்று (28.06.2024) பயிற்சியினை மேற்கொள்ள இயலாத நிலையில் ஆசிரியர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. அன்னார் மேல் துறைசார்ந்த நடவடிக்கை மேற்கொள்ள பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.