அரசு பள்ளியில் மயங்கி விழுந்து மாணவி மரணம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, June 28, 2024

அரசு பள்ளியில் மயங்கி விழுந்து மாணவி மரணம்அரசு பள்ளியில் மயங்கி விழுந்து மாணவி மரணம்

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டியை சேர்ந்தவர் சண்முகம். அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவரது மகள் தனிஷ்கா(11). ஆர்.புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை தனிஷ்கா வகுப்பறையில் அமர்ந்திருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த சக மாணவிகள், ஆசிரியர்கள் அவரைமீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், தனிஷ்கா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தியதில், சிறு வயதில் இருந்தே மாணவிக்கு இதய கோளாறு இருந்தது தெரியவந்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.